jump to navigation

கருத்து கந்தசாமிகள் Monday November 22, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மனிதனாய்ப் பிறந்த அனைவருமே ‘கருத்து கந்தசாமிகள்’தான். எல்லாருக்கும் எதைப்பற்றியும் கருத்து எதாவது இருக்கும். அது நல்லதோ, கெட்டதோ, முத்தோ, சொத்தையோ எதோ ஒரு வகையில் ‘கருத்து’தான். அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற மாதிரியும் சார்பு நிலைகளுக்கேற்ற மாதிரியும் எதாவது ஒரு பக்கம் சாய்ந்தே தான் இருக்கும். நடுநிலைமை என்று ஒன்று இருக்கிறது என்ற என் எண்ணத்தை பல முறை மறுபரிசீலனைச் செய்திருக்கிறேன். அதுபற்றி இன்னும் தெளிவான நிலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரச்சினை என்னவென்றால், நம் கருத்து கந்தசாமிகளிடம், கருத்து சொல்லும் அளவுக்கு சரக்கு இருக்கிறதா என்று பெரிய கேள்விக்குறி எழுகிறது எனக்கு. எதையும் படித்துத் தெரிந்து கொண்டு(தெரிய வேண்டிய அளவுக்காவது) கருத்து சொன்னால் கொஞ்சம் சரியாக இருக்கும். அதெல்லாம் முடியாது, நான் ‘தையத்தக்கா’, ‘டண்டனக்கா’ என்று குதிப்பேன் என்றுதான் குதிக்கிறார்கள்.

இன்னொரு பிரிவு கந்தசாமிகள் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். படித்துத் தெரிந்து கொண்டு, அதைத் திரித்து எழுதுவதே பொழுதுபோக்கு. தன் சார்பு நிலையை அப்பட்டமாகக் காண்பிக்க நொண்டி சாக்கெல்லாம் சொல்லியாவது, ‘கல் தோன்றி மண் தோன்றா’ காலத்தே எழுதி வைத்துவிட்டுப் போனதுதான் என்றைக்குமே சரி, அதை மறுபரிசீலனை செய்யவோ, தூக்கிக் குப்பையில் போடவோ முடியாது என்று உயிரைக் கொடுத்து வாதாடுவார்கள். துணைக்கு ‘கலாசாரம்’ என்ற -வரையறுக்க முடியாத- வார்த்தையை எடுத்துக் கொள்வார்கள்.

எல்லாத்தையும் பாக்க ரொம்ப காமெடியா இருக்குதுங்க. யாருங்க சொன்னா, நமக்கெல்லாம் நகைச்சுவை உணர்வே இல்லேன்னு?

அப்டியே தமிழ் இணையம் பக்கம் ஒரு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா….ஐயையோ, வேணாம்! இன்னொரு கருத்து கந்தசாமிய உருவாக்கினன பாவம்(?!) என்னைச் சேரும்!!

இப்படிக்கு,

கருத்து கந்தசாமி

Advertisements

Comments

1. காசி - Monday November 22, 2004

குழப்பல் கோயிந்சாமிகளுக்கு கருத்து கந்சாமிகளே பரவால்லேப்பா;-)

என்னதான் சொல்லவர்றீங்க இப்ப?

2. karthikramas - Monday November 22, 2004

🙂 🙂

3. மூக்கன் - Monday November 22, 2004

பரி அண்ணாச்சி எழுதற பாதி விஷயங்கள் இப்ப எல்லாம் புரியவே மாட்டேங்க்து. Intentional ஆக குழப்புகிறாரா இல்ல எழுத்தே அப்படித்தானா..??

தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா…!!!

4. பாலாஜி சுப்ரா - Monday November 22, 2004

கருத்து கந்தசாமிகளா… கத்து கந்தசாமிகளா…

(யாராவது கத்தறதுக்கு முன்னாடி, டைப்போவை சரி பண்ணிடுங்க பரி 😛

5. மூர்த்தி - Monday November 22, 2004

ஹலோ மைக் டெஸ்டிங்க்..ஒன் டூ த்ரீ..எனதருமைப் பொதுமக்களே…இங்கு கூடியிருக்கும் சான்றோரே… முதுகெலும்பில்லா ஜால்ராக்களே..எனதருமை உடன்பிறப்புக்களே…(யாருப்பா மைக்க ஆப் செஞ்சது?)

6. Balaji-paari - Tuesday November 23, 2004

pari, customized service ellaam panreengalaa enna? 😉 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: