jump to navigation

விண்டோஸ் லைவ்(Windows Live) Wednesday March 8, 2006

Posted by Pari(பரி) in பொது.
trackback

கூகுள் இல்லாமல் இணைய வாழ்க்கை இல்லை என்று ஆகிவிட்டது. வால் ஸ்ட்ரீட்டின் செல்லப் பிள்ளையாக பணத்தில் மிதக்கிறது கூகுள. அந்தப் பணத்தை தானும் பங்கு போட வேண்டும் என்று யாஹூவும் மைக்ரோசாஃப்டும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி மைக்ரோசாஃப்ட் பிழிந்த ரசம்தான் விண்டோஸ் லைவ். Ajax என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு “படுத்தி”யிருக்கிறார்கள். தேடல் முடிவுகளிலிருந்து தேட இன்னொரு சேவை தேவைப்படுகிறது. 13” டிவி திரை மாதிரி குட்டித் திரையில் தேடல் முடிவுகளைக் காட்டுவது ‘அறிவுபூர்வமான’ வடிவமைப்பு. கழிவறைத் தாள் சுருளில் எழுதிப் படிப்பதுபோல் இருக்கிறது.
கொசுறு: கூகுளில் microsoft என்றும் msn search/live-ல் google என்றும் தேடி வலப்பக்கம் வரும் விளம்பரங்களை கவனிக்க.

விண்டோஸ் லைவ் நுட்பம் தமிழ்ப்பதிவுகள்

Advertisements

Comments

1. வெங்கட் - Wednesday March 8, 2006

ராசா, வா ராசா சௌக்கியமா இருக்கியா? கண்ணு பூத்துப் போச்சு ராசா 🙂

லைவ் ஆமை வேகம். ரிசல்ட் வந்தப்புறம் நடுவிரலால மௌவ்ஸ் ஸ்க்ராலை ஓட்டி ஓட்டி வெரல் காச்சுப் போயிடிச்சு.

எனக்கென்னமோ ஆவுறதில்லைன்னுதான் தோனுது.

2. Karthik - Wednesday March 8, 2006

Have you tried local.live.com? I like it.

3. Karthik - Wednesday March 8, 2006

Try ‘Bird’s Eye’ view. Good one.

4. பரி - Wednesday March 8, 2006

அட …குருத….

அதுக்குள்ளாற ஒரு வருஷம் ஆயிடுச்சா..?? 😉

5. மூக்கு சுந்தர் - Wednesday March 8, 2006

சாரி..சாரி, பரி பரி,

முந்தின கமெண்ட் என்னோடது.

கமெண்ட்ல போடவேண்டிய முதல் லைனை நேம் ஃபீல்டுல போட்டுட்டேன்.

அது வேற, யாராவது நானும், நீங்களும் ஒங்க பேரைக் கெடுத்துட போறாய்ங்க..!!!!

6. Pari - Thursday March 9, 2006

வெங்கட:, நல்ல (தொப்பை) சௌக்கியம் 🙂
கார்த்திக்: பார்க்கிறேன்
மூக்கரே, என்ன மப்பா? 🙂
பேரக் கெடுக்க நான் என்ன விஐபி-யா? அதுக்கெல்லாம் கவலப்படுறதில்ல 🙂

7. MKBala. - Saturday March 11, 2006

Windows live so pathetic and buggy. I wonder if they even cared to perform sampling with random customers for feedback during the design of this product. I would have expected a better Beta quality atleast to respect the world’s Richest person.

8. உமாபதி - Saturday May 13, 2006

தமிழ் விக்கிப்பீடியாவிலும் விண்டோஸ் லோக்கல் லைவ் பற்றிக் கட்டுரை ஒன்றுள்ளது http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%28Windows_Live_Local%29 ஐப்பார்க்கவும் இது தவிர எனது பிளாக்கிலும் கட்டுரை ஓன்று எழுதியுள்ளேன் பார்க்க http://umapathy.blogspot.com


Sorry comments are closed for this entry

%d bloggers like this: