jump to navigation

அலையடிக்குது அலையடிக்குது என்னெச் சுத்தி அலையடிக்குது Thursday May 13, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

எங்கெங்கு காணினும் தேர்தல் முடிவுகள், கருத்துகள் என்று பயங்கர அலையடிக்குதுப்பா.

இந்த தேர்தல் இருக்கே, அது ஒரு ஃபிகரு மாதிரி; அரசியல்வாதிங்க டாவடிப்பாங்க. அவங்க டாவடிக்கிறத மக்கள் வேடிக்கைப் பாப்போம். போட்டி முடிஞ்சதும் ஃபிகரு யாருக்கு சொந்தமாச்சுன்னு தெரியற வரைக்கும் எல்லாருமே நகத்தக் கடிச்சிக்கிட்டுதான் இருப்போம்.

எல்லாம் முடிஞ்சு ஃபிகரு ஒரு பக்கமா சாஞ்சா பரவாயில்ல. ‘இவனா, அவனா?; இதுவா, அதுவா?’-ன்னு இருதலை கொள்ளி(சில சமயம் 3/4 தலை) எறும்பா அலைஞ்சாதான் பிரச்சினை.(தி பேச்சலர் ‘ரியாலிட்டி ஷோ’ மாதிரி இருக்கோ?)

ஒரு வழியா ஃபிகரு ஒருத்தருக்கு செட் ஆயிடும்னு நம்புவோம்.

இந்தத் தேர்தல்ல முக்கியமான அம்சம், முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு.(முடிவுகள் சீக்கிரமா தெரிஞ்சதுக்கு மிக முக்கிய காரணம்.)

சந்திரபாபு நாயுடு தோத்துப் போனது ஆந்திர எதிர்க்கட்சிக்குக் கொண்டாட்டமோ இல்லையோ, ‘லாப்டாப்’ பத்திரிகைக் காரங்களுக்கு செம கொண்டாட்டம். பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க.

தமிழ்நாட்டப் பொறுத்தவரைக்கும் bb சொல்ற மாதிரி தோசையத் திருப்பிப் போட்டுருக்காங்க.(நாங்கள்லாம் ‘வச்சா குடுமி செறச்சா மொட்டை’ பரம்பரையாக்கும். :-))

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுல(மக்கள் தொகைய வச்சி) அடிச்ச இந்த அலையப் பத்தி ‘ஜனநாயகத்தின் காவலன்’ நாட்டுல (வழக்கம்போல) பெருசா ஒண்ணும் செய்தி அலை அடிக்கல.

எதுக்கு அடிக்கணும்? இதெல்லாம் ‘லோக்கல்ஸ் ஆஃப் இண்டியா’ ஃபிகரு. இதையெல்லாம் யாரு கண்டுப்பாங்க? நவம்பர் மாசம் பாருங்க ஒலகமே ஜொள்ளு விட்டுக்கிட்டு வேடிக்கைப் பாக்கப்போற ஃபிகரு வருது.

நவம்பர் மாசம் நாலாம் தேதி காதலி கையிலிருப்பாள்-னு ஜான் கெர்ரி பாடிக்கிட்டிருக்கார். நீ என்னை விட்டுப் போகாதே-ன்னு ஜார்ஜ் புஷ் பாடுறார்.

சரி, சரி எனக்குப் பசிக்குது; போய் பீட்ஸா தின்னுட்டு வர்றேன் 🙂

Advertisements

Comments

1. karthikramas - Thursday May 13, 2004

🙂 🙂

2. -/இரமணிதரன், க. - Friday May 14, 2004

”ஜனநாயகத்தின் காவலன்’ நாட்டுல (வழக்கம்போல) பெருசா ஒண்ணும் செய்தி அலை அடிக்கல./

பரித்தம்பியோவ்! அடுத்த தபாக்கு ஒரு மாதிரியா இண்டியா எலெக்ஷ்னை இஸ்ரேலில ஈராக்குல இல்ல எங்காச்சும் எஞ்சினுக்கு எண்ணெய் காஸ¤ போடுற ஸ்டேசன்ல பண்ணவெச்சிட்டீங்கன்னா, அலையென்ன புயலென்ன பூகம்பமே பொளக்குமாக்கும் பாக்ஸ்ல, சிஎன்என், எம் எஸ்என்பிஸில

3. -/இரமணிதரன், க. - Friday May 14, 2004

/பீட்ஸா தின்னுட்டு வர்றேன்/

ஹையோ!

ஆட்சிக்கு வந்தாலும் வந்தாங்க ரோமாபுரி ராணி. பையங்க பிட்ஸா துண்ணுறக்கூட வெப்லாக்ல ஸ்பெஷலா பண்ணிடுவோமுன்னே சபதம் பண்ணிட்டாங்கய்யா 🙂

ஏன் தம்பியோவ்! நாளைக்கென்ன மாக்கரோனியா பாஸ்தாவா? 😉

4. -/இரமணிதரன், க. - Friday May 14, 2004

anyway,check this out on NPR on Frday

5. -/இரமணிதரன், க. - Friday May 14, 2004

anyway,check this out on NPR on Friday

http://www.theconnection.org/

the archives will be at

anyway,check this out on NPR on Frday

6. பரி - Friday May 14, 2004

NPR-ல கண்டிப்பா சொல்லிருப்பாங்கன்னு தெரியும். நான் வழக்கமா கேக்கற All Things Considered-ல கூட(நான் கேட்ட நேரத்துல) ஒண்ணும் சொல்லல.

செவ்வாய் இரவு(11-க்கு மேல்) BBC World Service, NPR-ல வந்தப்போ அதுல(யாச்சும்) சொன்னாங்க.

நேத்து NBC Nightly News-ல போனா போவுதுன்னு 20 செகண்ட் ஒதுக்கிருந்தார் Tom Brokaw.பீட்ஸா இனி எம் தேசிய உணவு 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: