jump to navigation

உதாசீனம் Tuesday June 1, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

‘எனக்கு எத்தனை வேலை இருக்கு செய்ய

எனக்கென்ன ஆயிரம் கையா இருக்கு?’

யாருக்குத்தான் இல்லை வேலை?

பொல்லாத வேலை!

விரலுக்கேத்த வீக்கம் வேணும்னு சும்மாவா சொன்னாங்க?

உன் விரல நகச்சுத்தியளவு வீங்கவிட்டது நானா?

‘எல்லாத்தையும் சேத்து வச்சி மொத்தமா செஞ்சிடுவேன்’

கம்ப்யூட்டர்ல பேட்ச் புரோகிராம் அதத்தான் பண்ணுது

வெந்துச்சோ வேகலையோ துப்பிட்டுப் போய்ப் படுத்துக்கும்.

அதுக்கும் உனக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

‘பெட்டெர் லேட் தான் நெவர் இல்லையா?’

இதவிட மலிவான போர்வை கெடைக்கிறது கஷ்டம்

‘லேட்’ பட்டியலையும் ‘நெவர்’ பட்டியலையும் புரட்டிப்பார்

ஓ! உன்னால அது முடியாது. பட்டியல் உங்கிட்ட இருந்தாத்தானே?

நான் வேணும்னா போட்டுத் தர்றேன்

எனக்குத்தான் உன்னளவுக்கு ‘வேலை’ இல்லையே

ஆனா, அத நீ பார்ப்பேங்றதுக்கு உத்திரவாதமில்லையே!

24 மணி நேரம் கேக்கலையே?

24 வார்த்தைகள் கூட இல்லை

4 வார்த்தைகள்; வேணாம், 2 தானே கேக்கறேன்!

தேவையான நேரத்துல

தேவையான எடத்துல

‘உன் சவகாசமே வேண்டாம்’னு நெனச்சா

மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டுப் போ

மூஞ்சிக்கு நேராப் பேசினாத்தான் எனக்குப் புடிக்கும்

கண்ணாமூச்சி வெளையாட்டு இல்லெ.

எனக்கும் வேலை இருக்கு.

Advertisements

Comments

1. மூக்கன் - Tuesday June 1, 2004

குதிரை அழகரே,

என்ன ஆச்சு…

கேர்ள் ஃப்ரண்ட் கோச்சுகிட்டாங்களா..??

இங்கிலீஷ் நாயைக் குடுப்பா..சரியா போகும்.

அது என்னன்றியா.. வர வார்த்தையை கருணாநிதிக்கு புடிக்காத மொழியில யோசிச்சுப்பாரு..

2. பரி - Tuesday June 1, 2004

மூக்கரே,

மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப் பாத்தா தெரியாதா? 🙂

அது என்ன கருணாநிதி மொழியோ தெரியலியே. தனியா தட்டி வுடுங்க.

3. மூக்கன் - Tuesday June 1, 2004

தனியா என்ன..இங்கெயே தட்றேன்…

இங்க்லீஷ் நாய் – பப்பி.

கருணாநிதிக்கு ஹிந்தி புடிக்காது.

4. ஜெயஸ்ரீ - Tuesday June 1, 2004

இது என்ன நவீன கவிதையா?

பரி தேறிட்ட(டா)!

இப்படியெல்லாம் ஃப்ரெண்டு கூட சண்டை போட்டியா?

இல்ல சண்டை போட நினைக்கிறியா?

ஆனா இப்படி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருக்கக்கூடாது சண்டை.

ஜவ்வுமிட்டாய் கணக்கா இழுக்கணும் சண்டைய.

“விழிச்சிறையில் பிடித்தாய்..

விலகுதல் போல் நடித்தாய்..

தினம் தினம் துவண்டேன் உயிரே.. ”(படம்: காதல் வைரஸ்)

பாட்டு கேட்டதில்லையா? போகப் போக புரிஞ்சுப்ப.

ம்ம், வாழ்த்துகள்!

5. ஜெயஸ்ரீ - Tuesday June 1, 2004

சுந்தர், என் சொல்ப ஹிந்தி அறிவை வெச்சு ஹிந்தில பப்பிக்கு

என்னன்னு யோசிச்சுப் பார்த்துட்டேன். (பரி) பையனுக்கும் ஹிந்தி தெரியும்னு

எனக்குத் தோணலை. தயவு செஞ்சு கொஞ்சம் சொல்லுடுங்க. (‘சும்மா’ நானும் ஒரு

புது வார்த்தை கத்துக்கலாமேன்னுதான்!)

இல்ல ககரம் மகரமாகனுமா? அதச் சொல்ல விட்டுட்டீங்களா?

அப்படீன்னா பரிய ஹிந்தில குழப்பவேண்டாம் பாவம்.

பரி, தமிழ்லயே ‘சும்மா’-ல சகரம் உகரமாக்கியும் கொடுக்கலாம். 🙂

6. Kusumban - Wednesday June 2, 2004

ஹிஹி …

ஜெயஸ்ரீயின் “Jumma”

சுந்தரின் “பப்பி”

உங்களுக்கு என்

கருணாநிதி “முத்தம்”

குசும்பன்.

7. Kusumban - Wednesday June 2, 2004

பரி சாரே,

உணர்ச்சி வசப்பட்டு 2 வார்த்தை அமெரிக்காவுலே கேக்காதீங்கோ !!! பல(¡)னதும் இருக்கு.

ஹிஹி…சும்மா என்னோட 2 செண்ட்…

குசும்பன்.

8. Kusumban - Wednesday June 2, 2004

சரியா பதிவாகல…ஹிஹி..

பரி சாரே,

உணர்ச்சி வசப்பட்டு 2 வார்த்தை அமெரிக்காவுலே கேக்காதீங்கோ !!! பல(லா)னதும் இருக்கு.

ஹிஹி…சும்மா என்னோட 2 செண்ட்…

குசும்பன்.

9. -/இரமணிதரன், க. - Wednesday June 2, 2004

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது!!

ஒரு மூணு நாளு வெப்ல மிஸ்ஸிங் ஆனா.

என்னன்னமோ நடந்து முடிஞ்சிடுது!!

வேலைல வேளை சரியில்லையா?

இல்லை, வெப்புல வெப்பாச்சா?

10. பரி - Wednesday June 2, 2004

ஆஹா, வந்துட்டாங்கய்யா பொம்பள நக்கீரர்!

என்ன கேட்டீங்க? கவிச்சியாவா.. சே.. கவுஜயாவா.. சே..சே.. கவிதையாவா?

அதெல்லாம் எனக்கென்ன தெரியும். ஒண்ணு மட்டும் தெளிவா தெரியும். நானெல்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சா, மறுநாளே தமிழ் எணைய ஒலகத்துக்கு பால்!(ஹி..ஹி.. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் 🙂 )

மூக்கரே, நீங்க சொன்னது ஒண்ணும் வெளங்கலை. அம்மணி வந்து கேக்கறதும் வெளங்கலை(பெருசுங்க தனி மொழியில பேசுதுங்கப்பா. ஒண்ணும் வெளங்க மாட்டுது 🙂 )

குசும்பரே, உம்ம குசும்பு சூப்பர்(உங்க குசும்பு பக்கத்துலங்க). நீங்க ‘கோக்’ குடிச்சிக்கிட்டு ‘சி.என்.என்’ பாத்துக்கிட்டேதான் குசும்பு பண்ணுவீங்க போல. நம்ம கணிப்பு சரியா?

11. kvr - Wednesday June 2, 2004

மூக்கண்ணாத்தே, அதென்ன பப்பி? எதுனா செய்முறை விளக்கம் இருந்தால் கொடுங்களேன். முயற்சி பண்ணி பார்க்கிறேன்.

பரி, குசும்பர் பத்தின உங்க கணிப்பு சரியா தான் இருக்கும்ன்னு தோணுது :-P. பெரிய சொரக்கா வாங்கினிங்களே, தீர்ந்து போச்சா?

12. Shankar - Wednesday June 2, 2004

appaadi! enakku pariyooda pathivum puriyalai. vandha endha commet-um puriyalai. nimmadhiay irukku. aanaa ramaniyooda comment mattum purinjidichi (what an irony -/r?!)

13. -/இரமணிதரன், க. - Wednesday June 2, 2004

🙂

when the whole world becomes mad, the insane becomes the sanity 🙂

14. குசும்பன் - Wednesday June 2, 2004

லுல்லான்னா சங்கருக்கு தெரியாது. கருணாநிதியோட முத்தமும் புரியாது. மொவத்தை சைட்டுல பாத்தோண தெரிஞ்சுது.

பரியாரே, வெறும் கோக்கு யெனக்கு ஒத்துக்காது. கோக்குமாக்காய்டும். புரிஞ்சிக்குங்க பாசு….

குசும்பன்.

15. குசும்பன் - Wednesday June 2, 2004

குப்ஸாமிண்ணா…கும்டுக்றேன்…பரி ஸாரு “கோக்”னா நீங்க “சரக்கா” இருக்கீங்கோ…உசாராக்கீனும் பாசு உம்மோட…

குசும்பன்.

16. kvr - Thursday June 3, 2004

குசும்பரே, அது சரக்கு இல்ல. சுரைக்காய். பரியண்ணே ஒரு தபா பெர்ய சொரக்கா வாங்குனாரு, அத்து பினிஸ் பண்ணிட்டாரான்னு கேட்டேன்.

மூக்கரே, செய்முறை விளக்கம் கேட்டோம்ல, சொல்ல மாட்டீகளா? பரி, நானெல்லாம் ஊர்காரக. கொஞ்சம் பாத்து செய்கப்பூ.

17. Shankar - Friday June 4, 2004

naan nalla pullai illiya! enakku enna theriyum! (kusumbare! ippidiye ennai nambikittu irunga! adhudhaan indha naattukku nalladhu :-))


Sorry comments are closed for this entry

%d bloggers like this: