jump to navigation

கை கட்டி வாய் பொத்தி… Sunday October 31, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஒரு வாரம் இணையம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?

என்ன விளையாட்டா இருக்கா?

படிச்சி முடிச்சி வேலை செய்ய ஆரம்பிச்சதுலேர்ந்தே இணையமும் நானும் நகமும் சதையும் போல(cliche?). ஒரு நாள் இல்லாம இருக்கறதே பெருசு, இதுல ஒரு வாரமா? நடக்கிற காரியமா?

என்னத்த பெரிய இணையம்? இது இல்லாம இருக்க முடியாதா என்ன? சரி, இருந்து பாக்கலாம்.

ஒரு மணி நேரம் ஆச்சு. கை நைசா “my groups” பக்கமும் தமிழ்மணம் பக்கமும் போகுது. போச்சு! எல்லாமே போச்சு!

சரி இன்னிக்கு விட்டுடலாம். நாளைலேர்ந்து பாத்துக்கலாம்.

வெள்ளிக் கிழமை விடியுது. மறுபடியும் அதே கை; அதே வேலை.

இது வேலைக்காவாது. இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. “எல்லா” குழுக்கள்லேர்ந்தும் வெளில வந்துட்டா?! அது மட்டும் போதுமா? browser-ல History, bookmarks எல்லாத்தையும் தூக்கு!

ஆச்சு. தொடச்சி வச்ச சிலேட்டு மாதிரி ஆச்சு.

அப்பாடா நிம்மதி!

இணையம் தூங்கி வழிஞ்சாலும் சரி, பத்திக்கிட்டு எரிஞ்சாலும் சரி, ஒரு வாரத்துக்குக் கவலை இல்லை!

கண்ணுக்கு முன்னாடி என்ன நடக்குதோ அது போதும்.

செயிண்ட் லூயிஸ் கார்டினல்ஸ்(Cardinals), பேஸ் பால் இறுதிப் போட்டியில பாஸ்டன் ரெட் சாக்ஸ்(Red Sox) கூட விளையாண்டாங்க. இது ஒரு பேஸ் பால் டவுன்(baseball town). ஊர் முழுக்க ரத்த ஆறு ஓடிச்சி! அட அடிதடி எல்லாம் இல்லீங்க. பேஸ்பால் அணி பேரான கார்டினல்-ங்றது சிவப்பு நிறப் பறவை. எங்க திரும்பினாலும் ஒரு சிவப்பு; ஆ·பீஸ்க்குள்ளாற கூட. ஒரு வழியா கேவலமா தோத்துட்டாங்க.

முதல் மூணு நாள் சொந்த மெயில் டப்பாவ கூடத் தெறக்கல. அப்புறம் ‘அத்தியாவசிய’ தேவைகளுக்காக, அத மட்டும்(பில் எல்லாம் கட்டணுமே.) ஒரு நாளைக்கு ஒரு தரம் பாக்றதோட சரி.

ஒரு வாரத்துக்கு மேலயே ஓடிடிச்சி. முடியும்னு நெனச்சா முடிக்க முடியும் போல.

இப்போதான் தூங்கி எந்திரிச்சா மாதிரி இருக்கு. கண்ண தொடச்சிக்கிட்டு குழுக்கள் கதவ தட்டணும். தமிழ்மணத்துக்குப் போவணும்.

ஆனா, ஒண்ணு மட்டும் பண்றதா இல்ல. எதோ பெண்டிங் ·பைல்ஸ் பாக்கற மாதிரி இது வரைக்கும் நடந்ததையெல்லாம் படிக்கப் போறதில்ல.

Advertisements

Comments

1. Ramani - Monday November 1, 2004

ஒரு வாரம் இணையத்தோட இணையாம இருக்கறதே இவ்ளோ கஷ்டமா இருக்கா.. ஆனாலும் இப்படி விஷப்பரிட்சையெல்லாம் எதுக்கு பண்றீங்க.. இணையத்து அண்ணா, அக்காவையெல்லாம் பார்க்காம இருக்கு எப்படி மனசு வந்துது? 😉

2. KVR - Monday November 1, 2004

சப்ப மேட்டரு.

நா இந்தியா போனா ஒரு மாசத்துக்கு அந்தப் பக்கமே (இணையம்) போறது இல்ல. நமக்கு அங்கே அத விட முக்கியமான வேலைங்க இருக்கு 😉

3. காசி - Monday November 1, 2004

KVR, இந்தியாவில் போய் அப்படி இருக்கறது பெரிசில்ல, இந்த தேசத்தில் இருக்கறதுதான் கஷ்டம். ‘சப்ப மேட்ட’ரில்லை இது.

பரி, ஒருவாரத்துக்கப்புறம், ‘ஏண்டா இப்படிப் பண்ணினோம்’னு இருக்கா, இல்ல, ‘ஏன் ஒருவாரத்தோட விட்டோம்’னு இருக்கா, அதைச் சொன்னாத்தானே முத்தாய்ப்பு?

4. பரி - Monday November 1, 2004

ரமணி,

‘சிலந்தி ரமணி’ன்னு போடுங்க 🙂

KVR,

காசி சொல்றா மாதிரி இந்த ஊருல ‘வனவாசம்’ போக வாய்ப்பே இல்லை.

காசி,

(ஒரு வருஷத்துக்கு முன்னாடி) ‘ஏண்டா இந்தப் பக்கம் வந்தோம்’னு இருக்கு 🙂

5. prakash - Monday November 1, 2004

ஆனாலும் உங்களுக்கு ‘வில் பவர்’ சாஸ்திதானுங்க 🙂

6. Raviaa - Saturday November 6, 2004

//ஒரு வாரம் இணையத்தோட இணையாம இருக்கறதே இவ்ளோ கஷ்டமா இருக்கா.. ஆனாலும் இப்படி விஷப்பரிட்சையெல்லாம் எதுக்கு பண்றீங்க//

//பரி, ஒருவாரத்துக்கப்புறம், ‘ஏண்டா இப்படிப் பண்ணினோம்’னு இருக்கா, இல்ல, ‘ஏன் ஒருவாரத்தோட விட்டோம்’னு இருக்கா, அதைச் சொன்னாத்தானே முத்தாய்ப்பு?

//

நல்லா இருந்த என் புருசனை இப்படியெல்லாம் சொல்லியே கெடுத்திடிங்களாடா பாவிகளா !!

திருமதி ரவியா !!

திருமதி ரவியா !!


Sorry comments are closed for this entry

%d bloggers like this: