jump to navigation

விசாரணையும் விதண்டாவாதமும் Thursday January 13, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

Law & Order என்று ஒரு டிவி மிகவும் பிரபலமான தொடர் NBCயில் வரும். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதைப் பிண்ணுவதே இதன் வெற்றியின் ரகசியம்(1990லிருந்து வருகிறது இந்தத் தொடர்). Ripped from headlines என்றுதான் விளம்பரமே கொடுப்பார்கள். நியூ யார்க் நகரத்தில் நடக்கும் சம்பவங்களே இடம்பெருவதால் அது என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. இதன் வெற்றியைத் தொடர்ந்து Law & Order: Special Victims Unit, Law & Order: Criminal Intent என்று மேலும் இரண்டு தொடர்கள் NBCயில் வருகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் Law & Order: Criminal Intent தொடரை சில சமயம் பார்ப்பதுண்டு. இதில் முக்கிய அம்சமே குற்றம் சாற்றப்பட்டவரை விசாரிப்பதுதான். ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவதுபோல வெளியிலிருந்து உள்ளே பார்த்தால் தெரியும் ஆனால், உள்ளே இருந்து வெளியில் பார்த்தால் தெரியாத அறைக்குள்தான் விசாரணை நடக்கும். இது காவல் நிலைய விசாரணை. இது தவிர வீட்டில் விசாரணை, வெளியில் விசாரணை என்று பல வழிகளிலும் விசாரணை நடக்கும்.

இப்பொழுது அது பற்றி என்ன இப்படி நீட்டி முழக்க வேண்டியிருக்கிறது என்று கேட்பது புரிகிறது. இந்த விசாரணையின் முக்கிய அம்சமே, குற்றம் சாற்றப்பட்டவரின் மனதிடத்தைச் சோதித்துப் பார்ப்பதுதான். எல்லாருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் mind game விளையாடுவது. அவர் தடுமாறிய வேளையில் உளறிக் கொட்டினால்(உண்மையாகவே தவறு செய்தவர் கண்டிப்பாக உளறுவார்) பிடித்துப் போடவே இந்த விளையாட்டு. விசாரணை செய்பவர்களுக்கு(Investigators) இந்த விளையாட்டு சர்வ சாதாரணம். அதுதான் அவர்கள் தொழிலே!

உண்மை உலகத்தில் நடக்கும் விசாரணைக்கும் மேலே குறிப்பிட்ட டிவி விசாரணைக்கும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா மட்டுமல்ல, உலகெங்கும் விசாரணையாளர்கள் இந்த விளையாட்டை விளையாடித்தான் குற்றம் சாற்றப்பட்டவர்களை விசாரிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்ன, நாட்டுக்கு நாடு மனித உரிமை மதிப்பிற்கேற்றவாறு இதன் அளவுகோல் மாறும்.

சரி, இன்னும் மேட்டருக்கு வரலியே?!

எதோ சங்கராச்சாரியாராம், அவரப் புடிச்சி உள்ளெ போட்டுட்டாங்களாம், ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்கு. திருட்டு விசிடி தொல்லை சினிமா உலகத்தோட நிக்காம இந்த விஷயத்திலும் பூந்து வெளையாடிருக்கு. சன் டிவியில் சங்கராச்சாரியார விசாரிக்கிற காட்சியப் போட்டுக் காட்டினாங்களாம். அதுல கொஞ்சம் கேள்வி-பதில்(அதாவது விசாரணை) இருக்காம். நாமக்கல் ராஜாவும் அகரதூரிகை அருணும் எழுதிருக்காங்க. அருண் சொல்றார் “கேள்வியெல்லாம் சிண்டு முடியற மாதிரி” இருக்காம்.

விசாரனை பண்றதுன்னா, அவருக்கு பாதபூஜை பண்ணிட்டு, “ஸ்வாமி, நீங்கள் சங்கர்ராமனை கொலை செய்ய ஆட்களை ஏவினீர்களா? உங்கள் அருள்வாக்குக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள் பூஜை புணஸ்காரங்களை முடித்துவிட்டு சாவகாசமாக சொன்னால் போதும். நாங்கள் மோட்சம் பெறுவோம்.” இப்படில்ல பண்ணனும்? அத வுட்டுப்புட்டு, சிண்டு முடியற மாதிரி கேள்வி கேட்டா ஞாயமா? அதுதான் விசாரணைக்கு அழகா? அதுக்குத்தான் அவங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிப்புட்டு வந்திருக்காங்களா? ஙொப்புறான சத்தியமா எனக்குப் புரியலைங்க.

சங்கராச்சாரியார் எக்கேடு கெட்டா எனக்கென்ன, வாழ்ந்தா எனக்கென்ன. அது பத்தி எனக்குக் கவலையில்லை. உணர்ச்சி மேலிட்டு எழுதினா ஒரு சாதாரண விஷயத்தக் கூட சாதாரணமா பாக்கறது எவ்வளவு கஷ்டம்னு சுட்டிக்காட்டத்தான் இத போடுறேன். அதுவும் நேத்துலேர்ந்து ரொம்ப யோசிச்சதுக்கப்புறமா.

நடக்குறது விசாரணை, அதுல 1008 நொட்டாரம் சொன்னா வேற எப்டித்தான் உண்மை வெளியில வரும்னு புரியல போங்க. காதலன் படத்துல காட்டுற மாதிரி எறும்பு சாக்கு உள்ளாற அம்மணமா கட்டிப்போட்டு விசாரிச்சாங்களா, இல்லே குப்புறப் படுக்கப்போட்டு அங்கெ நாலு போடு போட்டாங்களா, வெறுமனே கேள்வி கேட்டதுக்கே இந்தப் பாடா.(தெரியுமப்பா, கோயில்ல இல்லாம வேற எங்கயாவது வச்சித் தீத்துக் கட்டினா தேவலையா-ங்றதுதான் கேள்வின்னு. அட, அத நெசமாத்தான் கேக்கறாங்களா, அதுவும் வீடியோ பதிவு நடக்குதுன்னு தெரிஞ்சும்?)

டிஷ் ஆண்டெனாவுல சானல் 610-ல சன் டிவி வரும்னு நினைக்கிறேன்(எங்கிட்ட அந்தக் கருமாந்திரம் இல்லை). அப்படியே NBC எந்தச் சானல்ல வருதுன்னு பாத்து Law & Order ஒரு ரவுண்டு பாத்துப்புட்டா தேவலை.

கஷ்ட காலம். இந்த கருமம் புடிச்ச விஷயத்துல நானும் ஒரு பதிவு போட வேண்டியதாப் போச்சு.

Advertisements

Comments

1. மூக்கன் - Thursday January 13, 2005

பரி,

ஜெயேந்திரரே உண்மையை ஒப்புத்துக்கிட்டாலும், இனிமே “ தமிழக அரசு

சொல்லித்தான் அவங்க ஒப்புத்துக்கிட்டாங்க” அப்படின்னு சொல்ற அளவுக்கு தமிழக அரசு குடுக்கிற build up இருக்குது. எந்தக் கூப்பாடும் போடாம, நியாயமா விசாரிச்சாலே போதும், உண்மை விளங்கும். யாருக்குப் புரியுது.

இதெல்லாம் எழுதினா, இன்னோரு நாயி வந்து, சூத்திரக் கும்பல்னு தன் பருப்புக் கொழுப்பை காட்டிட்டு போகும். (http://dystocia.blogspot.co…) அந்த நாய் யாருன்னு தெரிஞ்சா “அறுத்து” விட சரியாயிருக்கும்.

2. Arun - Thursday January 13, 2005

அன்புள்ள பரி,

கொலையில் ஜெயேந்திரரின் பங்கைக் குறித்த விசாரணையை விட, விஜயேந்திரருக்கும் அவருக்கும் சிண்டு முடியும் விதமாகத் தான் கேள்வி இருந்தது. (Atleast அது தான் அந்த விசிடித் தொகுப்பில் காணப்பட்டது!) ‘அவரு பொண்ணுங்களோட சல்லாபம் பண்றதெல்லாம் சரியா?’ என்று சுவாரஸ்யமான கேள்விகள் தான் விசிடியில் காண்பிக்கப்பட்டது.

மூக்கரே, அனானிமஸ் என்ற பெயரில்லாத யாரோ ஒருவர் கேவலமான முறையில் மறுமொழி கொடுத்தால் கூட, பருப்புக் கொழுப்பு என்று பொதுமைப்படுத்தும் உங்களின் மறுமொழி எனக்கு வியப்பையும், வருத்தத்தையுமே தருகிறது! அனானிமஸ் என்ற பெயரில் எவர் வேண்டுமானாலும் மறுமொழி இட்டிருக்க முடியுமே…ஏன் பிராமணர்கள் மேல் வெறுப்பு வர வேண்டுமென்பதற்காகக் கூட, சந்தடி சாக்கில் யார் வேண்டுமானாலும் செய்ய முடியுமே?! சரி விடுங்கள்…உங்களின் பார்வையில் அப்படி மறுமொழி இடும் அனானிமஸ் எல்லாம் பருப்பு சாப்பிட்டு கொழுத்த ஆட்களாக மட்டுமே இருக்க முடியும்….ஆடு, கோழி கொழுப்பாய் இருக்க முடியாது போல!

– அருண் வைத்யநாதன்

3. மூக்கன் - Thursday January 13, 2005

அருண்,

எனக்கு வியப்பாயும், வேதனையாயும் இருக்கிறது நீங்கள் சொல்வதை கேட்டு. தம்ழ்ப்பாம்பு எழுதியுள்ளது தினமலர் எழுதியதை பற்றி. வந்த அனானிமஸ், அதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கலாம். அதை விடுத்து, கமெண்ட் அடிச்சவனையெல்லாம் நோண்டிப் பாத்து, கமெண்ட் அடிச்சா, ஸாரி, நான் இதுவும் சொல்வேன். இதுக்கு மேலயும் சொல்வேன். பருப்புக் கொழுப்பே இந்த் ஆட்டம் போட்டுதுன்னா, ஆடு கோழி கொழுப்பு எந்த ஆட்டம் போடும்னு காண்பிக்க வேணாம்..??

நீங்கள் இந்த மாதிரி விவகாரங்களில் இருந்து விலகிக் கொள்வது நல்லது. அனானிமஸ் பாதிரி ஆளுக்கெல்லாம் பரிந்து பேசிக் கொண்டு வருவது நல்லதல்ல

4. Mathy Kandasamy - Thursday January 13, 2005

>>

கஷ்ட காலம். இந்த கருமம் புடிச்ச விஷயத்துல நானும் ஒரு பதிவு போட வேண்டியதாப் போச்சு.

<<

:))

5. Arun - Thursday January 13, 2005

மூக்கரே,

அனானிமஸ் என்பவர் யாரோ பெயர் வெளியிட மறுக்கும் ஒருவர். அவர் எந்தக் கொழுப்பாகவும் இருக்கலாம். நீங்கள் அனானிமஸாக வரும் மறுமொழிகளுக்குக் கூட, பருப்புக் கொழுப்பு என்று பொத்தாம் பொதுவாக பேசுவீர்களேயானால்… நான் எனது மூக்கை நுழைக்கத் தான் செய்வேன்! நீங்கள் அது போல் அநாகரீகமாக பேசுபவர்களை எப்படியும் திட்டுங்கள்…ஆனால், பருப்புக் கொழுப்பு என்று திட்டுவது, தெரியாத நபர் நோக்கி வீசப்படும் கேவலமான குற்றச்சாட்டு! உங்களிடமிருந்து இது போன்று கருத்துக்கள் வருவது எனக்கு வேதனையைத் தருகிறது….நடுநிலையாக சிந்தித்து சொல்லுங்கள்!

– அருண் வைத்யநாதன்

6. மூக்கன் - Thursday January 13, 2005

அருண்,

பேசப்படுவது தினமலர். பேசப்படும் பத்தி சங்கராச்சாரியார் பற்றியது. அனானிமஸ் என்ற பெயரில் வந்தவன் “ சூத்திரர் கூட்டம்” என்கிறான் பொதுப்படையாக. அப்படிச் சொல்ல, யாருக்கு முகாந்திரம் இருக்கிரது என்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்.

நடுநிலை என்பது எல்லாவற்றுக்கும் வாயைப் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதல்ல. மிதிக்கும் இடத்தில் மிதியைத் தான் திரும்பக் கொடுக்க வேண்டும்.

இன்னொன்று, நான் இப்படி ஒவ்வொருமுறையும் கொழுப்பெடுத்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லும்போதெல்லாம், நீங்கள் பிராமண சமூகத்தின் ஒரே பிரதிநிதியாக எனக்கு வந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். முதலில் அருண் என்கிற நண்பனாக, தனி மனிதனாக யோசியுங்கள். பிறகு உங்கள் சாதீய அடையாளங்களுக்குள் செல்லுங்கள். அதுதான் என் வேண்டுகோள்.

பிரச்சினையை ஆரம்பித்துவிட்டு அந்த நாய், வேறென்கோ *3$%^&#@#%^ பண்ணச் சென்று விட நாம் இங்கே பேச வேண்டியதாகி விட்டது.

7. Arun - Thursday January 13, 2005

மூக்கரே,

நானும் அதே தான் சொல்கிறென். பேசியவன் பெயரோ அல்லது அவனைப்பற்றிய விலாசமோ சொல்லாமலே, ஒரு அநாகரீகமான வார்த்தையை உபயோகப்படுத்தி விட்டு போய் விட்டான். அதை ‘பருப்புக் கொழுப்பு’ என்று ஒரு சாதிக்குரியதாய் கொண்டு வந்தது நீங்கள் தான். இது போலெல்லாம் வேறு யாராவது மறுமொழி இட்டால், நான் வந்து பேசியிருக்கக் கூட மாட்டேன். உங்களது சிந்தனைகளை அறிந்ததாலேயே, வந்து மறுமொழி இட்டேன். சாதீயப் பெயரை சொல்லி, அதுவும் இழிவுபடுத்துமாறு..யார், எங்கு பேசினாலும் தவறு தான்!

– அருண் வைத்யநாதன்

8. மூக்கன் - Thursday January 13, 2005

//அருண்,

பேசப்படுவது தினமலர். பேசப்படும் பத்தி சங்கராச்சாரியார் பற்றியது. அனானிமஸ் என்ற பெயரில் வந்தவன் “ சூத்திரர் கூட்டம்” என்கிறான் பொதுப்படையாக. அப்படிச் சொல்ல, யாருக்கு முகாந்திரம் இருக்கிரது என்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். //

இதை நீங்கள் படிக்கவில்லையா..?? இதை படித்தும் நான் சொன்னதை நம்பாவிட்டால், இனி பேசி பிரயோசனம் இல்லை.

நன்றி. வணக்கம்

9. Arun - Friday January 14, 2005

மூக்கன்,

அனானிமஸ் என்ற போர்வைக்குள் புகுந்து யாரும் அதை சொல்லியிருக்க முடியும். ஆனால், அது பருப்புக் கொழுப்பாய்த் தான் இருக்கும் என்று முடிவு கட்டி, அப்படி சொல்லக்கூடியவர்கள் அந்த சமூகத்தில் வந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் எழுதியது தேவையற்றது என்பது எனது வாதம். நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையா…அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறீர்களா என்று தெரியவில்லை.

இனிமேல் இது குறித்துப் பேசி பிரயோஜனம் இல்லை தான்.

அதே நன்றிகளும்,வணக்கங்களும்!

– அருண் வைத்யநாதன்.

10. அனானிமஸ - Friday January 14, 2005

மூக்கர், “பருப்பு கொழுப்பு எடுத்த நாய்” என்று அனானிமசை மரியாதையுடன் பேசியதை வன்மையாய் கண்டிக்கிறேன். இன்னும் அசிங்கமா பேசத்தெரியலையா மூக்கர். அருண் சொல்வதைப் பார்த்தால்

அவருக்கு கூட அனானிமஸ் கருத்து இருக்குமோ? இல்லை பருப்பு கொழுப்போ?

11. Balaji-paari - Friday January 14, 2005

Pari,

thelivaana pathivu.

Mookare,

//நடுநிலை என்பது எல்லாவற்றுக்கும் வாயைப் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதல்ல. மிதிக்கும் இடத்தில் மிதியைத் தான் திரும்பக் கொடுக்க வேண்டும்.//

ungal karuththai naan varaverkindren.

12. Montresor/தமிழ்ப்பாம்பு - Friday January 14, 2005

‘சூத்திரர் கூட்டம்’ என்று அனானிமஸ் என் பதிவில் கூறியது வெறும் பதிலாகக் கூறப்பட்டதா இழிவாகக் கூறப்பட்டதா என்று அந்த இரண்டு சொற்களை வைத்துத் தீர்மானிக்கமுடியவில்லை. இந்தமாதிர் எழுதித்தொலைபவர்கள் இதுமாதிரி cryptic ஆக எழுதித்தொலையாமல் இரண்டு வரியாவது தெளிவாக எழுதினாலே பாதிப் பிரச்னைகள் வராது. நான் எழுதியது தினமலரைப் பற்றி. அதன் தொனியில் ‘சிலர் சிலர் சிலர்’ என்று பொதுமையில் ஜல்லியடித்துக்கொண்டிருந்தது ஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டும் என்றால், அந்த ‘சிலருக்கு’ மட்டும் தினமலர் விற்பனையை நிறுத்திக்கொள்ளுமா என்றுதான் கேட்கநினைத்தது. இழவெடுத்த அந்தப் பத்திரிகைக்காக நாம் ஏன் அடித்துக்கொள்ளவேண்டும். விடுங்கள். மேலும், மூக்கன் என்ன நினைத்து எழுதினாரோ என்று தெரியாது, ‘பருப்புக் கொழுப்பு’ என்று அவர் எழுதிய முதல் பின்னூட்டத்தில் நான் ‘பருப்பு’ என்று நினைத்தது வேறு பருப்பைத்தான். எங்கள் பக்கம் இடக்கரடக்கல் தொனியில் ‘கொ.கொழுப்பு’ என்பதை ‘பருப்புக் கொழுப்பு’ என்பார்கள்; அதுதான் இது என்றுதான் நினைக்கத் தோன்றியதே தவிர…

13. பரி - Friday January 14, 2005

‘தோடா, இவரு பெரிய பருப்பு; பெருசா சொல்ல வந்துட்டாரு’ – நண்பர்களுக்கிடையே *சர்வ சாதாரணமாக* நாங்கள் பேசும் பருப்பைத் தவிர வேறு பருப்பையும் எனக்குத் தெரியாது. (இன்னும் நிறைய பேசுவோம் – அன்பின் மிகுதியால்)

இந்தப் ‘பருப்பு’ப்பாடம் எனக்குப் புதுசு.

-பரி

14. PK Sivakumar - Friday January 14, 2005

Dont want to get into this argument. I reserve comments because I have no time for it now. 🙂 But, I understood Mookar only meant Brahmins by that statement of comparing veg item with a non-veg item. Though Pari and Montresor have given the meaning of Parupu from their understanding, Mookar has not denied that he meant only Brahmins by it. Has He? Mookar can you please tell whether you meant Brahmins by that word (Parupu) or not. If Mookar wants to soft-pedal and re-intrepret the meanings, I am fine with it too. I can say only one thing, if Mookar meant only Brahmins by it, he is no different from the Anonymous who called others as Soothirars.

Thanks and regards, PK Sivakumar

15. மூக்கன் - Friday January 14, 2005

இந்த விஷயத்தில் இன்னமும் எத்த்னை வியாக்கியானங்களை கேட்க வேண்டுமோ தெரியவில்லை. இதனால் எத்த்னை பெரிய மனிதர்களின் நேரம் வீணாகப்போகுமோ அதுவும் தெரியவில்லை.

ஆனால் சொல்லவேண்டியது ஒன்று இருக்கிறது.

பருப்பு கொழுப்பு என்று நான் சொன்னது

“சூத்திரக் கூட்டம்” என்று சொன்னானே, அந்தக் கேடுகெட்ட நாயின் சாதீய அடையாளத்தை குறித்துதான். நான் சொன்னபோது அருணுக்கு கோபம் வந்தது- என்னவோ தான் மட்டுமே உலகப்பிராமணர்களின் ஒரே பிரதிநிதி போல. அதே நாய், இப்போது அவருடைய வலைப்பதிவில், அவர் எழுதிய கவிதைக்கும் இதே ரீதியில் கமெண்ட் அடித்திருக்கிறது. அருணும், தமிழ்ப்பாம்பும் நினைத்தால், பி.கெ.எஸ் இன்று காலை வீசசறுவாளை கண்டுபிடித்து முகம் கலைத்தது போல, அனானிமஸ் யாரென்று கண்டுபிடிக்கலாம். எதிர்காலத்தில் இந்த மாதிரி விஷமிகளிடம் இருந்து விலகி இருக்க வசதியாக இருக்கும்.

பி,கே.எஸ் என்னுடைய கமெண்டுக்கும், அந்த நாயின் கமெண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று கண்டுபிடித்து திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். எனக்குப் புல்லரிக்கிறது…!! நான் முதலில் கையைத் தூக்கவில்லை. தூக்கி மலம் வீசியவனின் கையை முறுக்கி இருக்கிறேன். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது அவருக்கு புரிந்தாலும், சொல்ல மாட்டார். அவருடைய தேவைகள் அப்படி 🙂

16. செல்வராஜ் - Saturday January 15, 2005

பரி, உணர்ச்சிகளின்பாற்பட்டு இரு புறமும் இருந்து பலரும் நோக்க, நீங்கள் தெளிவாக வேறு கோணத்தில் இருந்து எழுதி இருக்கிறீர்கள். நன்று.

மற்றபடி பருப்பு, ஆடு, கோழி எல்லாவற்றையும் உண்டு கொழுத்திருப்பதால் நான் உள்ளே வரவேண்டாம் என்று தான் பார்த்தேன். இருந்தாலும் மூக்கனின் முதல் கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாகப் படவில்லை; குறிப்பிட்ட ஒரு ஆளைப் பற்றித் தான் இருந்ததாகப் பட்டது என்று மட்டும் சொல்லிக் கொண்டு வேறு திசைக்குச் செல்கிறேன்.

17. PK Sivakumar - Saturday January 15, 2005

Mookare, enaku enna thevai enru ennai vida nanraaka arinthu vaithu irukireerkal pola. athu enna enru sollalaame. ennudaiya thevai ungal thevai pola illai enru othu kolkirean. ungal thevai, muthal naal srilankan issue patri oru nilai eduthu, adutha naale atharku opposite aaka adutha nilai edukira thevaikal. Kai thatalukaakavum, crowdkaakavum, egovin aripukaakavum, sila perin paaratukalai vangukira nokathukaaka avarkal enna seithaalum soft aaka irunthu vitu, matravarkal mel paaikira, sandai podukira thevaikal ungaluku irukalaam. antha madiri edum seithenaa. apuram, boston balaji, thirumalai, buhari, meenaks, vanthiyathevan, rajkumar, pa.raghavan, suresh kannan etc etc enru ungaluku ovvaatha karuthai yaaru ezuthinaalum, avarkaludan karuthu reethiyaana vivaatham seyyaamal, malluku nirkira thevai ungaluku irukalaam. ungalai patri suresh kannan maraththadiyil oru murai ezuthiyathu ninaivuku varukirathu. Valaipathivin dhaadhaavaka matravarkaluku ungalaik kaata ninaikira thevaiyaakavum irukalaam. tharka reethiyaana kelvikaluku thanipata saayam poosi jalli adithaalum, ungalai patri ipadi tharka poormavamaakave ezuthi eduthu kaata mudiyum. aanaal, atharku avasiyam illai. ungal ezuthukalai padipavarkal athai arinthey irukiraarkal enru nambukirean. enave, ungaludan sandai potu, sandai poda vendum enra ungal nokathai niraivetra povathillai. Intha madiri ezuthukiravarkalai perumbaalum naan othukuvan (i mean, en thevai enna enru theriyum enru ezuthi jalli adipathu, motives poduvathu.), athaiye inimel seyya pokirean. inaiyathin mika periya brahmana thuveshi patathuku poti nadanthaal adithuk kondu antha pattathai vaangungalean. enaku enna vanthathu. Enaku Vurupadiyaaka seivatharku niraiya velaikal vullana. Neengal anonymouskalin jaathiyai kooda kandupidikara arachiyai thodarnthu seithu vaarungal. Jaathiyai oziththu vidalaam. SUBAM. Period. Anbudan, PK Sivakumar

18. மூக்கன் - Saturday January 15, 2005

சிவா, உணர்ச்சிவச்ப்பட்டு பேசி இருக்கிறீர்கள். உங்களை “ தேவை” என்று சொன்னேன் என்பதற்காக, இத்த்னை வசைபாடல்கள். உங்களின் “தர்க்கரீதியான” அத்தனை உதாரணங்களிலும், என் நிலை என்னெவென்பதை சர்ச்சை எழுந்த காலங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம், வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன்.

எனவே மேற்சொன்ன உங்கள் தரக்குறைவான காமெண்டுக்கு என்னிடம் சொல்ல ஒன்றுமில்லை. உங்கள் பாஷயில் சொல்லப்போனால், உங்கள் “தர்க்கரீதியான” வாதத்தை பார்த்து அஞ்சி, ஜல்லியடிக்க முடியாமல் , தலை கவிழ்ந்து விட்டேன்.

-“இணையத்தின் ஒரே பிராமண துவேஷி என்று உங்களால் பட்டம் சூட்டப்பட்ட”

மூக்கன்

19. yetone - Saturday January 15, 2005

looks like the goal and intention of Anonymous is fulfilled. Way to go anonymous!

20. Sannasi - Tuesday January 25, 2005

looks like the goal and intention of Anonymous is fulfilled. Way to go anonymous!

– I Agree 100%


Sorry comments are closed for this entry

%d bloggers like this: