jump to navigation

இரண்டு டாலர் நோட்டு Tuesday September 28, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

கள்ள நோட்டுகளைத் தடுப்பதற்காக, உலகெங்கிலும் நோட்டுகளை(currencies) அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள்; ஒவ்வொரு முறையும் போலி நோட்டுகள் உருவாக்குபவர்களுக்கு சவால்விடும் வகையில் பாதுகாப்பு விஷயங்களை உயர்த்திக் கொண்டே.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக முன்னேறும் இந்தக் காலத்தில், போலிகளைத் தயாரிப்பது ஓரளவுக்கு சுலபமானதாகவே(அதாவது, அந்தத் தொழில் செய்பவர்களுக்கு) இருக்கிறது. ஆகவே, இத்தகைய முன்னேற்றங்கள் அவசியமாகிறது.

அமெரிக்காவில் இன்று, புதிதாக வடிவமைக்கப்பட்ட $50 நோட்டை புழக்கத்திற்கு விட்டிருக்கிறார்கள்.

பேச வந்தது அதைப்பற்றியல்ல(ஆரம்பிச்சிட்டாண்டா!). ஒரு Associated Pressசெய்தியைப் படித்த போது(சுட்டியைத் தேட பொறுமையில்லை), “$1, $2 நோட்டுகள் இப்போதைக்கு மாற்றப்பட மாட்டாது.” என்று இருந்தது.

ஒரு டாலர் நோட்டு சரி, இரண்டு டாலர் நோட்டு? இதுவரைப் பார்த்ததே இல்லையே! கொஞ்சம் புருவம் நெளிய வைத்தது.

விவேக், ஒரு படத்தில்(எதோ, ஒரு குப்பை பிரசாந்த் படம்), ஃபோன் பண்ணிவிட்டு, 19 ரூபாய் நோட்டைக் கொடுப்பாரே அது மாதிரி இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அந்த நேரத்தில் இது ஞாபகத்துக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அப்புறம் தங்கர் பச்சான் எழுதிய “ஒன்பது ரூபாய் நோட்டு” நாவலும்தான்(ஐ, சந்தடி சாக்குல ‘இலக்கியவாதி’களுக்கு தீனி போட்டாச்சு!).

தோண்டிப் பார்க்கும் புத்திதான் இருக்கவே இருக்கிறதே, அது சும்மா விடுமா? தோண்டிப் பார்த்ததில், இரண்டு டாலர் நோட்டு கிடைத்தது. போலி எல்லாம் இல்லை, அசல். அச்சடிக்கும் இடத்திலேயே படம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்; பாருங்கள்.

© Bureau of Engraving and Printing

(மேலும் நோட்டுகளைப் பார்க்க, படத்தின் மேல் சொடுக்கவும்.)

நான் இது வரைப் பார்த்ததே இல்லை.

இன்னாள், முன்னாள் அமெரிக்க வாழ் மக்களே, நீங்கள் இந்த இரண்டு டாலர் நோட்டைப் பார்த்ததுண்டா?

Advertisements

Comments

1. desikan - Wednesday September 29, 2004

I too have a 2 dollar note!. It was given to me as a gift by some one 🙂

./desikan

2. சுந்தரவடிவேல் - Wednesday September 29, 2004

நான் பாத்ததில்லை.

ஆனா அம்பது ரூவா நோட்டு செய்திய பேங்குல பாத்தேன், அதுல இருக்க பந்தோபஸ்தைப் பாத்தேன். catch me if you can (?) காரன் ரொம்பக் கஷ்டப் படுவானோ?!

3. Keshavrajan - Wednesday September 29, 2004

i have a two dollar note and it got it from a coffee shop and i was surprised to see it. so, now it went into my collection 🙂

4. Mathy Kandasamy - Wednesday September 29, 2004

எங்கிட்ட ஒண்ணு இருக்கு. முதல்ல என்னடா இது நம்மள ஏமாத்துறாங்களான்னு பார்த்தேன்.(சைனா டவுனில்). இப்ப பெட்டியில் தூங்குது அது. 😉

5. கிறுக்கன் - Tuesday October 5, 2004

ஏம்பா நீ சும்மா இருக்கமாட்டியா? ஏன் இதுல தங்கர் பச்சானை இழுக்குற.சும்மாவே அந்த ஆளு தலை கணத்துல ஆடுவாரு, இப்ப நீ வேற இலக்கியவாதினு சொல்லிட்டியா கேட்கவே வேணாம்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: