jump to navigation

எதுவும் தோன்றவில்லை Wednesday December 29, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இயற்கையின் எதிர்பாராத சீற்றத்தினால் மாண்ட உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி, பிழைத்தவர்களின் சிதைந்த வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் உதவி செய்வதுதான் முக்கியமாகப்படுவதால், பைத்தியக்கார வியாக்கியானங்களைக் கண்டுகொள்ளாமல் போவதே சரியான செயலாக இருக்க முடியும்.ரமணி எழுதியது:

——-

5. இனியும் தொடராக, ஆனால், சிறிய அளவிலே நடுக்கத்தின் பின்விளைவு எதிரொலிக்கும்; ஆனால், அ·து பெருமளவிலே உயிர்கொல்லுமளவிலே இருக்கப்போவதில்லை. இனி அப்படியேதும் உயிர்கொல்லும் நிலையின் நிலநடுக்கமும் ஊழியலையும் வருமானால், அது கொல்லவேண்டியவர்கள் யார் யார் என்ற பட்டியலிலே அடங்கும் சிலர்:

  1. “கொட்டாஞ்சேனை ஆஞ்சநேயர் இது நடக்கமுதல்நாள் ஒற்றைக்கண் திறந்து பார்த்தார்” என்கிறவர்கள்
  2. “ஸ்ரீரங்கம் கோபுரம் உயர்ந்து போனதாலே” என்கின்றவர்கள்
  3. “அல்லாவின் அல்வாக்கூத்து, அல்லேலுயாவின் பராட்டாகொத்து” என்கிற படுபாவிகள்
  4. “ஜெயேந்திரரைப் புடிச்சதால தெய்வக்குத்தம்; வீரப்பனைச் சுட்டதால வீரமாகாளி ஆவேசம்” என்று விபரீதமாக விக்கெட்டு வீழ்த்துகின்றவர்கள்
  5. “எண் சாத்திரப்படி வந்த இழவு” என்று எதிர்காலத்துக்கும் இழவுக்குறி எடுத்துச் சொல்கின்றவர்கள் & செல்கின்றவர்கள்
  6. “நொஸ்ரடாம், காண்டம்” என்ற உசாத்துணை அகவுகின்ற கிளிகள்
  7. “திருவாதிரை நட்சத்திரத்திலே வைகை பெருகி பிட்டுக்கு மண்சுமந்த நாளிலே, இந்தக்கடல்…..” என்று அறிவியல் சாராமல் முழுக்க முழுக்க காகம் குந்தியதும்-பனம்பழம் கழண்டதும் கதை சொல்கிற ஆசாமிகள்

ஆதிரைநாளிலே தீர்த்தமாடிய காரைநகர் சிவன் கோவில் காரர்களுக்கும் மோட்சவிளக்கு; முல்லைத்தீவிலே தேவாலயத்திலே யேசு பிறந்ததைக் கொண்டாடியவர்களுக்கும் இறப்பு; நிந்தாவூரிலோ, காத்தான்குடியிலோ மதராஸிவிலே குரான் ஓதிக்கொண்டிருந்த நாற்பது சிறாருக்கும் அதே(¡)கதி; கடவுளையும் எண்கணக்கையும் இழுத்து உள்ளாற அமைதிப்படுத்திக்கொள்ளாலாம்; ஆனால், அதுவே தீர்வாகாது; கொடுத்தவன் எடுத்தான் என்பது அரூபத்தீர்வாகலாம்; நடைமுறைக்கு அடுத்த நிலைக்கு என்ன வழி என்பதைக் காணவேண்டும்.

——-

நடைமுறைக்கு ஒத்து வரும் செயல்களைப்பற்றி மட்டும் பேசினால் உருப்பட்டுவிடுவோம்.

Advertisements

Comments

1. துளசி கோபால் - Wednesday December 29, 2004

அன்புள்ள பரி,

எதுக்கு நம்ம வாயாலே இப்படியெல்லாம் சொல்லணும்? அவுங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.

இந்த பிதற்றல்களையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தவே கூடாது. நம்மால முடிஞ்ச உதவிங்களை

ஆத்மார்த்தமா செய்யறதுதான் உண்மையான சேவை இல்லையா?

இனிமேலும் இப்படி ஏதாவது நடந்தா, அதிலிருந்து எப்படி நம்மைக் காப்பாத்திக்கணும்ன்னு ஜனங்களுக்கு

ஒரு தெளிவு வரமாதிரி ஒரு பயிற்சி முகாம் நடத்தவும், இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசாங்கம்

மட்டுமில்லே, பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏதாவது செய்து, வருங்காலத்தைப் பத்திரமானதா

ஆக்கிக்க ஏற்பாடு செய்யணும்.

அதே சமயம், இப்ப இந்த இக்கட்டுலே இருந்து தப்பிச்சவங்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும்

கொடுக்கணும்.

2. MKBala. - Sunday January 2, 2005

We should see it as as a costly lesson.

As we know Japan and US has Tsunami monitor or alert system and checklist of To Do’s.

Though in India probability of certain occurances are less and are of less priority projects, certain mitigating measures ( like communication, awareness etc) should be planned for similar high impact possibilities.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: