jump to navigation

பொல்லாத பொட்டி தட்டுற பொழப்பு – 2 Friday May 21, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

[பகுதி 1]

எதுக்குமே ஒரு குறுக்கு வழி இருக்குமில்லையா?(இந்த எடத்துல தத்துவம் எழுத கை அரிக்குது; சே, ஓடிப்போ! வேற ஒரு கெட்ட சமயம் பாத்து வா!) அந்த மாதிரி விண்டோஸ்-லயும் குறுக்கு வழிகள்(Shortcuts) நிறைய இருக்கு.

Underlinded characters are shortcuts

மேல இருக்குற படத்துல பாத்தீங்கன்னா தெரியும், மெனுவுல சில எழுத்துகள் அடிக்கோடிட்டிருக்கும்(Underlined). இந்த எடத்துல கீ போர்டுல இருக்கற, விண்டோஸ்க்கு தேவையான முக்கியமான பொத்தான்களப் பத்திச் சொல்லணும். மூனு பொத்தான்கள் உங்களுக்கேத் தெரிஞ்சிருக்கும்: Ctrl, Alt, Del. இதுல Ctrl, Alt ரெண்டும் Tab, Shift கூட சேர்ந்தா ஜெகஜ்ஜாலக் கூட்டணி. இவங்களுக்கு ஒத்து ஊத Arrow Keys வருவாங்க.

ஒரு ஃபைல தெறக்கணும்னா என்ன பண்ணுவீங்க? மௌஸ மெதுவா உருட்டி File பக்கம் கொண்டுபோய் ஒரு சொடுக்கு சொடுக்கினா இன்னொரு மெனு வரும். அதுல Open இருக்கும், அத ஒரு சொடுக்கு சொடுக்குவீங்கதானே? இதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்? மொத மொத மௌஸ தொட்டு பழகினப்போ கண்டிப்பா அதிக நேரம் ஆகியிருக்குமில்லையா?

கணினியில நமக்கு எல்லாமே சீக்கிரமா நடக்கணும்(அதுக்குதானே அது?). சும்மா எலி, பூனை வெளையாட்டுல நேரத்த வீண்டடிக்க இஷ்டமில்ல. அதுனால இந்த அடிக்கோடிட்ட எழுத்துகளப் பாத்து, அந்த எழுத்த அழுத்தறதுக்கு முன்னாடி Alt பொத்தான அழுத்தினீங்கன்னு வைங்க, மௌஸ் வச்சி தடவுற வேலைய மிச்சம்புடிக்கலாம்.

முன்னாடி சொன்ன ஃபைல் தொறக்குற சமாச்சாரத்த ரெண்டே நொடியில பண்ணலாம். எப்படி? Alt+F+O இந்த மூணு பொத்தானையும் இதே வரிசைல கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள தட்டினா டமால்னு வந்து நிப்பார் இன்னொருத்தர். அதுக்கப்புறம் Tab, Arrow keys-ன்னு கொஞ்சம் வெளையாண்டா நமக்குத் தேவையான ஃபைல தெறக்கறதுக்கு மட்டுமில்ல கிட்டத்தட்ட எல்லாத்தையுமமே கீ போர்ட வச்சே பண்ணிடலாம்.

90% கீ போர்டு, 10% மௌஸ்-ன்னு பழக்கமாகிப்போச்சு. கம்ப்யூட்டர் லேப்ல பக்கத்துல உக்காந்து மௌஸ் கூட கண்ணாமூச்சி வெளையாடுற பசங்கள நக்கலா ஒரு பார்வை பாத்துக்கிட்டே நம்ம வேலை நடக்கும்.

ஆச்சு, படிச்சி முடிச்சாச்சு; பொட்டி தட்டுற வேலையும்(படிச்சி முடிக்குறதுக்குள்ளயே) கெடச்சாச்சு(வேற எங்கெ? பெங்களூர்லதான்).

புதுசா பொட்டி தட்ற வேலைக்கு வந்தவனதான் நம்ம ஊருல பெண்டு நிமித்திடுவானுங்களே, அதனால கீபோர்டுக்கு இன்னும் அதிகம் வேலை. இதுக்குள்ள குனிஞ்சி பாக்கமலயே தட்டச்சப் பழகிடிச்சி.

உள்ளூருல பொட்டி தட்றது போரடிச்சிப் போய், எல்லா பொட்டி தட்றவங்களும் போற அமெரிக்காவுக்கு போய் பொட்டி தட்டலாம்னு (ரொம்ப லேட்டா, அர மனசோட) முடிவு பண்ணி இங்கெ வந்து தட்டிக்கிட்டிருந்தேனா, போச்சு ஒரு ஒன்றரை வருஷம். இதுக்கப்புறம்தான் மேட்டரே இருக்கு; அது இனிமேல்தான்.

(தொடரும்)

Advertisements

Comments

1. karthikramas - Friday May 21, 2004

பரி , சூப்பரா எழுதிருக்கீங்க பரி, ஒன் தம்ப் அப்!

2. kvr - Sunday May 23, 2004

இன்னா தலீவா, எதுனா தொடர்கதை எழுதுற ஐடியா இருக்கா? சோக்கா புள்ளி வச்சி தான் தொடர முடிக்கிறிங்க…

ம்ம் கலக்குங்க, நம்ம மக்கள்ஸ் கொஞ்சம் எலியை பிடிக்கிறதுலேர்ந்து வெளில வராங்களான்னு பார்க்கலாம்.

3. kvr - Sunday May 23, 2004

ஏனுங்கண்ணா, இந்த குறுக்குவழிக்கு வழி காட்ட வேற மென்பொருளே கிடைக்கலையா? Visual Interdev படத்தை தானா போடணும்? அப்புறம் ஜெயஸ்ரீ வேற “என்னோட கணினில Microsoft Development Environmentஏ இல்லையே”ன்னு அடம் பிடிக்கப் போறாங்க.

4. சுந்தரவடிவேல் - Sunday May 23, 2004

பளகணும்!

ஆமா, இந்த எலி புடிக்கிறதுக்கும் எலி விடுறதுக்கும் கைவலி விவகாரத்துல எதுனா சம்பந்தம் இருக்கா?

5. S Krupa Shankar - Sunday May 23, 2004

பரி…

எப்படி பற்கள் பப்புள்கம் மெல்வதற்குப் படைக்கப்படவில்லையோ அதே மாதிரி கைவிரல்களும் தட்டச்சடிக்கப் படைக்கப்படவில்லை. (ம்ம்ம்…பல பல்கலைக்கழகங்களின் ஆய்வறிக்கையைக் காட்டலாம், bubblegum பல் ஈறுகளைச் சுத்தமாக்குகிறது, அது இது என்று. விவாதத்திற்குரிய விஷயம்தான்).

அது இருக்கட்டும்…

keyboard shortcut, macro என்று எட்டுத்திசைகளிலும் நானும் ஒரு காலத்தில் scene காட்டிக் கொண்டிண்ட்ருந்தேன். அடிக்கோடிட்ட எழுத்துக்கள் சுருக்குவிசையாகப் பயன்படும்ங்கற மேட்டர் தெரிஞ்சதும் நான் அடித்த கொட்டங்கள் கொஞ்சம்நஞ்சம் அல்ல. விளைவு?

carpal nerve injury ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு என் நிலைமை இன்று உள்ளது…கூடிய விரைவில் aappu.blogspot.com-இல் என் கைகளுக்கு ஆப்பு வைத்தாலும் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. (ம்ம்ம்…chat, groups, blog பக்கமெல்லாம் வந்து களாய்க்கலாம்னா, கை வலி!) 😦 medical transcription துறையில் இருப்பதால் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் யாரும். அது மட்டுமே காரணம் அல்ல.

பொதுவாகவே சொடக்கி (mouse)ஐப் பயன்படுத்துவதை விட, விசைகளைப் பயன்படுத்தும் பொழுது கை மணிக்கட்டருகில் உள்ள கார்ப்பல் நரம்புக்கு stress அதிகம் ஏற்படுகிறது. carpal tunnel syndrome பற்றி google-ல் போட்டுத் தேடினால் இன்னும் விரிவாகக் கிடைக்கும். mouse-இனாலும் பக்கவிளைவுகள் சில இருந்தாலும் ஒப்புமையில் குறைவாக எனக்குத் தோன்றுகிறது.

6. S Krupa Shankar - Sunday May 23, 2004

வசதி என்று பார்த்தால் விசைப்பலகை என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் அனேகம்பேர் விசைப்பலகையைத் தவறாகவே பயன்படுத்துகிறோம் இன்னமும். அப்படியிருக்கும் பட்சத்தில் mouse-ஐ அவ்வப்பொழுது பயன்படுத்துவது கொஞ்சம் deviation/rest கிடைக்கும்.

ஓ..சொல்ல மறந்துட்டேனே! இந்த ஒப்பாரி எல்லாம் “விசைப்பலகையைத் தவறாக”ப் பயன்ப்டுத்துபவர்களுக்கே பொருந்தும்.

“தவறாகப் பயன்படுத்துதல்”? தட்டச்சடிக்கும்பொழுது கை மணிக்கட்டு ஜம்மென்று கீழே relaxedஆக அமர்ந்திருந்தால், உங்கள் கார்ப்பல் நரம்புக்கு நீங்கள் சங்கு ஊதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். தட்டச்சடிக்கும் பொழுது விரல்கள் அல்ல, கை முழுதும் நகர்ந்து ஓடி ஆடி வேலை செய்ய வேண்டும். சுபிட்சமான வாழ்வு கிட்டும். ததாஸ்து!

(எல்லாம் டைப்ரைட்டிங்க் இன்ஸ்டியூட்லயே கத்துக் குடுத்து இருப்பாங்க…ம்ம்ம்…கணிப்பொறின்னதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி மறந்துருப்போம்.)

வோவிரானால் உயிர் வாழும்,

க்ருபா

7. பரி - Monday May 24, 2004

kvr: இது சொந்தக் கதை சோகக்கதை.

(மத்தபடி அது .Net IDE. அவசரத்துக்கு அதுதான் கெடச்சிது :-))

(அவசர குடுக்கை)க்ருபா: இர்’பா வர்றேன்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: