jump to navigation

ஓட்டுப் போடுங்க Friday April 14, 2006

Posted by Pari(பரி) in பொது.
trackback

மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்து http://www.indibloggies.org/ இந்திய வலைப்பதிவர்களுக்கான போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறது. இது இந்தியர்கள்(உலகலாவிய)ஆங்கிலத்தில் பதியும் பதிவுகளுக்கு முக்கியத்துவம் தந்தது. இந்திய மொழிகளில் உள்ள வலைப்பதிவுகளுக்குத் தனி அங்கம் இருந்தாலும் அவ்வளவு முக்கியத்துவிம் தரப்படவில்லை. ஒரு தன்னார்வலத் தனிக்குழுவால் வடிவாக்கப்பட்டதால் இருக்கலாம். இருந்தும் சென்ற முறை தமிழ்ப் பதிவர்கள் கணிசமான அளவில் கலந்துகொண்டது ஒரு முன்னேற்றம்.

மைக்ரோஸாஃப்ட் இந்தியா இந்திய மொழிகளுக்கென தனியாக ஒரு துறை ஒதுக்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்திய மொழி வலைப்பதிவுகளுக்கு பிரத்தியோகமான போட்டி ஒன்றை முன்பு அறிவித்தார்கள். ஓட்டுப் போடக் கடைசி நாள்: மே 5

சுட்டுக: http://www.bhashaindia.com/contests/iba/
யாருக்கு ஓட்டுப் போடுவது?

  • “நமக்கு நாமே” திட்டப்படி உங்களுக்கு நீங்களே ஓட்டுப் போடலாம்.
  • உங்கள் அபிமான வலைப்பதிவுக்கு ஓட்டுப் போடலாம்
  • அல்லது இரண்டையுமே செய்யலாம்
  • அதாவது மூன்று தனித்தனி தலைப்புகளில் மூன்று பதிவுகளுக்கு நீங்கள் ஓட்டுப்போடலாம்.

எப்படி ஓட்டுப்போடுவது?
http://www.bhashaindia.com/contests/iba/ இங்கே போய் போடுங்கள். உங்கள் பெயர்,முகவரி,பிறந்த தேதி எல்லாம் கொடுக்கத் தயக்கமாக இருந்தால் எதாவது டுபாக்கூர் தகவலைத் தரலாம், ஆனால் மின்னஞ்சல் முகவரியை மட்டும் சரியாகக் கொடுக்கவும். நாளை நீங்கள் வெற்றி பெற்றால் மின்னஞ்சலில் தான் தகவல் வரும். பரிசைப் பெற, உண்மையான முகவரியை அப்போது கொடுக்கலாம் 🙂

இது முழுக்க முழுக்க வலைப்பதிவர்கள்/வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் தேர்தல். மைக்ரோஸாஃப்ட் போன்ற பெரிய நிறுவனம் நடத்துவதால் இணையத்தில் பிரபலமான வார்த்தையான ‘உள்குத்து’க்கு வேலை இருக்காது என்று நம்பலாம்.இரண்டாண்டுகளுக்கு முன் indibloggies தேர்தல் நடந்த சமயத்தில் தமிழ்ப்பதிவுகளுக்கான அங்கீகாரம் பற்றிக் கேள்வி கேட்டவன் என்ற முறையில் இதைத் தெரிவிப்பது என் கடமையாகிறது(டேய், அடங்குடா!).

ஆகவே, தமிழ்ப்புத்தாண்டு வடை பாயாசம் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ப்பதிவர்கள்/வாசகர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் வாக்களித்து, தமிழ்ப்பதிவுகளின் பிரபலத்தை முன்னெடுத்துச் செல்லக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பி.கு: இது குறித்த பத்ரியின் பதிவையும் மற்றவர்கள் பதிந்திருந்தால் அதையும் தேடி எடுத்து இணைக்கப் பொறுமை இல்லை 🙂
தமிழ்ப்பதிவுகள் | தேர்தல்

Advertisements

Comments

1. கில்லி - Gilli» Blog Archive » Indic Blogs Award, A Reminder - Friday April 14, 2006

[…] மைக்ரோச·ப்டின் bhashaindia.com, இந்திய மொழி வலைப்பதிவுகளுக்கான தேர்தல் நடத்த இருப்பது ஞாபகம் இருக்கா? மறக்காம ஓட்டு போடுங்க என்று நினைவூட்டுகிறார் பரிமேலழகர் You can leave a response, or trackback from your own site. RSS 2.0 […]


Sorry comments are closed for this entry

%d bloggers like this: