jump to navigation

தத்தித் தாவுது மனமே Tuesday June 8, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மனம் ஒரு குரங்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. ஒரு விஷயத்தப் பத்தி யோசிச்சா அடுத்தது சம்பந்தமே இல்லாத இன்னொன்னு பத்தி யோசிக்கும், அப்புறம் அங்கேர்ந்து இன்னொன்னு. இப்படியே தாவித் தாவி எங்கெங்கயோ போகும்.

பல சமயங்கள்ல ஆரம்பிச்ச எடத்துக்கும் முடியற(?) எடத்துக்கும் சம்பந்தமே இருக்காது. சில சமயங்கள்ல ஆரம்பிச்ச எடத்துக்கு திரும்ப வந்துடும்.

சில சமயங்கள்ல இந்த தாவறத ஓங்கி ஒரு போடு போட்டு நிறுத்தி, வந்த வழியே திரும்பப் போய் தொடங்கின விஷயத்தப் புடிக்கலாம். இது ஒரு ஜாலியான வெளையாட்டு. என்ன, நமக்குத் தெரியாமலயே உள்ளுக்குள்ள வெளையாட்டு ஓடிக்கிட்டிருக்கும்.

இந்த வெளையாட்டு அதிகமா வெளையாடுற நேரம் – பயணம் செய்யும் நேரம்(புத்தகம் படிக்கிற நேரம் போக). அமெரிக்காவுல போக்குவரத்து நெரிசல்ல காலைலயும் சாயந்தரமும், குறிப்பா, சாயங்காலம் இன்ச், இன்ச்சா கார நகத்தறப்போ இந்த வெளையாட்டு சூப்பரா நடக்கும்.

காலைல ஆஃபீஸ் வர்றப்போ “தகிட ததுமி தகிட ததுமி தந்தானா”ன்னு எஸ்பிபி பாடிக்கிட்டிருந்தப்போ கெணத்துமேல கமல் டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தார். முதல் சரணம் முடிஞ்சி, நடுவுல வர்ற இசை முடிஞ்சி, அடுத்த சரணம் ஆரம்பிக்கற நேரம்; நடுவுல வந்த இசையில “ஏதோ” இருந்த மாதிரி ஒரு எண்ணம். ரீவைண்ட் பண்ணு!

“டொடொடொ டொண்டைன் டொடொடொ டொண்டைன்…..” – வீணை மாதிரி இல்ல?

அடுத்த சரணமும் முடிஞ்சி ஜெயப்ரதா பொட்டு கரையாம கமல் காப்பாத்தி ரெண்டு பேரும் வூட்டுக்குள்ளார போயிட்டாங்க.

வீணை – அதுக்கு என்ன இப்போ?“கவனிப்பாரற்ற மூலை”ல கெடக்குன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரே அடிதடி!

கடைசியா மூலையோட தனிமையே பறி போயிடிச்சி!

முதல் பாகம் முற்றும்.

–00–

எதுக்கு, எப்படி, எங்கேர்ந்து “Love came to flora” ஞாபகம் வந்துச்சின்னு தெரியாது. நானும் கஷ்டப்பட்டு வண்டிய பின்னாடி வுட்டுப் பாத்தேன். ஊஹூம்; கட்டச் செவுத்துலதான் முட்டிக்கிட்டு நிக்குது வண்டி.

சரி ஒழிஞ்சு போ!-ன்னு சொல்லிட்டு அந்தப் பாட்டாவது ஞாபகத்துக்கு வருதான்னு பாக்கலாம்னா… ரொம்ப வருஷமாச்சுப்பா. “Love came to Flora asking for a flower” – இதுக்கு மேல வரவே மாட்டேங்குது.

அண்ணன் கூகுள் இருக்க கவலையேன்? எங்கேயாவது கெடைக்குமான்னு தேடிப்பாத்தா, மொத பாலே(ball) சிக்ஸர்!


Love came to Flora asking for a flower

That would of flowers be undisputed queen,

The lily and the rose, long, long had been

Rivals for that high honor. Bards of power

Had sung their claims. “The rose can never tower

Like the pale lily with her Juno mien” —

“But is the lily lovelier?” Thus between

Flower-factions rang the strife in Psyche’s bower.

“Give me a flower delicious as the rose

And stately as the lily in her pride” —

But of what color?“ — ”Rose-red,“ Love first chose,

Then prayed — ”No, lily-white — or, both provide;“

And Flora gave the lotus, ”rose-red“ dyed,

And ”lily-white” — the queenliest flower that blows.ரோஜாவுக்கும் அல்லிக்கும் குடுமிப்பிடி சண்டையாம். ‘போங்கடீ போக்கத்தவளுங்களே’ன்னு தாமரைப் பூவப் படைச்சாளாம் ஃபுளோரா.

இதோட போச்சா? 14 வரி பாட்டா இருக்கே இது சானெட்(Sonnet) வகையா?ன்னு ஒரு பக்கம், ரோஜாப்பூ பத்தி இன்னொரு பக்கம், அல்லி பத்தி இன்னொரு பக்கம்-னு ஓடுது.

இன்னொன்னு என்ன பண்ணுச்சித் தெரியுமா? காலைல ஊத்தி மூடின வீணை கதைய எடுத்து கைல வச்சிக்கிட்டு தாமரைக்கும் அதுக்கும் முடிச்சிப் போடுது.

தத்தித் தாவுற ‘தத்தி’யா இருக்குது மனசு 🙂

தொடர்புடையது: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு

Advertisements

Comments

1. sundaravadivel - Tuesday June 8, 2004

அ…அப்புடித்தான்! அதை விரட்டிக்கிட்டே போயி எங்கெல்லாம் போகுதுன்னு பாத்தோம்னா ஒரு நாள் அது எங்கேயும் ஓடாதாம்னு பெரியவங்க சொல்லுவாங்க. முடிஞ்சாத்தானே!

2. குசும்பன் - Wednesday June 9, 2004

பாருங்க யெங்கேயோ ஆரம்பிச்சு கடைசியில உங்க பதிவுல நிக்கிறேனே…என் புத்தி எப்பவுமே அப்படித்தான் பாசு…ஆஹா அடுத்த கிளை தெரியுதே…வரட்டுமா?

3. Shankar - Sunday June 13, 2004

அது சானட் தான் அண்ணாச்சீ! கதை தெரியுமில்ல? இந்த பாட்டு நம்ம இந்திய சுதந்தரம் சம்மந்தப் பட்டது. ரோஸ் இங்கிலாந்தின் தேசியப் பூ. லில்லி ஃப்ரான்ஸின் தேசியப் பூ. தாமரை பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே!


Sorry comments are closed for this entry

%d bloggers like this: