jump to navigation

இன்று புதிதாய்… Monday June 7, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

காரை அணைக்குமுன் நல்ல பாட்டு அடுத்துவர சிடி மாற்றி

பாத்திரம் கழுவி அடுக்களை துடைத்து

டீவியை அணைக்குமுன் சத்தம் குறைத்து

படிக்கும் புத்தகத்தை முழுப்பக்க முடிவில் மூடி

துயிலெழுந்து படுக்கை மடித்து

குளித்து, வாரமொருமுறைத் தோய்த்து மடித்த துணியுடுத்தி…

என்றுமே இன்று புதிதாய்…

எச்சரிக்கை: நீங்க மொத்துற மொத்துலதான் இது மாதிரியான *கண்றாவிக்கு* இனி வரும் நாட்கள்ல விடிவுகாலம் பொறக்கும் சொல்லிட்டேன் 🙂

Advertisements

Comments

1. ஜெயஸ்ரீ - Monday June 7, 2004

நேத்தி முழ்க்க ஆளக் காணோமேன்னு (சந்தோஷமா) இருந்தேன். வந்து பார்த்தா, பெரிய ரவுசா இருக்கே!

வெட்டி வெட்டி ஒண்ணுக்குக் கீழ ஒண்ணா எழுதினது சரி. ஆனா சரியா வெட்டலை.

இது ஏதோ வீட்டுல கல்யாணத்துக்கு அப்ளிகேஷன் போடற மாதிரி இருக்கு.:P

2. kvr - Tuesday June 8, 2004

வாணாந்தலீவா, நீங்களாவது நல்லா இருங்கோ. கவுத எய்துறேன்னு நம்மள ஃபீல் பண்ண வெக்காதிங்கோ :-)).

இன்னா தலீவா, வூட்டுல பொண்ணு பாத்து ஒகே பண்ணிட்டாங்களா ;-)??

3. பரி - Tuesday June 8, 2004

ஜெ,

என்ன ஒரே “வெட்டி”ப் பேச்சு வேண்டிக் கெடக்கு 🙂

அப்ளிகேஷனா? நல்லாத்தான் முடிச்சு போடறீங்க. ரயில்வேல “ட்ராக்” மாத்தற வேலை செஞ்சீங்களோ? 🙂

kvr: அரண்டவன் கண்ணுக்கு…

நான் இது என்னன்னே சொல்லலியே? 🙂

4. -/r. - Tuesday June 8, 2004

ada ithuthaangka karuththE

5. sundaravadivel - Tuesday June 8, 2004

அப்போ இங்க ஒரு நாள் வந்து கஞ்சி குடிச்சுட்டு ஆட்டம் போடலாம்னு சொல்லுங்க 🙂

6. -/பெயரிலி. - Tuesday June 8, 2004

“இன்றுமே என்றும் பழசுபோல்…

உடுத்த துணி மடிக்காமல் கட்டிலே போட்டு, குளித்து

கசங்கு படுக்கை மேலும் கசங்க இரவுழன்று

படிக்க முன்னாலேயே புத்தகம் கை நழுவ கண் சொருக

சத்த(த்) ரிவி அணைந்தோமா அலையுதா.. ஆர் அறிவார்?

அதிகாலை கழுவாத பாத்திரம் நீர் காட்டி அடுக்களை அழுக்குக்

காணாமலே கையப்பட்ட சிடி எடுத்துக் காரேறினால், கடுப்படிக்கும் பாட்டு! ”

அப்டீன்னு கஞ்சி வார்த்திடுவோம் 🙂

7. பரி - Wednesday June 9, 2004

சுந்தர், பாருங்க ஒருத்தர் போனி பண்ணிட்டார். ஆரம்பிங்க ஆட்டத்த 🙂

நான் வழக்கம் போல கை தட்டல்தான் 🙂

8. sundaravadivel - Wednesday June 9, 2004

அதே பல்வரிசை பசை நுரை

சவரக்குழை நுரை வழி

சோப்பு நுரை ஒழி

கொஞ்சம் சென்சார் பண்ணி

முந்தாநாள் போட்ட டவுசர்

சட்டை மட்டும் மாற்று

வாடைக்காத்திலே வாடை மறைக்கத்

அக்குளில் அமுக்கித்தெளி

ம்…ம் ஹ என்று மணந்து

மூச்சிலே புத்துணர், ஆச்சா?

புத்தம் புதுசாய் இன்னொருநாள்!

9. பரி - Wednesday June 9, 2004

பாஸிட்டிவா எழுத யாராச்சும் வாங்கய்யா 🙂

10. -/பெயரிலி. - Wednesday June 9, 2004

தொடங்கிட்டாங்களடா அடுத்தவன் தொட்டியிலே கஞ்சித்தொட்டித்தர்மத்தை 🙂

பொழுது சுருங்குது; போதாவேளை பொங்குது; இப்போ போய் எப்போ வருவனோ! ஆனா வருவேன்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: