jump to navigation

மெகா சீரியல்கள் Friday December 16, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

சென்ற மாதம் ஒரு மூன்று நாட்கள் “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” புகழ் சன் டிவியைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
முன்பொரு காலத்தில்(’97) பெங்களூரில் ரிமோட் இல்லாத 14இன்ச் கருப்பு-வெள்ளை டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தோம். சாப்பிட்டு விட்டுத் தூங்குவதற்கு முன்னால் டிவி போட்டால் சக்தி என்ற மெகா சீரியல் ஓடிக் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சுகமாக தூக்கம் வரும்; அவ்வளவு விறுவிறுப்பு. கதை என்று சொல்லப் போனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த கதை தான். வீட்டில் “குத்து விளக்கு” மாதிரி பொண்டாட்டி இருக்க, புருஷன் இன்னொருத்தியுடன் “தொடர்பு” வைத்திருப்பான், அதுவும் அவள் ஒரு நடிகை என்று நினைக்கிறேன். இது வீட்டில் எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் எதுவும் செய்ய முடியாது; பொண்டாட்டியும் மாமனாரும் மாறி மாறி கிளிசரின் போட்டுக் கொள்வது தவிர.

மீண்டும் இந்தக் காலத்துக்கு வருவோம். என்றும் மாறாத பசுமையான அதே கதைதான் கிட்டத்தட்ட எல்லா சீரியல்களிலும் இன்றும் வலம் வருகிறது. தமிழ் சினிமாவுக்கு வில்லன் ஆண் என்றால் குட்டித் திரைக்கு வில்லன்(வில்லி?) பெண். அது மாமியார் வடிவிலோ மருமகள் வடிவிலோ, ஏன் பெற்ற தாய் வடிவிலோ கூட இருக்கலாம்.

இந்த மாதிரி அக்மார்க் செயற்கைத்தனமான சீரியல்களைக் கண்டால் பற்றிக் கொண்டு வரும். வேறு வழியில்லாமல் குடும்பத்தாருடன் கொஞ்ச நேரம் பார்க்க நேர்ந்த போது வாய் சும்மா இருக்காமல் எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தேன். யாரும் கண்டு கொள்வது மாதிரி தெரியவில்லை. சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். எல்லோரும் பயங்கர சீரியஸ் முகத்துடன் பார்ப்பது தெரிந்தது. இதற்கு மேல் வாயைத் திறந்தால் எதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று டிவிக்கு முதுகு காட்டிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்து விட்டேன்.

குமுதமோ விகடனோ, அட்டையைக் கிழித்துவிட்டால் இரண்டும் ஒன்றுதான் என்று யாரோ சொன்னார்களாம். அது போல பேர் போடாமல் மெகா சீரியல்களை வரிசையாகக் காட்டினால் ஒன்றும் வித்தியாசம் தெரியாது போலிருக்கிறது. குமுதத்தில் அரசு பதில் சொல்கிறார், ஆனால் விகடனில் மதன் பதில் சொல்கிறார் என்று வித்தியாசப்படுத்திக் காட்டுவது போல மெகா சீரியல் ரசிகர்கள் வேண்டுமானால் வித்தியாசம் சொல்லக்கூடும் 🙂

கேள்வி: மெகா சீரியல் என்பதை வரையறுக்க
பதில்: அழுகையும் அழுகை சார்ந்த மனிதர்களும் வாழும் குண்டுசட்டி

தமிழ்ப்பதிவுகள | மெகா சீரியல் | டிவி

Advertisements

Comments

1. Kusumban - Friday December 16, 2005

//கேள்வி: மெகா சீரியல் என்பதை வரையறுக்க
பதில்: அழுகையும் அழுகை சார்ந்த மனிதர்களும் வாழும் குண்டுசட்டி//

அப்பிடிப் போடுங்க… வீட்டுல சொல்லிட்டீங்களா இந்தப் பதிவப் பத்தி 😉

2. hsakarp - Friday December 16, 2005

சென்ற மாதம், மூன்று நாட்களுக்கே இந்தப் பொலம்பலா? சர்த்தான்…

3. karthikramas - Friday December 16, 2005

மெகா சீரியல் நு டெக்னோரடி டேக் போடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் 🙂

4. Arun - Friday December 16, 2005

Adhaaney..Pari, Only for three days, you were upset 🙂 You dont have either tolerance or patience, I guess! Final punch is ROTFL 🙂

5. sundaravadivel - Friday December 16, 2005

//வேறு வழியில்லாமல் குடும்பத்தாருடன் கொஞ்ச நேரம் பார்க்க நேர்ந்த போது வாய் சும்மா இருக்காமல் எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தேன்.//
நீங்களும் அப்படித்தானா?!

6. Pari - Friday December 16, 2005

குசும்பரே, அப்பவே வூட்டுக்குத் தெரியும்ங்க 🙂

பிரகாஷ்: இது என்ன புது அவதாரம் 🙂

கதிர்காமாஸ்.. சே.. கார்த்திக்ராமாஸ்.. பத்ரி content வேணும்னு சொல்றார்ல, எதோ நம்மால முடிஞ்சது 😛

அருண்: நமக்கு தமிழ்ப் படம் “முழுசா” பாக்கற பொறுமையே கெடையாது, இதுல சீரியலா, சுத்தம் 😉

சு.வ: அநியாயத்தப் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது இல்லையா 🙂

7. கல்வெட்டு - Friday January 13, 2006

பரி,
ரொம்ப நோகாதீங்க 🙂 இப்ப பொங்கலுக்கு எல்லா தொலைக் காட்சிகளும் சினிமாவாப் போட்டு கழுத்தறுக்கப் போறாங்க

விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

8. nice - Sunday January 29, 2006

good post

9. காசி - Sunday February 5, 2006

haha…

(test too)


Sorry comments are closed for this entry

%d bloggers like this: