jump to navigation

கணக்கு பண்ணுதல் Thursday June 10, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

நேத்திக்கு “21 Grams”-னு ஒரு படம் பாத்தேன். படம் படு சீரியஸ்; இதப்பத்தி இன்னொரு நாள்.

இப்போ சொல்லப்போறது படத்துல வந்த ஒரு காட்சி பத்தி.

ரெண்டு பேர் ஹோட்டல்ல சாப்டுக்கிட்டிருக்காங்க.(‘ரெண்டு பேரு’-ன்னு சொன்னதும், ஒரு ஆண், ஒரு பெண் ஹோட்டல்ல தனி டேபிள்-ல சாப்டற காட்சி உங்க கண் முன்னாடி வரலன்னா, உங்க கற்பனைத் திறன் பத்தி நான் எதுவும் சொல்றதுக்கில்ல.)

ரெண்டு பேர் -சம்பந்தமே இல்லாதவங்க- சந்திக்கிறதுக்கும் கணக்குக்கும் முடிச்சு போட்டு ஒரு வசனம் வரும்.(பேசினது ஆணா பெண்ணான்னு நான் சொல்லித்தான் தெரியணுமாக்கும்.)

“There’s a poem by Venezuelan writer, that starts with,

‘The earth turned

to bring us closer

It turned on itself; and in us

until it finally brought us together

in this dream’”

வசனம் தொடருது…

“There’s so many things that have to happen for two people to meet.”

இப்படி முடியுது…

“That’s what mathematics are”

காட்சி முடிஞ்சிப் போச்சு.

என்னடா யாரையும் “கணக்கு பண்ண” முடியலியேன்னு கவலப்படுறவங்க எல்லாரும்(ஆண் பெண் பேதமில்லாமல்!) தெரிஞ்சிக்க வேண்டிய நிதர்சனம் இது. நாம மட்டும் கணக்கு பண்ணினா போதாது. நம்ம கட்டுப்பாட்டுல இல்லாத பல கணக்குகளும் சரியா நடக்கணும்.

அதை இங்கே சொல்ல வேண்டிய கடமை எனக்கு 🙂

“அடப்பாவி, ஒரு சீரியஸான படத்த இப்படி காமெடி(?) பண்ணிட்டியே!”

“மகனே, பாத்துப் பேசு. பேத்துடுவேன்!

பேர் தெரியாத வெனிசுவேலா நாட்டு எழுத்தாளரோட கவிதைய போட்டிருக்கேன். யாருமே அத கவனிக்காம வேற எதையாச்சும் கவனிச்சா நானா பொறுப்பு?”

:-))

Advertisements

Comments

1. sundaravadivel - Thursday June 10, 2004

ரெண்டு மூனு நாளா இந்தாளு போற போக்கே சரியில்ல, ஆமா சொல்லிப்புட்டேன் 🙂

சரி, வந்ததுக்கு நம்ம ஃப்ளாப் படத்தையும் காட்டிட்டுப் போறேன்!

http://sundaravadivel.blogs

2. Kusumban - Thursday June 10, 2004

kanakkula naan pulinnu ippaththaan sundaravadivelidam sillittu vantha, intha “kanakkula” ELI’nnu solla vaccha PARIYE…(naRa naRa)

3. பரி - Friday June 11, 2004

சுந்தர்: இப்படிச் சொல்லிப்புட்டீங்களே :((

குசும்பரே, இங்கெயும் அதே கேஸ்தான். கூட்டணிக்கு வருக வருக 🙂

4. sundaravadivel - Friday June 11, 2004

அய்யய்யோ, எழுதும்போது கொஞ்சமும் யோசிக்காம எழுதுறதால வர்ற வினை இது. நீங்க ரெண்டு மூனு நாளா ஒரு ஜோர்ல திரியுற மாதிரி இருந்துச்சா அதான் அப்புடி எழுதினேன்!

அதாகப் பட்டது, என்னோட படம்தான் ஃப்ளாப் படம். உங்க படம் மூனு செண்டர்லயும் பிச்சுக்கிட்டு ஓடும் ராசா, கவலைப்படாதே சகோதரா, நடத்து…:)

5. பரி - Friday June 11, 2004

சுந்தர்: இவ்ளோ பெரிய அப்பாவியா நீங்க? :(( இப்டி ஒரு ஸ்மைலி போட்டுட்டா “அய்யய்யோ”-ன்னு அலறுறீங்களே! என்னமோ போங்க 🙂

6. S Krupa Shankar - Friday June 11, 2004

திடீர்ன்னு திருக்குறளாம், திடீர்ன்னு வெனிசுலா எழுத்தாளராம், திடீர்ன்னு மனக்குரங்காம், திடீர்ன்னு தத்துவமாம். பரி, சொன்னா கேக்கணும். அடம் பிடிக்கக்கூடாது. சொன்னா கேளு ராசா, அடம் புடிக்காதே. அய்யோ, சொன்னா கேளுங்க பரி, ஒத்துக்கோங்கன்னா ஒத்துக்கோங்க. வயசாகி ஆகிப் போய்க்கொண்டே இருக்கே?

(வந்து… நான் சொன்னது சீக்கரமா இன்ஷூரன்ஸ் இன்னொன்னு எடுத்துக்கச் சொல்லி. கல்யாணமயமா சொன்னேன்).

க்ருபா

7. Kusumban - Friday June 11, 2004

ஏம்பா கிருபா, முக்கியமா உதாசீனத்தை உதாசீனப்படுத்திட்டேளே…

அப்புறம் சுந்தர் கூட ராசா’ங்றார்

பரியப்பா…:-) smily ok. :-((( smily’nna idikkuthEy?

8. !!!!!!!!! - Tuesday June 15, 2004

«¼¼¡! ±ýÉÐ ¿£ñ¼ ¿¡Ùì¸ôÒÈõ ŧÃý

À¨Æ ÌÚõÒ¸û ¦¸¡ñ¼¡ð¼í¸û!!!!!

9. !!!!!!!!!! - Tuesday June 15, 2004

அடடா…..மீண்டும் பழைய குறும்புகள் கொண்டாட்டங்கள்!!!!!!!!!!

ம்……..தொடருங்கள்

10. karthikramas - Wednesday June 16, 2004

மிசெளரிகாரர் எதோ மிஸ்ஸ மிஸ் பண்றதப் பத்தி பேசுறாப்பல(புலம்புறாப்புல?) தெரியுதே !!

11. குசும்பன் - Friday June 18, 2004

Enna Thalaiva…saththathE kanOm. kai kuRukuRu’ngkuthu. kusumbu panna…

yezuthunga basu…

12. MKBala - Friday June 18, 2004

rendu peru dinner saapidurathaa sollitu avunga aan penna irrukanumnu solrey pari. paathathu tamil padama iruntha sollalaam. Aana ithu english padamgurathunaala konjam yosika vendiyatha irrukku illaya ???

13. Silandhi - Sunday June 20, 2004

ipdi oru vithyaasamaana vizhayatha eduthukittu kirukka ungalala eppidi mudiyudhu?

14. பாலாஜி - Tuesday June 22, 2004

ரொம்ப நாளா கணக்கு பண்ணிண்டே இருக்கீங்க போல… 21 கிராமுக்கு, 21 நாள் என்று கணக்கா?!

15. காசி - Wednesday June 30, 2004

ஒரு மண்ணும் புரியலை. உண்மையிலேயே வயசாகிப்போச்சுங்கிறது இப்ப விளங்குது!

16. sundar - Tuesday July 27, 2004

brhk;g ed;wp


Sorry comments are closed for this entry

%d bloggers like this: