jump to navigation

என் பார்வையில் ஏதோ கோளாறு Monday August 23, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

வலைப்பதிவுகள் என்றால் என்ன, அதன் வசதி என்ன, சாதக பாதகங்கள் என்ன, வலைப்பதிவர்கள் எந்த நோக்கத்திற்காக வலைப்பதிகிறார்கள், வலைப்பதிவில் என்னென்ன பதிக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய விவாதங்கள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன; இனியும் நடக்கும். இவை எல்லாமே மின்வெளியில் உலாவும் சிறுபான்மையினருக்குப் பரிச்சயம்.

பெருவெளியில், அதாவது எழுத்து சம்பந்தப்பட்ட பெருவெளியான பத்திரிகை உலகத்தில் -இணைய எழுத்துலகுக்கு 8ம் பொருத்தம் என்று அவர்களே கற்பனை செய்து கொண்ட உலகத்தில்- என்ன நடக்கிறது என்று ஒரு சிறு பார்வை பார்க்கலாம்.

திடீரென்று என்ன ஞானோதயம் பிறந்தது என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. ‘சுவடு’ ஷங்கரின் இந்தப் பதிவுதான் காரணம்.

சரி விஷயத்துக்கு வருவோம். தமிழ் வலைப்பதிவுகள் இன்று ஓரளவுக்கு நல்ல எண்ணிக்கையில் இருக்கின்றன. ஆரம்பத்தில் தமிழில் வலைப்பதிய பல பிரச்சினைகள். இவற்றைச் சமாளிக்க, பரஸ்பரம் உதவிக்கொள்ள சில ஆர்வக்கோளாறுகள் சேர்ந்து tamilblogs என்ற யாஹூ குழுமத்தைத் தொடங்கி இயங்கி வருவது தெரிந்திருக்கலாம். இது நடந்தது சென்ற ஆண்டு அக்டோபர் மாதம்.

சென்ற ஆண்டு நவம்பரில் தினமலரில் வெளியான வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் இது:(tamilblogs குழுமத்தில் கோப்புகள் பகுதியில் கிடைக்கும்.)

வட அமெரிக்காவில் வெளிவரும் பத்திரிகை தென்றல். தரத்திலும் நேர்த்தியிலும் தமிழக வெகுஜன பத்திரிகைகளைவிட…. இதற்கு மேல் உங்களுக்குப் புரிந்திருக்கும். தென்றலில் இந்த ஆண்டு ஜூன் மாதம், மணி. மணிவண்ணன் கொடுத்த அறிமுகம் இது:

இந்த வாரம் ஆனந்த விகடன் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் சுஜாதா கொடுத்த அறிமுகம் இது:

இன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ்டில்கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம்தான் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’, ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்.

இது கொஞ்சம் பெரிய இடத்து சமாச்சாரம். ‘தி இந்து’ நாளேட்டின் சமீபத்திய “தலையங்கம்” வலைப்பதிவுகள் பற்றியது.(தமிழ்நாட்டிலிருந்து வருகிறதே என்று தமிழ்ப்பதிவுகளைப்பற்றியும், இந்தியாவின் தேசியப் பத்திரிகையாயிற்றே என்று இந்தியப் பதிவுகளையும் பற்றித் தேடிக்கொண்டிருக்கும் அப்பாவியாக இருக்காதீர்கள்.)

நான்கு அறிமுகங்களில் எது சிறந்தது என்று சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யலாம்.

அட வந்ததுதான் வந்துட்டீங்க இதையும் படிச்சிட்டுப் போங்களேன்!

“இணையத்தால் தகவல்தான் கிடைக்கும்; அறிவு அல்ல!”

“அப்படியா?!”நான் ஒரு புலம்பெயர்ந்த(தற்காலிகமாத்தான்) நக்கீரப் பரம்பரை ஆசாமி – சும்மா தகவலுக்காக.

Advertisements
%d bloggers like this: