jump to navigation

புரியக்கூடாமல் ஒரு பதிவு Friday August 27, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ரோட்டோரமாய் ஓரளவுக்குப் பெரிய பாறாங்கல் கிடக்கிறது. எத்தனை காலமாக கிடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தெரிந்து கொள்ள விருப்பமில்லை என்பதே உண்மை. கேவலம் பாறாங்கல் தானே. கால் கடுக்க நடந்து வருவோர் சிலர் அதன் மீது அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அவர்கள் பாரத்தோடு, அவர்கள் இறக்கி வைக்கும் மூட்டைகளின் பாரத்தையும் சேர்த்தே சுமக்கும்.

சாணத்தை மிதித்த சிலர், அந்தப் பாறாங்கல்லின் மீதுத் தேய்த்து, தங்கள் கால்களைச் ‘சுத்த’ப்படுத்திக் கொண்டு போய்விடுவார்கள். சாணம் காய்ந்து, உதிர்ந்து விழும் வரையில் ஒட்டிக் கொண்டிருக்கும். அதிர்ஷ்ட வசமாக மழை பெய்தால் கரைந்து போவது விதி விலக்கு.

இன்னும் சிலர் பாறாங்கல்லுக்கருகில் நின்று ஊர்க்கதை பேசுவார்கள். ஒரு காலைத் தரையிலும் இன்னொரு காலை கல்லின் மேலும் வைத்து ஒரு மாதிரி ‘போஸ்’ கொடுத்துக் கொண்டே பேசுவார்கள். அதில் அப்படி என்னத்தைத்தான் சுகத்தைக் கண்டார்களோ தெரியாது.

ரோட்டின் நடமாட்டம் அனைத்தையும், எல்லார் காலடிச் சத்தங்களையும் கவனித்துக் கொண்டு இருக்கிறது. நடந்து செல்வோரின் பேச்சுகளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதற்குப் புரிகிறதா இல்லையா, அதனால் அதற்கு லாபமா நஷ்டமா என்று சொல்வதிற்கில்லை.

ஆரம்பத்தில் என்ன நிறத்தில் இருந்ததோ தெரியாது, ஆனால், இப்போது இருக்கும் நிறமாக இருந்திருக்க முடியாது என்பதுவும் தொடர்ந்து இதே நிறத்தில் இருக்காது என்பதுவும் நிச்சயம். மழை வெயில் என இயற்கைக் காரணிகள் அதன் நிறத்தை மாற்றியிருக்கும், இனியும் மாற்றும். ஆனால், அவை மட்டும்தானா.

Advertisements

Comments

1. மூக்கன் - Friday August 27, 2004

என்ன ஆச்சு குதிரை அழகரே…

நவீன இலக்கியவாதியாய் ஆகி வருகிறீரா…

பொழப்பப் பாருமய்யா..:-)

2. KVR - Saturday August 28, 2004

கவுத எளுத ட்ரை பண்றியா சாரே??

அப்டியே ஒவ்வொரு வரியும் நாலா ஒட்ச்சிப் போடு, சோக்கா நவீன கவுத வரும்.

3. சுந்தரவடிவேல் - Saturday August 28, 2004

“சாட்சியாய் இரு”ன்னு கேள்விப் பட்டிருக்கேன். கல்லு அப்புடித்தான் இருக்கு போலருக்கு.

அப்புறம், அந்தரத்துல சுழன்று கூழாங்கல்லாக் கரஞ்சு மண்ணாப் போறதப் பத்தி ஒன்னும் சொல்லலியே!

4. பரி - Monday August 30, 2004

புரியாதுன்னுதான் நானே சொல்லிட்டேனே, எதுக்கு எல்லாரும் இவ்ளோ கஷ்டப்படறீங்க? 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: