jump to navigation

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு… Saturday March 5, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

தமிழ்மணம் இன்று கனிசமான வாசகர்களைக் கொண்டுள்ளது. நல்லதோ கெட்டதோ வம்போ தும்போ எதுவாக இருந்தாலும் தமிழ் இணைய உலகில் ஒரு மைல்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது. காசி என்ற தனிமனிதரின் ஆர்வமும் உழைப்பும் இதற்கு முழுமுதற் காரணம் என்பதை எல்லோரும் அறிவார்கள்(என்று நம்புகிறேன்).

தமிழ்மணத்தை அளித்ததற்கு வலைப்பதிவர்கள் மற்றும் அதன் வாசகர்கள் செய்யக்கூடிய ஒரு காரியம் நன்றி சொல்வதுதானே? ஆமாம், அதான் எக்கச்சக்க முறை சொல்லியாகவிட்டதே! என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். அதையே கொஞ்சம் சம்பிரதாய முறையில் சொல்லலாம்.

“நன்கொடை தாரீர்” என்று அவர் கேட்டிருக்கும் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. அடிப்படையில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நம்மிடையே குறைவு என்பதே ஒரு தொழில்நுட்பனாக நான் கண்ட அவதானிப்பு.

காசி வலைப்பதிவு ஆரம்பித்த முதல்பதிவில் சொல்லியிருந்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது(வலைப்பதிவு உலகில் அது ஒரு கனாக்காலம்!).“இந்த டிஎம்ஸ் இருக்காரே, அவர் மாதிர் நம்மளால பாட முடியாது அதனால பாடுறதையே மறந்துடலாம். ஆனா, இந்த எஸ்பிபி இருக்காரே கொஞ்சம் ஆசை காட்டுவார். அவர் பாடுற மாதிரி பாடிப்பாக்கலாம்னு கொஞ்சம் ஆசை வரும். அந்த மாதிரி எல்லாரும் பண்றாங்களே, நாமளும் செஞ்சு பாக்கலாம்னு…” – இப்படி ஆரம்பித்தவர்தான்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். கொஞ்ச நாளாகவே நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம். வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக காசிக்குப் பரிசு தருவது.(‘நன்கொடை தாரீர்’-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தேவையில்லாமல் சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது).

அவருக்குத் தெரியாமல் இதைச் செய்யவேண்டும் என்று நம்பகமான மூவரிடம் தனிச்சுற்றில் போன வாரம் எப்படிச் செய்யலாம் என்று யோசனை கேட்டிருந்தேன். ஆனால் அதில் சிக்கல்கள் இருப்பது பிறகு தெரிய வந்தது. அதனால், செய்வதை பொதுவிலேயே கேட்டுச் செய்யலாம் என்று முடிவெடுத்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.

என்னுடைய பரிந்துரை: Amazon பற்றுச்சீட்டு (gift certificate: வார்த்தை உதவி நன்றி: சிங்கப்பூர் ஒலி வானொலி).

இதை முன்னெடுத்து நடத்த அமெரிக்காவில் உள்ள ஒருவர் வேண்டும். நானே செய்வேன், ஆனால், நாளை மறுதினம் ஒருமாத விடுப்பில் இந்தியா செல்கிறேன். போய்விட்டு வந்து செய்யலாம் என்றால், அதற்குள் வசந்த காலம் ஆரம்பித்துவிடும். வீட்டுக்குள் அடைந்து கிடந்த அமெரிக்கவாசிகள் ஹாயாக ஒரு டவுசர் மாட்டிக்கொண்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ்மணம் எல்லாம் அப்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி ஆகிவிடும். (சென்ற கோடையில் வலைப்பதிவுகள் காற்று வாங்கியது, அதைப்பற்றிப் பேச்சு அடிபட்டது ஞாபகம் இருக்கிறதா?)

அமெரிக்க வாழ் வலைப்பதிவர்களே வாசகர்களே, யாராவது முன் வந்து இதைச் செய்ய முடியுமா? (யாரும் முன்வரவில்லையென்றால் திரும்பி வந்து நானே செய்வேன்).

இது தவிர தொலை நோக்கில தமிழ்மணம் தளத்தை பராமரிப்பு செலவுக்கும் வழி செய்ய வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி பிறகு.

பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தோ உங்கள் வலைப்பதிவில் பதிந்தோ இதில் உள்ள Logistics பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தால் சந்தோஷம்.

Advertisements

Comments

1. சு. க்ருபா ஷங்கர் - Saturday March 5, 2005

தூதுவச்செய்தி (messenger message: நன்றி, கம்பராமாயணம்) பார்க்கவும்.

2. பரி - Saturday March 5, 2005

எதுவாக இருந்தாலும் பொதுவில் வைக்கவும் 😉

3. சு. க்ருபா ஷங்கர் - Saturday March 5, 2005

புதுவில் எது வேண்டுமானாலும் வைத்துவிடலாம்தான். 😉

சரி. எனக்கென்ன. சொல்லிடறேன்.

உங்க creditcard number குடுங்க.

4. சு. க்ருபா ஷங்கர் - Saturday March 5, 2005

இல்லாட்டி bank account number. password ஏதாவது இருந்தா, அதுவும். 😉

5. சு. க்ருபா ஷங்கர் - Saturday March 5, 2005

சரி, சரி. மொறைக்காதீங்க. சொல்றேன்.

இங்க இந்தியால எத்தனை பேரால creditcardல எல்லாம் தர முடியும்னு தெரியலை.

அதனால யார்னாச்சியும் இப்டிக்கா இந்தியா வந்தீங்கன்னா, மொத்தமா வாங்கி ‘வசூல் ராஜா’வா இருந்தா வசதி. அல்லது பொதுவான ஒரு இந்திய வங்கிக் கணக்கு ஏதாவது யாராவது குடுத்தா எல்ல்லாரும் அதுலயே போட்டுடலாம்.

6. காசி - Saturday March 5, 2005

க்’ரூபா’,

expiry date, address எல்லாம் கேட்டுக்கணும், அப்பத்தான் எதாச்சுக்கும் ஆகும். பரி ஊரில் இல்லாம ஒரு மாசம் கார்சு சும்மா தானே இருக்கப் போகுது:P

பரி,

இந்த ரெண்டு மாசமா சும்மா இருந்த மாதிரியே இன்னும் ரெண்டு நாளும் இருந்திருக்கலாம் 😦

7. Kasi - Saturday March 5, 2005

Your inserted code does not pass the url with ../index.php?.. Please add this.

8. Kasi - Saturday March 5, 2005

நண்பர்களே, நன்கொடையெல்லாம் வசூலிக்க வேண்டாம். உங்கள் ஆதரவை இப்படி எதாவது செய்துதான் சொல்லணும் என்றால், ஆளுக்கொரு புத்தகம் வாங்கிக் கொடுங்க. அதுவும் இப்போது இல்லை, நான் இன்னும் சில மாதங்களில் ஊர்ப்பக்கம் வந்து சேருவேன். அப்போது என் வீட்டில் அழகாக அடுக்கி பெருமையாக என் இணைய நண்பர்கள் கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொள்ள வசதியாக இருக்கும். புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் இன்னும் பாக்கியம் செய்தவனாவேன். ஒருங்கிணைக்க விருப்பப்பட்டவர்கள் யாராவது ஒரே புத்தகத்தை இரண்டு பேர் வாங்கித்தராமல் பார்த்துக்கொண்டால் போதும்.

நன்றியுடன்,

-காசி

9. Kasi - Saturday March 5, 2005

தப்பித்தவறிக்கூட இப்போது எதாவது அனுப்பிவிடாதீர்கள். இருப்பத்ற்கே என் பெட்டியில் இடமில்லை.

10. சு. க்ருபா ஷங்கர் - Saturday March 5, 2005

அட யார்ரா அது! என்ன கிஃப்ட். என்ன சர்ட்டிஃபிகேட்டு. பிச்சுப்புடுவேன் பிச்சு!

வாங்க வாங்க காசி. அதெல்லாம் ஒன்னும் இல்ல. பசங்க சும்மா தமாஷா பேசிக்கறாங்க. நீங்க போங்கண்ணே, நீங்க போய்ட்டு வாங்க.

அதெல்லாம் ஒன்னுமில்ல, நான் பாத்துக்கறேன், நீங்க போய்ட்டு வாங்கண்ணே!

(பரி, நீங்க எதுக்கும் மெசஞ்சர்ப் பக்கம் வாங்க)

11. பரி - Saturday March 5, 2005

Your inserted code does not pass the url with ../index.php?.. Please add this.

>>>

If I do this, the itemid value is not displayed, making it a invalid URL 😦

12. Kasi - Saturday March 5, 2005

pari,

see baranee’s posts in manRam. he did explain this I think.

-Kasi

13. மூக்கன் - Saturday March 5, 2005

பரி,

உங்கள் யோசனையை நான் வரவேற்கிறேன். அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் அவருடைய ஆர்வத்தினால் வந்தவை. அதற்கு விலை வைப்பது குற்றம். ஆனால் தமிழ்மணம் என்ற தளத்தை இத்த்னை மாதம் நடத்திக் கொண்டிருக்கிறாரே, அந்த கட்டணத்தையாவது ( hosting fee) நாம் அவருக்கு அவ்வ்ப்போது பகிர்ந்து கொண்டு கொடுத்து விட வேண்டும். இதற்காக கொஞ்ச மாதம் முன்பு பேசியபோது “ இப்போது பிரச்சினை இல்லை. வந்தால் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு google ads போட்டிருக்கிறேன். அதில் ஏதாவது வந்தால், hosting fee க்கு உபயோகப்படுத்திக் கொள்கிறேன் ” என்றார். ஆனால் இன்னும் எத்த்னை வருடம் ஆனாலும் அவராக ஏதும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். நாம் தான் இப்படி வம்படியாக ஏதாவது செய்தாக வேண்டும். கரும்பு சங்கர் இந்தியாவில் வசூல்ராஜாவாக இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கு, எல்லாருக்கும் பிடித்த சாந்தமான வசூல்ராஜாவை போட்டு விடலாம். இது சம்பந்தமாக மேற்கொண்டு எது சொல்வதாக இருந்தாலும், தயவு செய்து இங்கே எழுதுங்கள்.

முன்னெடுத்து செல்வதற்கு நன்றி பரி.

14. சுந்தரவடிவேல் - Saturday March 5, 2005

ரொம்ப நல்ல காரியம் பரி. நான் மகிழ்ச்சியாகச் செய்வேன். ஆனா மூக்கர் சொல்றதைப் பாத்தா

//அமெரிக்காவுக்கு, எல்லாருக்கும் பிடித்த சாந்தமான வசூல்ராஜாவை// அப்படின்னா நான் கண்டிப்பா இல்லை:) பரியே இருக்கலாம்ங்கறது எ.தா.அ! புத்தகமாக வாங்கித் தரும் பட்சத்தில் இங்கு திரட்டித் தமிழகத்துக்கு மொத்தமாக அனுப்பிவிடலாம், இல்லையா?

15. karthikramas - Saturday March 5, 2005

//(வலைப்பதிவு உலகில் அது ஒரு கனாக்காலம்!). // மிகச்சரி,

///அமெரிக்க வாழ் வலைப்பதிவர்களே வாசகர்களே, யாராவது முன் வந்து இதைச் செய்ய முடியுமா?//

நான் செய்கிறேன். (அப்படியே காசி மாதிரி எனக்கும் யாராவது எதாவது கொடுக்கனும்னா

தாரளமா வாங்கிப்பேன். :P)

பரி மடல் போடுங்க எனக்கு.

ஓ சுந்தரவடிவேல் செய்றார்னு சொல்லிட்டார் நான் அப்படியே வால் பிடிச்சுக்கிறேன்.

karthikramas@gmail.com

16. karthikramas - Saturday March 5, 2005

//அமெரிக்காவுக்கு, எல்லாருக்கும் பிடித்த சாந்தமான வசூல்ராஜாவை// அப்படின்னா நானும் கண்டிப்பா இல்லை :)))

17. sathyarajkumar - Sunday March 6, 2005

கொஞ்சம் தாமதமாகத்தான் இங்கே வந்தேன். இது விஷயமாய் அமெரிக்காவில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எஸ் ஆர் கே மெயில் அட் ஜிமெயில் டாட் காம் -க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

– சத்யராஜ்குமார்

18. மூக்கன் - Monday March 7, 2005

சுந்தர்/கார்த்திக்,

சர்ச்சைக்கு ஆளாகாத, சாதுவான, ந்மக்கெதுக்கு வம்பு என்று போகிற வலைப்பதிவர் ஒருவரை இனங்கண்டு அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்ற எண்ணத்தில் எழுதினேன். இம் மாதிரியான ஒரு ஆள், குதிரை மேல ஏறி கல்யாணம் பண்ணிக்க ஊருக்கு போறார். இருக்கற ஆட்கள்ள ஒருத்த்ரை சொல்லுங்க. இல்லாட்டி அவர் திரும்பி வருகின்ற வரை பொறுத்திருப்போம்.

19. சு. க்ருபா ஷங்கர் - Monday March 7, 2005

க்கீறேம்பா, க்கீறேன். அக்காங்…


Sorry comments are closed for this entry

%d bloggers like this: