jump to navigation

பணம் பத்தும் செய்யும் Monday August 15, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

அதுக்கு மேலயும் செய்யும்.

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா பாருங்க பணம் இருந்தாத்தான் உலகத்துல ஆனந்தமா இருக்க முடியுமாம்; சமீபத்திய ஆராய்ச்சி ஒண்ணு சொல்லுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னால, வேலை இல்லாம சும்மா ஆஃபீஸ் போய் பொழுது போக்குற ஒருத்தன்(அவன் தப்பு இல்லீங்க) கல்லூரி வகுப்புக் குழுவுல Quality of Life அப்டீன்னு ஒரு தலைப்புல “பணம் இருந்தா சந்தோஷமா இருக்கலாமா?”-ன்னு ஒரு விவாதத்த ஆரம்பிச்சு வச்சான்(நாங்க அப்பப்போ இப்டி உலகை உய்விக்கும் தலைப்புகளப் பத்திக் காரசாரமா விவாதிப்போமாக்கும்).

வழக்கம்போல “பணமே” கட்சியும், “பணம் மட்டுமே இல்லை” கட்சியும் மாத்தி மாத்தி விவாதம் நடக்குறப்போ நடுவுல நான் பூந்து இப்டி சொன்னேன்

நாம எவ்ளோ வச்சிருக்கோம்கிறது எப்பவுமே முக்கியமாப் படாது. அடுத்தவன் எவ்ளோ வச்சிருக்கான், அவன எப்டித் தாண்டுறது(அடுத்தவ வூட்டுக்காரன் எவ்ளோ வச்சிருக்கான், நம்ம வூட்டுக்காரன் ஏன் வச்சில்ல)ங்றதுதான் *ரொம்ப முக்கியமா* படும் – Peer Pressure

மனுஷனுக்கு தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே போகும். அதாவது அதிகமாக்கிக்கிட்டே போவான். ஒரு பெரிய பட்டியல் இருக்கும் அதுல டிக் மார்க் போட்டுக்கிட்டே வருவான், மேலே போட போட கீழ அது வளர்ந்து கிட்டே இருக்கும். டிக் போட்டதையும் வச்சிக்கணும். புதுசா வ(ள)ர்றதையும் வச்சிக்கணும். எல்லாத்துக்கும் பணம் வேணும்.

நாஞ்சொன்னத அப்டியே இந்த ஆராய்ச்சி முடிவுல சொல்லிருக்காங்க.

நான் போய் அவங்க மேல வழக்குப் போட்டு பணம் பாக்கணும். வரட்டுங்களா?

Advertisements

Comments

1. சு. க்ருபா ஷங்கர் - Monday August 15, 2005

என்னது, ஆராய்ச்சி சொல்லுதா?

ஆமாம் நமக்கே தெரியாதா எதுல அதிக சந்தோஷம்னு?

இதையும் கவனிக்கணும்

‘Happiness was measured using a self-report response of “very happy,” “pretty happy,” or “not too happy”, and they controlled for health, education, effects of getting older, race, and marital status.’

அப்பறம் இதையும் கவனிக்கணும்
‘the researchers’ measured the age, total family income, and general happiness ‘

அப்போ நல்லா புரிஞ்சுடும். எல்லாம் கொஸ்டினர் பண்ற டகால்டி. சந்தோஷமா இருக்கறவங்ககிட்ட என்னென்ன எல்லாம் இருக்குங்கறதை ஒரு காரணியா சொல்றாங்க. “இன்னின்ன மேட்டர்ல இவ்வளவு சந்தோஷம் இருக்கு, அப்பறம் ஓவராலா இவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.” இது ஸ்டேட்மெண்ட்-னு வெச்சுப்போம்.

இதுல இருந்து எப்படி சொல்றாங்கன்னா, “இவ்வளவு சந்தோஷமா இருக்கான்னா, அதிகமா சந்தோஷம் தர்ர மேட்டர் இதுதான்! அதனால, இதுதான் சந்தோஷத்துக்குக் காரணம்”

கரக்டா இருக்குங்கறீங்க? ம்ஹூம்.

2. செல்வராஜ் - Tuesday August 16, 2005

இந்தாங்க. இந்தப் பணம் சந்தோஷம் பத்தியெல்லாம் இப்போ நான் எதுவும் சொல்றதா இல்லை. விட்டுருங்க.

3. Pari - Tuesday August 16, 2005

க்ருபாராய்ச்சியாளரே,
“ஆமாம் நமக்கே தெரியாதா எதுல அதிக சந்தோஷம்னு?”
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி(எப்போ அது?) சொல்லு ராசா, கேட்டுக்கிறேன் 🙂


இந்தாங்க, நீங்க இப்போ சொல்லியே ஆகோணும். சொல்லிப்புட்டு, இதெல்லாம் என்ன பெரிய புண்ணாக்குன்னு தத்துவமும் சொல்லோணும், ஆமா 🙂

4. baluuu - Saturday January 28, 2006

welldone


Sorry comments are closed for this entry

%d bloggers like this: