jump to navigation

பொல்லாத பொட்டி தட்டுற பொழப்பு – 1 Thursday May 20, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

பொட்டி தட்டுறது-ன்னு செல்லமா நாம சொல்ற, கணினி முன்னால நாள் முழுக்க குப்பை கொட்டுற வேலை செய்ய ஆரம்பிச்சு ஆச்சு பல வருஷம்.

வேலை செய்ய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே காலேஜ்ல கம்ப்யூட்டர் லேப்ல கழுத்தப் புடிச்சி வெளில தள்ற வரைக்கும் கதியா கடந்ததையும் சேர்த்தா இது இன்னும் நீளும்.

மொத மொத கணினியத் தொட்ட காலத்துல எம்.எஸ் டாஸ் 4.0(MS DOS 4.0) தான் இருந்திச்சி.

அதுல மௌஸும் கெடையாது எலியும் கெடையாது. அட, சன்னலே(Window) கெடையாதுங்றேன்.

கீ போர்ட லொட்டு, லொட்டு, லொட்டுன்னு தட்டணும். அது எவ்ளோ பெரிய புரோகிராமா இருந்தாலும் சரி. கணினிய புதுசா தொட்டதால எந்த எழுத்து எங்கெ இருக்குன்னு வேற தெரியாது(தட்டச்சு கத்துக்கல). பாத்துப் பாத்து, தடவி, தடவி ஒரு வழியா அடிச்சி முடிச்சி ஓட்டிப்பாத்தா புரோகிராம் ஆயிரத்தெட்டு துப்பு துப்பும். அப்புறம் அத பொறுமையா உக்காந்து தட்டி, ஒட்டி, சரி பண்ணி சரியா ஓட வைக்கிறதுக்குள்ள பெரும்பாடாப் போயிடும்.

இப்படி பாத்துப் பாத்து பொட்டி தட்டறது கொஞ்ச கொஞ்சமா வேகமாச்சி. செல பொத்தானத் தட்டணும்னா கண்ண மூடிக்கிட்டு தட்டிடலாம்(Enter Key). புரோகிராம் எழுதறதன் பின் விளைவா நாளொரு தடவலும் பொழுதொரு தட்டலுமாக தட்டச்சு பழகிக்கிட்டே வந்துச்சி.

கொஞ்ச நாளைக்கப்புறம் சன்னல் அறிமுகமாச்சு. இப்போ கலர் கலரா இருக்கே இந்த மாதிரி கெடையாது அந்தக் காலத்து விண்டோஸ் 3.1. மொதல்ல டாஸ், அதுக்கு மேல அந்த விண்டோஸ். விண்டோஸ் வந்ததும் புதுசா ஒரு ஆள் மொளைச்சார் – எலியார் எனப்படும் மௌஸ்.

ரெண்டு கையையும் கீ போர்டு மேல மட்டுமே வச்சிப் பழப்பட்டுப் போச்சு. இப்போ என்னடான்னா மௌஸ தொடறதுக்கு ஒரு கைய அப்பப்போ வெளில எடுக்க வேண்டி இருந்திச்சி. எதோ காதலன் காதலியப் பிரிச்சி வைக்கிறப்போ மொரண்டு புடிக்கிற மாதிரி சோத்தாங்கை அவ்வளவு சீக்கிரம் மௌஸ் பக்கம் நகராது. ரொம்ப கஷ்டப்பட்டு போய் ஒரு சொடுக்கு சொடிக்கிட்டு திரும்ப கீ போர்டுக்கு ஓடி வந்துடும். என்னடா இது ஏற்கனவே தடவித் தடவிதான் தட்டச்சிக்கிட்டிருக்கோம் இந்த மௌஸ் பண்ற ரவுசுல தடவல் இன்னும் அதிகமாச்சேன்னு எரிச்சலா இருக்கும்.

இதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனுமேன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தப்போ கண்ணுல ஒண்ணு பட்டிச்சி. ஆஹா, சூப்பர்!

இனி மௌஸ்-ஆவது மண்ணாங்கட்டியாவது!

(தொடரும்)

Advertisements

Comments

1. ஜெயஸ்ரீ - Friday May 21, 2004

ஐயோ, சூப்பர். சீக்கிரம் சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்கலை. இது ஒரு தலையாய சே! கையாய பிரச்சனை எனக்கு.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: