jump to navigation

கொஞ்சம் நிக்கறீங்களா? Wednesday August 18, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

நீங்கள் தினசரி எதையாவது வாசிக்கும் பழக்கமுடையவர்கள்தானே? செய்தித்தாள், புத்தகம், இணையப்பக்கம் என்று எதையாவது தினசரி வாசிக்கிறீர்கள். அப்படி வாசிக்கும்போது, ஒரு வாக்கியமோ, பத்தியோ முதல்முறை வாசித்தபோது புரியாமல் முறை இரண்டாம் முறை வாசித்த அனுபவம் உண்டா? எனக்கு நேர்ந்திருக்கிறது; பலமுறை. பெரும்பாலான நேரங்களில் நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமல் ஒரே மூச்சில் படிப்பதனால் நடப்பது. படிப்பவரின் ஓட்டத்தை சற்றே நிறுத்த அங்கங்கு போடப்படும் வேகத்தடைகளான நிறுத்தக் குறிகள்(punctuation marks) இல்லாததுதான் பெரும்பாலும் காரணமாக இருக்கும்.

ஆங்கிலத்தில் எந்தக் குறிகளை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தனி இலக்கணமே இருக்கிறது. நேர்த்தியான எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், AP, AFP, Reuters போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் படித்தாலும் இவற்றை நீங்கள் காணலாம்.

தமிழில் அந்தக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதியதால் ஒற்றெழுத்துக்குப் புள்ளி வைக்கக் கூட ஆணியால் குத்தவில்லை. அதனால் நிறுத்தக் குறிகளுக்கென்று அந்தக் காலத்தில் இலக்கணம் எதுவும் எழுதவில்லை. காலப்போக்கில் கருத்துத் தெளிவுக்காக நிறுத்தக் குறிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. நேர்த்தியாக அச்சிடப்பட்ட(அட்டைப்பட நேர்த்தி இல்லை!) தமிழ்ப்புத்தகங்களில் நிறுத்தக்குறிகளின் பயன்பாட்டை, வாசிக்கும்போது ஆழ்ந்து கவனித்தால் தெரியும்.

சரி, நிறுத்தக் குறிகளுக்கான தமிழ்ப் பெயர்கள் தெரியுமா உங்களுக்கு? தெரியாதவர்களுக்காக, பெரும்பாலும் உபயோகிக்கப்படும் நிறுத்தக்குறிகளை மட்டும் இங்கு தருகிறேன்.

காற்புள்ளி(comma) – (,)

அரைப்புள்ளி(semi colon) – (;)

முக்கால் புள்ளி (colon) – (:)

முற்றுப்புள்ளி(full stop, period) – (.)

ஒற்றை மேற்கோள்குறி(single quote) – (‘)

இரட்டை மேற்கோகுறி(double quote) – (“)

கேள்விக்குறி(question mark) – (?)

ஆச்சரியக்குறி(exclamation mark) – (!)

இணைப்புக்கோடு – (-)

பிறை/நகவளைவு அடைப்பு(bracket) – ( )

சதுர அடைப்பு(square bracket) – [ ]

நெளி அடைப்பு(curly bracket) – { }

அடைப்புக்குறிகளின் இறங்கு வரிசை: { [ ( ) ] }

பத்திரிகை உலகில் படைப்புகளை சீர் செய்ய இணையாசிரியர்கள்(பெயர் சரிதானா?) இருக்கிறார்கள். ஆனால், இணையத்தில் பெரும்பாலும் நீங்கள் அனுப்பியது அனுப்பியபடியே பிரசுரிக்கப்படுகிறது. அதனால் உங்கள் படைப்புகளில் நிறுத்தக்குறிகளை சரியாகப் பயன்படுத்தும் பொறுப்பு உங்களையேச் சேர்கிறது. அதனால், இதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். இது எதோ கதை, கட்டுரைக்கு மட்டுமல்ல, அன்றாடம் அலுவலகத்தில் உபயோகிக்கும் மின்மடல்களுக்கும் உபயோகமாகும்.

முக்கால்வாசி பேர் இரட்டை மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துவதில்தான் படுத்துகிறார்கள்.

” அவனா சொன்னான் ? “ – இது எப்படி இருக்கிறது தெரியுமா? ‘தொள தொள’வென்று சட்டை போட்டது மாதிரி!

”அவனா சொன்னான்?“ – இது எப்படி இருக்கிறது? சிக்கென்று சிம்ரன் மாதிரி இருக்கிறதா?(கேள்விக்குறிக்கு முன்னால் இருந்த இடமும் காணாமல் போனதைக் கவனித்தீர்களா?)

பொதுவாக நிறுத்தக்குறிகள் வார்த்தையை ஒட்டியே வரவேண்டும். நிறுத்தக்குறியை அடுத்து(மேற்கோள் குறி ஆரம்பம் நீங்கலாக) கண்டிப்பாக ஒரு இடம் விட வேண்டும்.

சிலர் இருக்கிறார்கள், வாசகர் ஆச்சரியப்பட வேண்டும் என்று பயங்கரமாக ஆச்சரியமோ ஆச்சரியப்படுவார்கள்!!!!!! அதே மாதிரி ஏன்? ஏன்? ஏன்????? என்று பயங்கரமாக கேள்வி கேட்பார்கள்.

ஒரு ஆச்சரியக்குறி இட்டாலும், வாசிப்பவர் அந்த இடத்தில் ஆச்சரியமடைவார். ஒரு கேள்விக்குறி இட்டாலும், வாசகரும் கேள்வி கேட்பார். அதனால் முடிந்த வரை ஒன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதிகம் தேவைப்பட்டால் மூன்றோடு நிறுத்திக் கொள்ளுங்களேன்!!!

(கொசுறு: ஆச்சரியம் கலந்த கேள்வி என்றால், ‘அப்படியா சொன்னான்?!’ என்று சொன்னால் இரண்டு உணர்ச்சிகளுமே வந்துவிடும்.)

இன்னுமொரு உறுத்தலான சமாச்சாரம் மேற்கோள் குறியும் முற்றுப்புள்ளியும் சேர்ந்து வரும்போது எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலிருப்பது.

”சொல்லுங்கள், கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்“. – இப்படி முற்றுப்புள்ளியை தனியே தவிக்கவிடாமல்,

”சொல்லுங்கள், கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.“ – இப்படி அரவணைத்துக் கொண்டால் அது சந்தோஷப்படும்.

கடைசியாக பாத்திரங்கள் ‘நினைக்கும்’ சமாச்சாரத்தை சொல்லி அறுவையை (தற்போதைக்கு) நிறுத்திக் கொள்கிறேன்.

”சரியான இம்சையான ஆள்,” என்று நினைத்தார்கள். – என்னைப்பற்றி நீங்கள் நினைப்பது பற்றியல்லவா சொல்கிறது இது?

பாத்திரங்கள் பேசுவதற்கும், நினைப்பதற்கும் இரட்டை மேற்கோள் குறிகளையே பயன்படுத்தினால், எப்போது பேசுகிறார்கள், எப்போது நினைக்கிறார்கள் என்று வித்தியாசம் தெரியாமல் போய்விடும். அதற்குத்தான் இருக்கிறது ஒற்றை மேற்கோள் குறி.

‘சரியான இம்சையான ஆள்,’ என்று நினைத்தார்கள். – இப்படி பாத்திரங்கள் ‘நினைக்கும்’ சமாச்சாரங்களுக்கு ஒற்றை மேற்கோள் குறி பயன்படுத்த வேண்டும்.

நிறுத்தக்குறிகள் எழுத்தை மெருகேற்றுபவை. என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிக முக்கியம். அவற்றை சரியாகப் பயன்படுத்தி உங்கள் படைப்புகளை மெருகேற்றுங்கள்.

இதைப்படித்துவிட்டு, இதற்கெல்லாம் புத்தகம் எதுவுமில்லையா? என்று கேட்பவராக நீங்கள் இருந்தால், இந்தக் கடைசிப் பகுதி உங்களுக்காக.

புத்தகப் பெயர்: மொழி நடைக் கையேடு

பதிப்பாளர்: Mozhi: A Trust for Resource Development in Language and Culture

10, 24th East St

Thiruvanmiyur

Chennai – 41

விலை: ரூ.125

புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க:

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

Advertisements

Comments

1. S Krupa Shankar - Wednesday August 18, 2004

«¼î§º Àâ! ±ýÉ ¬îÍ? ±ýÉ À¾¢× þÐ þýÉ¢ìÌ? ´Õ ºñ¨¼ þø¨Ä, ´Õ ÁÚôÒ þø¨Ä, ´Õ ÅõÒ þø¨Ä? ̨Èó¾ Àðºõ ¸ÕòÐî ;ó¾¢Ãò¨¾Â¡ÅÐ Á¾¢ì¸ò ¦¾Ã¢Â §Åñ¼¡Á¡?  ! ¦º¡øħŠ¿¡ Ü͸¢ÈÐ. þôÀʦÂøÄ¡Á¡ «Îò¾Åí¸ÙìÌô ÀÂýÀ¼È Á¡¾¢Ã¢ ±øÄ¡õ ±Ø¾ÈÐ?

(þ¨Èô ¦À¡Õû «È¢óн÷¸)

2. Kasi - Wednesday August 18, 2004

Pari,

Very useful refresher. Keep it up.

Why don’t you supplement it with something specific to www. I mean smileys and their need, meaning, etc.?

(Don’t start tomorrow with direct speech vs. indirect speech…;-)

3. Kasi - Wednesday August 18, 2004

One more thing, the punctuation marks are not distinctly visible with the size of the font. Can you emphasize by eitehr putting a picture or a large font. Also, the quotes got lost in html blah…blah… Check and use NCR, maybe.

(appaadaa, ippaththaan nimmathi)

4. மூக்கன் - Wednesday August 18, 2004

எனக்காக எழுதினியா ராசா…

நெம்ப டாங்க்ஸ்.

5. sakaran - Wednesday August 18, 2004

நன்றி பரி,

ஒவ்வொருமுறை ஏதேனும் எழுதும் போதும், எனக்கு இந்த குழப்பம் வரும்.

மேலும், ; அரைக்கால் உபயோகிக்க வேண்டிய நேரம் எப்பொழுது என்பதில் பெரும் பிரச்சனையே வரும்.

அதை எப்படி உபயோகிப்பது என்று சொல்லுங்களேன்.

இந்த அடைப்பு குறிகள் எழுதுவதில் ஏதேனும் சீர் வழி இருக்கா?

6. Meenaks - Wednesday August 18, 2004

“உபயோகமான தகவலெல்லாம் சொல்றீங்க!!!!!!!!!

எப்போலேர்ந்து இப்படி??????????” என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

7. gyanadevan - Thursday August 19, 2004

கொஞ்சம் கஷ்டமான வேலையாத்தான் தெரியுது.. இருந்தாலும் சீக்கிரம் பழகணும். நன்றி.

8. பரி - Thursday August 19, 2004

காசி,

நீங்க நம்பியார் மாதிரி சிரிக்கறது கண்முன்னால தெரியுது. எதாவது பிரமையா எனக்கு? 🙂

எதிர்காலத்துல பண்றேன்(‘எதிர்காலம்’னா எப்போ?!)

மூக்கரே,

உங்களுக்காக(வும்) எழுதினேன் 🙂

சாகரன்,

ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வாக்கியங்களுக்கு நடுவுல அரைப்புள்ளி இடணும்; முற்றுப்புள்ளி இல்லை.

ஞானதேவன்,

கஷ்டமெல்லாம் இல்லை. முதல்ல இங்கிலீஷ்ல பழகுங்க, தமிழ்ல தானா வந்துடும்.

க்ருபா, மீனாக்ஸ்: அப்புறம் வச்சிக்கிறேன்.

9. ராதா - Thursday August 19, 2004

சென்ற முறை இப்புத்தகத்தைக் கோவையில் கொஞ்சம் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. 😦

10. சுந்தரவடிவேல் - Thursday August 19, 2004

இந்தக் குறிகளுக்கெல்லாம் ஒரு பெயர் இருக்காம்:

தரிப்புக் குறிகள்!

என்னிடமிருக்கும் புத்தகம் – “தமிழிற் தரிப்புக்குறிகளின் பயன்பாடு”. எழுதியவர் சி. சிவசேகரம். எக்ஸில் வெளியீடு, பிரான்சு.

இதைப் படிச்சதால ஒழுங்கா எழுதுறேனான்னு கேட்கக் கூடாது 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: