jump to navigation

பொல்லாத பொட்டி தட்டுற பொழப்பு – 3 Monday May 24, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

[பகுதி 1] [பகுதி 2]

அமெரிக்கா வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் போச்சா, ஒரு நாள் மணிக்கட்டுல லேசா வலிக்க ஆரம்பிச்சிது. ‘இது என்னடா சோதனை’-ன்னு சொந்தமா மருந்து எழுதி வாங்க(self prescription) முடிவு பண்ணி இதோ இந்த மருந்த வாங்கினேன்.

3M Gel Wrist Rest (Model No. WR312)

இந்த மருந்துல பாத்தீங்கன்னா மௌஸ் வைக்கிறதுக்கும் சேர்த்து எடம் இருக்கும். உள்ளூர்க் கடைகள்ல இது ஒரே ஒரு கடைல மட்டும்தான் இருந்திச்சி. ஆனா அது நீலக்கலர்ல இருந்திச்சா, நமக்கு ‘கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு.’ தேடித் தேடி கெடைக்காம ஒரு வழியா ஆன்லைன்-ல வாங்கியாச்சி.

சும்மா சொல்லக்கூடாது, குடுத்த காசுக்கு நல்லாத்தான் இருக்கு. வலி கொஞ்சம் பரவாயில்ல மாதிரி தோணிச்சி. கொஞ்ச நாள் நிம்மதியா ஓடிச்சி. ஆனாலும் கீ போர்டு மேல காதல் மட்டும் கொறையல. மறுபடி ஒரு நாள் வலி தலை தூக்கிப் பாத்தப்போ மௌஸ எடது கைக்கு மாத்திப் பாத்தேன். அது பைத்தியக்காரத்தனம்னு ஒரே நாள்ல தெரிஞ்சி போச்சி. ஏன்னா Ctrl, Alt, Tab, C, V எல்லா பொத்தான்களும் எடது பக்கம்தானே இருக்கு. இதுக்கு மேல மௌஸ் வேற சேர்ந்துகிட்டா என்ன ஆவறது?

இது முடிஞ்சி ஒரு வருஷம் போச்சு. இடது மணிக்கட்டுல மறுபடியும் வலி. இந்த தரம் கொஞ்சம் வீரியம் அதிகமா இருந்திச்சி. தூங்குறப்போ ஏடாகூடமா தூங்குனதுனால வலிக்குதான்னு நெனச்சிப் பாத்து, அதுக்கு வாய்ப்பு கம்மின்னு முடிவு பண்ணி நம்மாளு கீ போர்டு வேலையாத்தான் இருக்கும்னு ஒருமித்த முடிவுக்கு வந்தாச்சி. மறுபடியும் டாக்டர் வேலை பாக்கணுமே? ஓ! பாத்தேனே. எப்படி? இதோ இத வாங்கித்தான்.

Wrist Stabilizer

இது என்ன பண்ணும்னா மணிக்கட்ட அங்க இங்க அசைய விடாம இறுக்கிப் பிடிச்சிக்கும்(ரொம்ப இறுக்கிடக் கூடாது). அடியில ஒரு உலோக பட்டை(metal plate) இருக்கும். இத வாங்கின புதுசுல ஆஃபீஸ்ல எல்லாரும் “என்னாச்சு?, என்னாச்சு?” ஒரே அன்புத் தொல்லை. ஒண்ணுமில்ல, ‘நோயாளியும் நானே, டாக்டரும் நானே’-ன்னு கொஞ்ச நாள் சொல்லிக்கிட்டிருக்க வேண்டியதா போச்சு. ஆரம்பத்துல இதப் போட்டுக்கிட்டு தட்டச்சவே முடியாது. விரல்கள் மட்டும் தனியா தொங்கும். ஒரு மாதிரி வளைச்சி நெளிச்சி, மணிக்கட்டு அசையாம தட்டச்சப் பழகறதுக்கு ஒரு வாரம் ஆச்சு.

இது நெஜமாவே உபயோகமா இருக்கு. சொல்ல மறந்துட்டேனே, இது ரெண்டு கைக்கும் தனித்தனியா இருக்கு. நான் எடது கைல போட்டிருக்கேன்.

இதோட போச்சுங்றீங்களா? அதான் இல்லை. ரெண்டு மூனு வாரத்துக்கு முன்னாடி வலது மணிக்கட்டுல வலி. இது என்னடா வம்பா போச்சு; இதுக்கு என்ன வழி பண்றதுன்னு மறுபடியும் டாக்டர் மூளைய வேலை செய்யவிட்டா அதுக்கும் ஒரு மருந்து இருக்குன்னு சொல்லிச்சி. இது தான் அது.

Logitech TrackBall Mouse

இது சாதாரண மௌஸ் மாதிரி இல்லை. கொஞ்சம் பெரிசு. எலி பிடிக்கிறா மாதிரி பிடிக்க வேணாம். காங்கிரஸ் கை சின்னம் மாதிரி கைய வச்சிக்கிட்டு லேசா முன்னாடி வளைச்சி இது மேல வச்சா போதும். ஆள்காட்டி விரல் இடது சொடுக்கல் பொத்தான் மேல இருக்கும். கட்டை விரல் ஸ்கோரிலிங் பந்து மேல இருக்கும். கட்டை விரல வச்சிக்கிட்டே மேலே, கீழே, இடம், வலம்-னு மௌஸ ஆட்டிப் படைக்கலாம். இதுலயும் மணிக்கட்டு அசைய வாய்ப்பு கம்மி.

ஆச்சா, இதுவரைக்கும் இவ்ளோ பண்ணியும் பாழாப்போன கீ போர்டு காதல் கொறையுதுங்றீங்களா? அதான் இல்லை.

வலுக்கட்டாயமா மாத்திக்கிட்டு வர்றேன். இதுக்கு மேல வலி வந்தா நெஜமான டாக்டர் கிட்டதான் போயாகணும் போல இருக்கு. போனா, ‘எடுடா கத்திய, பண்ணுடா ஆபரேஷன’-ன்னு சொல்லிடுவாரோன்னு பயமா இருக்கு.

ஆங்… ஒரு கொசுறு சேதி. ரெண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி எது வாங்கினாலும் ரெண்டு வாங்கணும். ஆஃபீஸ்க்கு ஒண்ணு, வூட்டுக்கு ஒண்ணு.

ஆகவே பொழப்புக்காக பொட்டி தட்டுற, பொழுது போக்குக்காக பொட்டி தட்டுற மக்களே, சும்மா இஷ்டத்துக்கு கணினி முன்னாடி உக்காராதீங்க. இங்கெ குடுத்திருக்கிறத படிச்சிப் பாருங்க. அதுபடி நடந்துக்குங்க.

அடிக்கடி சோம்பல் முறிங்க. கை, கால ஒதறுங்க. ஒரு மணி நேரத்துக்கொரு தரம் எந்திரிச்சி ஒரு சுத்து சுத்திட்டு வாங்க.

இல்லேன்னா என்ன மாதிரி ‘கை வலிக்குது கை வலிக்குது மானே/மாமா; ஒரு கை புடிக்கணும் டைப் அடிக்கணும் மானே/மாமா’-ன்னு பாட்டு பாடுவீங்க.

(முற்றும்)

Advertisements

Comments

1. செல்வராஜ் - Monday May 24, 2004

எங்கயோ ஆரம்பிச்சு இப்படிக் கைவலியில் கொண்டு விட்டுட்டீங்க. ரொம்ப டாக்டர் வேல பாக்காம, உருப்படியான டாக்டர் கிட்ட ஒரு முறை போயிட்டு வாங்க. எதாவது ‘கை’ரோப்ரேக்டர் கிட்ட போகச் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். கத்தி வைக்க மாட்டாங்க.

கடைசியில மத்தவங்களுக்கு சொன்ன அறிவுரையை நீங்களும் கடைப்பிடிக்கிறீங்களா ?

2. kvr - Tuesday May 25, 2004

தலைவா, கொஞ்சம் wrist rotation தினமும் பண்ணுங்க, ஒரு பிரச்சனையும் வராது. அதே மாதிரி கொஞ்சம் குனிஞ்சு நிமிர்ந்துகிட்டு இருந்தால் முதுகுவலி பிரச்சனையும் வராது.

ஒடம்பு வலைஞ்சு வேலை செய்யாம நாமல்லாம் எப்படி அவஸ்தை படுறோம் பாருங்க :-))

3. sundaravadivel - Tuesday May 25, 2004

எங்கூட வேலை செய்யுற ஒரு அம்மா ஸ்கிரீனை மடக்கி நோட்டு மாதிரி வச்சுகிட்டு எழுதுறாங்க. இதுலயே கொஞ்சம் மேல போயி ஒரு பேப்பரும் பேனாவும் இருக்கணும், அதுல செய்றதெல்லாம்/கேக்குறதெல்லாம் பொட்டில தெரியனும். அந்தமாரி எதுனாப் பண்ணுங்களேன்!

4. பரி - Tuesday May 25, 2004

செல்வராஜ்: உபதேசம் ஊருக்கு மட்டும்தான் 🙂

அப்பப்போ எந்திரிச்சி ஒரு ரவுண்டு போவேன்.

சுந்தர்: நம்ம வேலை செய்யற சாஃப்ட்வேர் இன்னும் அந்த அளவுக்கு முன்னேறல.

5. -/இரமணிதரன், க. - Tuesday May 25, 2004

பரி ஒன்று செய்யுங்கள்; நேரா செயின்ற் லூயிஸ் பெருவளைவிலே படிகளிலே ஏறி இறங்குங்க.கால்வலி வந்து கைவலி தெரியாமலே போய்விடும். ஏதோ என்னாலான புத்திமதி 😉

[எதற்கும் மணிக்கட்டிலே கவனமாக இருங்கள். கார்ப்பட் ஸிண்ட்ரோமென்பது கணிணியிலே, கல்லாப்பெட்டியிலே காலத்துக்கும் கையை வைத்திருக்கின்றவர்களுக்கு வருகின்ற வருத்தமாகிவிட்டது என்று கையைச் சுற்றிக் கார்த்திகைப் பந்தம் சுத்தியிருந்த நண்பனொருவன் சொன்னான். வைத்தியரைப் போய்ப் பாருங்கள்]

6. பரி - Wednesday May 26, 2004

ரமணி,

ஆர்ச்-ல ஏறி, எறங்குறதா? நல்ல வழி சொன்னீங்க போங்க. அமெரிக்காவுல “தீவிரவாதி” ஆகணும்னா ரொம்ப சுலபமான வழி இதுதான் 🙂

CTS பிரச்சினை வராத ஒரு பொழப்பா பாக்கணும் 🙂

7. S Krupa Shankar - Wednesday May 26, 2004

ராஜா…wrist rotation stress-ஐக் குறைக்கும் ஒரு முயற்சி, மற்றபடி physiotherapy மாதிரி எல்லாம் இல்லை & nerve impingement வந்து விட்டால் ஒன்றும் செய்யமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஐயோ….கார்ப்பல் ட்யூனல் சிண்ட்ரோம் வந்ததும் குணமாக, லோக்கல் அனஸ்தீஷிய கொடுத்து, வெள்ளைவெளேர் என்றிருக்கும் அந்த நரம்பை அப்படியே வெட்டி எடுத்து….யப்பா, நெனச்சாலே கரும்புஜூஸ் கடை முழுக்க நிலநடுக்கம்.

என்னமோ பண்ணிக்கோங்க!

பரி…CTS ப்ரச்ச்சனை வராத பொழப்புதானே? பொழுதுபோக்காக medical transcription try பண்ணிப்பாருங்களேன்…:-))

க்ருபா

8. ஹரி கிருஷ்ணன் - Monday June 14, 2004

பரி,

முப்பது – முப்பத்தைந்து வருடங்களாக நானும் பொட்டி தட்டுபவன்தான். டன் கணக்கில் தட்டிப் போட்டிருக்கிறேன். இது வரை ஒரு நாள் கூட மணிக்கட்டு வலி வந்தது கிடையாது.

தட்டச்சுக் கலையும், அதன் முறையான பயிற்சி முறைகளும் இந்தியாவில்தான் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்று நினைத்தேன். உங்க ஊரிலயும் அப்படித்தான் போலிருக்கிறது.

வலியில்லாத பொட்டி தட்டலுக்கு முதல் படி: தட்டும் போது உள்ளங்கையின் கீழ்ப் பகுதியோ, அல்லது கை மணிக்கட்டோ விசைப் பலகையின் மீது படியாமல், சற்றே தூக்கிய மாதிரி இருக்கவேண்டும். The wrist or the lower end of the palm should NOT rest on the keyboard. விரல்களின் இயக்கம் இதனால் தடைப்படும். மணிக்கட்டு வலி ஏற்படுவது இயற்கையே.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: