jump to navigation

பெண்கள் – பொருளாதாரத்தின் கண்கள் Tuesday May 11, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

சாப்பிடும்போது டீவி பார்த்துக் கொண்டோ, புத்தகம், பத்திரிகை என்று எதையாவது புரட்டிக்கொண்டோ சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. தட்டில் ஒரு கை, தாளில் ஒரு கை; கண், தாளில் நிலைகுத்தியிருக்கும்.

இந்தப் பாழாய்ப் போனப் பழக்கத்தால், கேஃப்டீரியாவுக்கு முன் அடுக்கப்பட்டிருக்கும் இலவசப் பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம் தான். 🙂

St.Louis Business Monthly என்ற பத்திரிகையை புரட்டியதில் படித்த ஒரு கட்டுரையில் கண்ட சில புள்ளிவிவரங்களைப் பற்றி கிறுக்காமல் இருக்க நினைத்தேன்; முடியவில்லை 🙂

வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது 80% பெண்கள் வசம் உள்ளது.(Women control 80% of all household spending.)

-மீதி 20% பொருட்களை வாங்குவது ஆண்கள்(பெரிய கண்டுபிடிப்பு!). குளியலறை, சமையலறை மற்றும் வீடு முழுவதும் சுத்தம் செய்யத் தேவையான கிருமிநாசினி, துடைப்பான் போன்ற பொருட்களும், மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்த நாள்’ போன்ற ‘மறக்க முடியாத'(கூடாத) நாட்களில் வாங்கும் பரிசுப்பொருட்களும் இந்த 20 சதவீதத்தில் அடக்கம்.

கார் வாங்குபவர்களில் 85% பேர் பெண்களால் ஒரு வகையில் தூண்டப்பட்டு வாங்குகிறார்கள்.(85% of all automobile purchases are influenced by women.)

-‘பக்கத்து வீட்டுக்காரன் லெக்ஸஸ்(Lexus) வாங்கிட்டான். நாம இன்னும் இந்தப் பாழாப்போன, 2 வருச பழசான(?) ஃபோர்டு டாரஸ் (Ford Taurus) கார வச்சிக்கிட்டு மாரடிக்கிறோம்.’ – இப்படி தினமும் ‘அர்ச்சனை’ நடந்தா ஏந்தான் வாங்க மாட்டான்?

இப்போ சொல்லப்போறதுதான் மிக முக்கியமானது.

உற்பத்தி செய்யப்படுகிற பொருட்கள், சேவைகளில் 81% சதவீதத்தை வாங்குவது பெண்கள்.(Women purchase 81% of all prodects and services manufactured.)

அதனால்தான் சொல்கிறேன், பெண்கள் – பொருளாதாரத்தின் கண்கள்.

ஓ ‘கணவா’ன்களே!

(பொருளாதாரத்தை உயர்த்த)’நாட்டுக்கு நீ என்ன செய்தாய்’ என்று கேள்வி கேட்கும் அரசியல்வாதியிடம் என்ன பதில் சொல்ல முடியும் உங்களால்?

‘வீட்டைச் சுத்தம் செய்தேன், வேண்டுமானால் நாட்டையும் சுத்தம் செய்கிறேன், அது மட்டுந்தான் எனக்குத் தெரியும்’ என்று வீதியில் இறங்க உத்தேசமா?

யோசித்துப் பாருங்கள்; வயிறு சரியில்லையென்றால் ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கியாவது நாட்டின் வர்த்தகத்தைப் பெருக்கலாம் என்றால், நினைத்த நேரத்தில் உங்களால் அதை வாங்க முடிகிறதா?

இரண்டு செண்ட் தள்ளுபடித் தருகிறான் என்று 20 மைல் தூரத்தில் இருக்கும் பலசரக்குக் கடைக்குச் சென்று வாழைப்பழம் வாங்கிவர எண்ணியிருக்கும் உங்கள் அருமை மனைவியிடம் கேட்காமல் வாங்கிவிட முடியுமா?

அதனால்தான் சொல்கிறேன், சம உரிமைக்காகப் போராடுங்கள். ‘சம்பாதித்தப் பணத்தை, நான் விரும்பியபடி செலவு செய்யும் அடிப்படை உரிமை எனக்குண்டு’ என்று போராடுங்கள்!(போராட்டம் முற்றினால், சமாதானப் பேச்சில் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது பெற்றுவிடலாம்.)

என்போன்ற இளைய தலைமுறைக்கு நல்லகாரியம் செய்யுங்கள்(நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம்).

Advertisements

Comments

1. செல்வராஜ் - Tuesday May 11, 2004

போராட்டமாவது, சமாதானப் பேச்சாவது ? முதல்ல ஒரு கண்ணாலம் கட்டிக்கோ அப்பூ. அப்புறம் தெரியும் கதை !

2. kvr - Wednesday May 12, 2004

பரி, முன்னாடியே ஒரு டீசண்ட் அக்ரிமெண்ட் போட்டு வச்சிடுங்க, இல்லாங்காட்டி அப்பாலிக்கா பிரச்சனை தான்.

3. ஜெயஸ்ரீ - Thursday May 13, 2004

ஃஃஃஃ செலவழிக்கற 100 சதத்துல எத்தனை சதவிகிதம் perfume, after shave, dress.. etc., etc., ±øÄ¡õ ±¾¢Ã½¢ì¸¡¸ò¾¡§É ¦ºÄÅÆ¢ì¸È£í¸. 😛 «ôÒÈõ ±ýÉ? ¨¸Ä ¸¡º¢Õó¾¡Öõ «¨¾ ¦ºøÅÆ¢ì¸ò ¦¾Ã¢Â§Åñ¼¡Á¡? ÅóÐð¼¡í¸ப்பா.

4. Dubukku - Thursday May 20, 2004

ஆமாம் போராடுவோம்…போராடுவோம்..இருங்க..எங்க வீட்டுல ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்


Sorry comments are closed for this entry

%d bloggers like this: