jump to navigation

சந்திரமுகி பின்னூட்டங்கள் Friday July 22, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஆர்வ மிகுதியால் சந்திரமுகி திரைப்படம் 100வது நாள் எட்டியதைக் கொண்டாட மாயவரத்தான் என்பவர் என்னுடைய வலைப்பதிவு உட்பட பலருடைய பதிவுகளின் பின்னூட்டங்களில் சம்பந்தமில்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பதிவில் இதுபற்றி ஒரு பதிவைப் போட்டுக் கொண்டாடாமல் சம்பந்தமில்லாமல் பலரின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதில் நேர விரயத்தைத் தவிர என்னத்தைச் சாதித்துவிடப்போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் இதுபோன்ற சம்பந்தமில்லாத பின்னூட்டத்தினால் பலருக்கும் எரிச்சல் வரும் என்பதைப் புரிந்து கொள்வது உத்தமம். தொழில்நுட்ப ரீதியாகச் சொல்வதானால், அவர் செய்வது எரிதம்(spam).

கொண்டாடுவதை தயவுசெய்து உங்கள் பதிவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒத்த கருத்துடையவர்கள்/சக ரசிகர்கள் அங்கு வந்து கலந்துகொள்வார்கள்.

Advertisements

Comments

1. சுதர்சன் - Saturday July 23, 2005

//கொண்டாடுவதை தயவுசெய்து உங்கள் பதிவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒத்த கருத்துடையவர்கள்/சக ரசிகர்கள் அங்கு வந்து கலந்துகொள்வார்கள்.//

இதை விட மென்மையாகவும், நாகரீகமாகவும் சொல்லியிருக்க முடியாது. ஆனால் இதற்கே அந்த பண்பாளருக்கு தாங்க முடியவில்லை: என்ன செய்ய, ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’.

ஸ்பாம் என்பது யார் செய்தாலும் ஸ்பாம்தான். ‘அவன் செய்த போது கேட்கவில்லை, என்னை மட்டும் ஏன் கேட்கிறாய்’ என்பது என்ன வகையான வாதம் என்பது புரியவில்லை. ஆபாச பின்னூட்டம் என்பது வேறு வகையான பிரச்னை, அதை கண்டித்து பலரும் பதிவு எழுதியிருக்கிறார்கள். அதை செய்தவர் யார் என்பது நிரூபணமாகவில்லை, ஆனால் இந்த எரிதம் எழுதியது யார் என்று தெரியும், நேரடியாக கண்டித்து பதிவு எழுத தான் செய்வார்கள். அதை கண்டித்தவர்தான் இதை கண்டிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை.

எரிதப் பின்னூட்டம் இடுவதும், மன்றத்தில் எழுதுவதும் இணைய நாகரீகம் அல்ல!

உங்கள் கருத்தை, நிலையை முழுமையாக ஆதரிக்கிறேன் பரி!

2. செல்வராஜ் - Saturday July 23, 2005

பரி, சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அநேகமாக இதே கருத்தை அவர் பதிவில் சில நிமிடங்களுக்கு முன் கருத்தாகச் சொல்லியிருந்தேன்.

3. அன்பு - Saturday July 23, 2005

*****


Sorry comments are closed for this entry

%d bloggers like this: