jump to navigation

போன மச்சான் போயே போனான்! Wednesday June 8, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

மறந்தவங்க எல்லாரும் கொஞ்சம் கொசுவர்த்திக் கொளுத்தி… சரி, சரி சொல்ல வந்தது புரிஞ்சுதுல்ல, அதான் வேணும். நாந்தேன்; உசுரோடத்தான் இருக்கேன்.

புதுசு கண்ணா புதுசு (அடச்சே! இந்தக் கருமாந்திரத்த நானும் உபயோகிக்கணுமா? ஆனாலும், ஒரு ‘வரலாற்றில் எதையும் மறைக்கக்கூடாது, மறக்கக்கூடாது என்பதால், இந்தக் காலகட்டத்தில் இது நிகழ்ந்தது என்று பதிவு செய்யும் வண்ணம்…… போச்! போச்! எல்லாரும் அதுக்குள்ளாற தூங்கிட்டாங்க!) ரேஞ்சுக்கு வாழ்க்கையில எல்லாம் புதுசு புதுசா நடக்க ஆரம்பிச்சிருக்கா, அதான் போன மச்சான் திரும்பி வரல.புது இடம், புது வேலை, புதுப் பொண்டாட்டி – எல்லாமே புதுசு. வாழ்க்கைல ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.

இதுக்கு முன்னாடி பதிவுல வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி. ரஜினி ராம்கி மற்றும் க்ருபாவுக்கு ஒரு கிலோ(சும்மா தோராயமாத்தான்) கூடுதல் நன்றி(வரவேற்புல கலந்துகிட்டாங்கப்பா).

‘எனது இந்தியப் பயண அனுபவங்கள்’-னு ஒரு காவியம் எழுதலாம்தான், ஆனா எங்கெ நான் அத எழுதப்போயி, கோடானு கோடி மக்கள் வந்து படிச்சி, சர்வர்(server) படுத்துக்குமோன்னு பயந்துகிட்டே எழுதாம விட்டுடப் போறேன்(இவனுங்க ரவுசு தாங்கலப்பா – பொதுஜனம்).

கெடைக்கிற கேப்புல(gap) தமிழ் வலையுலகம் பக்கம் தல வச்சா ஒரே ரத்த ஆறா ஓடுது. இவங்க பண்ற ரவுசு தாங்கலப்பா. எங்கூரு பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க. “ஆந்தையப் பழிச்சிதாம் மோந்தை.” இப்போ எதுக்கு இதச் சொல்றேன்னு கேக்கறீங்களா? சிறு பத்திரிகை(ஹை, இலக்கியம் பேசியாச்சே!) உலகத்துல குழு குழுவா சண்டை போட்டுக்கிறாங்கன்னு சொல்லிக்கிட்டு, அத விட கேவலமா இங்கெ அடிச்சிக்கிறாங்க(வந்துட்டாண்டா புதுசா எதையோ கண்டுபுடிச்சிட்டா மாதிரி!).

நல்லபடியா சண்ட போடுங்க. எனக்குப் பொழுதாச்சு; நான் வக்கீலுக்குப் படிக்கப் போறேன். எதுக்கா? அட, கேப்புல கெடா வெட்டி நல்லா காசு பாக்கலாம்ல அதுக்குத்தான்!

Advertisements

Comments

1. shankar - Wednesday June 8, 2005

vaarum vaarum. pazaiya thaathaa ellaam thirumbi varum neram pola irukku. (cycle gap-la naanum thaatha aayitten).

2. karthikramas - Wednesday June 8, 2005

aiyyA Vaangoo sowkiyamaa? 🙂

3. வெங்கட் - Wednesday June 8, 2005

என்ன பரி, சௌக்கியமா?

பரிஃபீமேலழகி எப்படியிருக்காங்க? 🙂

4. Thangamani - Wednesday June 8, 2005

vaanga pari!

5. பாலாஜி-பாரி - Wednesday June 8, 2005

அய்யா….வரவேணும்..வரவேணும்..

6. -/பெயரிலி. - Wednesday June 8, 2005

வா ராசா(த்தீ) வா

7. Mathy Kandasamy - Wednesday June 8, 2005

vaayyaa!

vaanga vaanga!!

santhOshamaa irukku pari & mrs.Pari.

8. செல்வராஜ் - Wednesday June 8, 2005

வாங்க பரி ! எங்கடா ஆளக் காணாமேன்னு பார்த்துக் கொண்டிருந்தேன்.

9. மூக்கன் - Wednesday June 8, 2005

அட அதுக்குள்ள 90 நாள் ஆயிடுச்சா..

வா ராசா..வா..,

ஒரு கை கொறையுதுன்னு நெனச்சுகிட்டு இருந்தேன்.

ஆமா..மோந்தைன்னா என்னா..??

10. prakash - Wednesday June 8, 2005

வாங்கய்யா வாங்க….

11. J. Rajni Ramki - Thursday June 9, 2005

கல்யாணத்துக்கு லீவை சொல்லிட்டு போனா அட்லீஸ்ட் முப்பது நாள் கழிச்சாவது திரும்பி வரணும். இப்புடி குழந்தை பொறக்கிற நேரத்துல வந்தா…ஹி…ஹி.. கரெக்டுதானே?!

12. பரி - Thursday June 9, 2005

அப்பாடா, இன்னும் நிறைய பேர் மறக்கல 🙂

மோந்தை:

மொந்தை->மோந்தை-ன்னு சொல்லுது அகராதி. என்னங்க, தென்னமரத்துக்கடியில கள்ளு குடிச்சத மறந்துட்டீங்களா?

ஆந்தைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்னு என்னெ கேக்கக்கூடாது
(பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது, அக்காங் 🙂 )

வூட்டுக்காரம்மா நாளொரு spyware கொண்டு வர்றதும், நான் உக்காந்து தொடைக்கிறதுமா போகுது பொழப்பு 🙂

(அச்சச்சோ வெங்கட், எனக்கு இப்போ லினக்ஸ் வேணாம். விண்டோஸ்ல நான் புலி இல்லேன்னாலும் எலி 🙂 )

13. vinobha - Sunday June 12, 2005

pari vaangka.. eppatiyirukkInga?

14. பாலாஜி சுப்ரா - Tuesday June 14, 2005

சுறுசுறுப்பா வந்தீங்க. வந்த வேகத்திலேயே பதிவுகளும் பறக்குது 😛

ரஜினி ராம்கி நியுஸுக்கு வாழ்த்துகள் 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: