jump to navigation

கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால்… Friday June 4, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ரங்கா(அதாங்க டுபுக்கு. என்னால அந்தப் பேர என்னால சொல்ல முடியாது :-)) தன் செல்லக்குட்டி வர்ஷாவுக்கு ரிமோட் காரும் கிடாரும் வாங்கிக்குடுத்திருந்ததப் பத்தி எழுதியிருந்தார். சின்ன வயசுல யாராவது ரிமோட் கார் வச்சிருந்தா அத வேடிக்கைப் பாக்றதுக்குன்னே ஓடுவாராம். இத வச்சி இன்னைக்கு ஒப்பேத்தலாம்னு இருக்கேன் 🙂

‘நமக்குத்தான் சின்ன வயசுல குடுத்து வைக்கல, நம்ம புள்ளையாவது அனுபவிக்கட்டுமே?’ங்ற எண்ணத்துல, பெற்றோர்கள், பிள்ளைகள் கேக்கறது அத்தனையும் வாங்கிக்குடுக்கறதப் பத்திதான் இன்னிக்கு நம்ம வூட்டுத் திண்ணைல பேச்சு.

சின்ன வயசுல நெறைய ஆசப்பட்டிருக்கேன் – எல்லார் மாதிரியும்தான். சின்ன வயசு என்ன சின்ன வயசு, வளர்ந்தப்புறமும் ஆசப்பட்டிருக்கேன்; கெடைக்கல. ஆனா, பாருங்க இந்த ஆசையெல்லாம் உள்ளுக்குள்ள பொதைஞ்சி கெடக்கும்; மனசுல ஒரு வைராக்கியம். ‘ஒரு காலத்துல இதையெல்லாம் அடைஞ்சாகணும்.’

சம்பாதிக்க ஆரம்பிச்சதும் இதெல்லாம் மறந்து போயிடிச்சி. ஆனா, பாருங்க எதையாவது வாங்குறப்போ ‘மலரும் நினைவுகள்’ வந்துச்சின்னு வைங்க, ‘ஒரு காலத்துல இது கெடைக்காம, ஆசை நிராசையாப் போயிடுமோ’ன்னு நெனச்சது ஞாபகத்துக்கு வரும். அந்த சின்ன சந்தோஷம் கொஞ்ச நேரம் இருக்கும். எதையும் சாதிக்கலைன்னாலும், எதையோ பெருசா செஞ்சிட்ட மாதிரி இருக்கும் – எல்லாம் கொஞ்ச நேரம்தான்.

இப்போ எல்லம் ரங்கா மாதிரி பெற்றோர்கள் பெரும்பாலானவங்க, பிள்ளைங்க கேக்கறத வாங்கிக் குடுக்கறாங்க. தப்புன்னு சொல்லலை. இது நல்லதா?ங்றதுதான் என் கேள்வி.

நான் அனுபவிக்காதத என் பிள்ளை அனுபவிக்கட்டும் – நல்ல எண்ணம்தான்.

இது பிள்ளைகளோட சுபாவத்த மாத்திடுமா? வீட்ல எது கேட்டாலும் கிடைக்கும்ங்ற மனப்பான்மை வந்துடுமா?

என்னன்னெமோ பெருசா கேக்க நெனச்சேன். கோர்வையா வரல. திரும்ப யோசிச்சாலும் வரும்னு தோணலை. அதனால, இந்த கால்வேக்காட்டுக் கிறுக்கல் மீதான *பெற்றோர்களின்* கருத்துத் தெரிந்தால் சந்தோஷம்.

Advertisements

Comments

1. Dubukku - Friday June 4, 2004

கேட்டதெல்லாம் வாங்கிக்குடுக்கறது சில சமயங்களில் குழந்தைகளின் பக்குவத்தைக் பாதிக்கும் என்று நம்புபவன் நான். அதே சமயம் சக்திக்கு இயன்றதில் கேட்பதில் ஒன்றைக் கூட வாங்கிக் கொடுக்காமல் இருப்பதும் அதே அளவுக்கு குழந்தைகளைப் பாதிக்கலாம் என்றும் நம்புகிறேன். சிலசமயம் சில காரணங்களுக்காக வேண்டாம் என்று அறிவு தீர்மானித்தாலும் பாசத்தில் ஊறிப் போயிருக்கும் மனது கேட்காது. அதைத் தான் எனது பதிவில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

எது எப்பிடியோ இந்த வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் பல பெற்றோர்களை பார்த்திருக்கிறேன். அதையே தான் நானும் எங்க வீட்டில் முயற்சி செய்கிறேன். 🙂

2. பரி - Friday June 4, 2004

ரங்கா,

ஒட்டு மொத்தமா எதுவுமே தரக்கூடாதுன்னு சொல்ல வரல(உங்கள குத்தம் சொல்லவும் இல்ல). உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.

3. Dubukku - Saturday June 5, 2004

ஐய்யோ பரி நான் சும்மா பாப்பையா கணக்கா அங்க சொல்லாத கருத்துக்களை இங்கே கிடைச்ச சான்ஸில் சொல்லி இருக்கிறேன். நான் உங்கள தப்பாவே எடுத்துக்கல . நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.

(எப்போ தான் நாம இந்த மாதிரி டிஸ்கெளெம்மர் போடாம பேசிக்கப்போறோமோ :)))))))))

4. Kusumban - Saturday June 5, 2004

ஆஹா அடுத்த பிறவியில பரி வீட்டுல நாயாப் போகக் கூட பயமாயிரிக்குதுங்கண்ணா !!!

5. Kusumban - Sunday June 6, 2004

பரிப்பா,

படிக்க சோடா பாட்டில் தெவைபடுபா…கண்ணாடியை சொல்றேன். font sizeஐ பெருசு பண்லாமே. கொஞ்சமா…

6. பரி - Monday June 7, 2004

குசும்பரே,

இன்னும் கொஞ்ச நாள்ல நியூக்ளியஸ் அப்கிரேட் பண்ணுவேன், அப்போ பண்ணிடறேன். அது வரைக்கும் ஹி..ஹி.. இந்த சோம்பேறியப் பொறுத்த்துக்கங்க 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: