jump to navigation

சிவகாமியின் சபதம் – வாசக அனுபவம் Wednesday August 11, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

‘சிவகாமியின் சபத’த்தை முதல் ஐம்பது பக்கங்கள் படித்துவிட்டு ‘பொன்னியின் செல்வ’னை விட விறுவிறுப்பாக இருக்கிறது என்று எழுதினேன். சிலர் ‘வித்தியாசமான பார்வை’ என்றார்கள். முழுவதும் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கொஞ்ச நாள் கிடப்பில் போட வேண்டியதாயிற்று. பிறகு கொஞ்ச நாள் கழித்து தூசு தட்டி எடுத்துப் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க என்னுடைய ‘வித்தியாசமான பார்வை’ எனக்கேப் புலனாயிற்று. ஆரம்பத்தில் இருந்த சுறுசுறுப்புக் குறைந்து மந்தமாகச் சென்றது. நானும் விடாமல், வரும் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து படித்தேன். ஆயிரத்தி சொச்சம் பக்கங்கள் கொண்ட நாவலில் அங்கங்கே இப்படி இருப்பது சகஜம்தான் என்பதுவும் ஒரு காரணம்.

சிவகாமியை புலிகேசி சிறைபிடித்துச் செல்லும் வரை இருந்த ஓட்டம், பிறகு ‘எப்படா முடியும்’ என்று தேய்ந்து போகிறது. ஒரு வழியாக படித்து முடித்ததும் ‘அப்பாடா’ என்றுதான் உணர வேண்டியிருந்தது.

ஒட்டு மொத்த நாவலிலும் சட்டென்று ஞாபகத்துக்கு வரும் இடமென்றால், புலிகேசி காஞ்சி முற்றுகையைக் கைவிட்டு, காஞ்சி நகரைப் பார்க்கும் ஆவலில் மகேந்திரருடன் நட்பு கொள்வது மாதிரி நடித்து உள்ளே சென்ற பிறகு விருந்தாளிக்கு அளிக்கப்படும் கலைநிகழ்ச்சியில் சிவகாமி நடனமாடிய இடம்தான். இரண்டு பாடல்களை எடுத்துக் கொண்டு, சிவகாமி ஆடிய விதத்தை கண்முன்னே நிறுத்துகிறார்.

அடுத்ததாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, வாதாபி நகரைத் தாக்குதவதற்கு முன் தளபதி பரஞ்சோதி செய்யும் ஏற்பாடுகளின் விவரிப்பு, மற்றும் வாதாபியின் தாக்குதல்.

இவை தவிர அங்கங்கே சில இடங்கள் இருந்தாலும் படித்து முடித்த இரண்டு மாத கால இடைவெளியில் ஞாபகம் வர மறுக்கின்றன. இந்த நாவலுக்கு ஆயிரத்தி சொச்ச பக்கங்கள் தேவைதானா என்று கேட்டால் தீவிர கல்கி ரசிகர்கள் கல்லால் அடிப்பார்கள் 🙂

Advertisements

Comments

1. பாலாஜி - Thursday August 12, 2004

கல்கியின் மற்ற படைப்புகளையும் படித்து முடித்தாயிற்றா?

2. பரி - Friday August 13, 2004

இல்லை. பொ.செ அப்புறம் இது; அவ்ளோதான்.

எதுக்குக் கேக்கறீங்க?

3. பாலாஜி - Friday August 13, 2004

அடுத்து எதை ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று அறிந்து கொள்ளத்தான்… பார்த்திபன் கனவு, அலை ஓசை, தியாக பூமி??? 🙂

4. J. Rajni Ramki - Tuesday August 17, 2004

‘சிவகாமியின் சபதத்’திற்கே இப்படியென்றால் ‘தியாக பூமி’ இப்போதைக்கு வேண்டாம்!

5. பரி - Tuesday August 17, 2004

கல்கி போதும்னு நினைக்கிறேன் 🙂

6. S Krupa Shankar - Tuesday August 17, 2004

“À¡÷ò¾¢Àý ¸É×” ¦¸¡ïºõ §¾ÅÄ¡õ. ±ýÉ ´ýÛ, ¦À¡.¦º. ÀÊì¸ÈÐìÌ Óýɡʧ À¡.¸ ÀÊîÍ þÕó¾¡ þýÛõ ¿øÄ¡ þÕóÐÕìÌõ. ¬É¡ø À¡.¸. ºÃ¢ò¾¢Ã ¿¡Åøý¦ÉøÄ¡õ ¦º¡øÄÈÐ ¦¸¡ïºõ µÅ÷¾¡ý. ²§¾¡, ს á½¢ ¸¡ÄòÐ츨¾. «ùÅÇ×¾¡ý.

«ôÀÈõ Àâ, ¦º¡øÄ ÁÈóÐð§¼ý. º¢Å¸¡Á¢Â¢ý ºÀ¾òÐÄ “Ó¾ø À¡¸ò¾¢ø ÅÕõ” ÀÃ遼¡¾¢ Àò¾¢ ÁÈóÐðËí¸§Ç ¦º¡øÄ. «ÐÄÔõ ÀÃ狀¡¾¢§Â¡¼ À¡ø¸¡Ä „¡÷𠧿¡ðŠ. ÀÃ狀¡¾¢§Â¡¼ ¬º¢Ã¢Â÷¸û ‘¦º¡øĢ즸¡ûÇ¡¦Á§Ä µÊ’ þ¼ò¨¾ì ¸¡Ä¢ ÀñÏõ Å¢Åýõ. «Ð Ũà ¿¡Åø. «ôÀÈõ þÄ츢Âõ. 😉

7. பாலாஜி-பாரி - Wednesday August 18, 2004

எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது, பரஞ்சோதி ஓலை எடுத்து செல்வதும், மகேந்திரர் அவனை பின் தொடர்வதும்.

8. Àþœò - Saturday September 4, 2004

ðÓÖ —º‘òïÇò —œÖ×ò º¦´³Øª¨ ×‘ÁÇò œº°Å º¦´°°‘Ö ƒ¿º¦ —œ‘ÖŽëÑè ‡òì ¶€î™Žþéò. ƒþ° ðÓÖ ×‘ÁÇò œº°Å º¦´±Ï¹°‘Ö …›è Ï´³ þ×鑍 ƒÏ¹±Ï™Å.

9. மகேசன் இரா - Saturday September 4, 2004

முதலில் பொன்னியின் செல்வன் படித்துவிட்டு, சிவகாமியின் சபதம் படித்ததால் இப்படி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதே சிவகாமியின் சபதம் முதலில் படித்திருந்தால் உங்கள் கருத்து வேறாக இருந்திருக்கும்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: