jump to navigation

பரி – பெயர்க்காரணம் கூறு Monday May 10, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் எல்லாத்தையும் தமிழ்ல திறவூற்றுச் செயலி, பரிச் செயலி-ன்னெல்லாம் சொல்றாங்கன்னு உங்களுக்குத் தெரியும்(தானே?).

‘என்னடா இது நான் எதுவுமே பண்ணலியே, எதுக்கு என்பேர வச்சாங்க’ன்னு கொஞ்ச நாள் மண்டை காய்ஞ்சேன்.

அப்புறம், ‘பரி’-ன்னா ‘இலவசம்’-னு ஒரு அர்த்தம் இருக்கும்போலன்னு யூகம் பண்ணிட்டு விட்டுட்டேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ‘குதிரை’ தான்.

இன்னைக்கு எதோ ஆர்வக்கோளாறுல OTL-ல போய் ‘பரி’-ன்னு குடுத்துத் தேடினேன்.

பாத்தா, குதிரைங்றது ஒரே ஒரு அர்த்தம்தான், இன்னும் நிறைய அர்த்தம் இருக்குன்னு தெரியுது!

  • 1. motion, gait; 2. speed, rapidity, quickness; 3. pace of a horse; 4. horse; 5. the first naks2atra; 6. wooden horse used as a contrivance for directing the course of water; 7. height, elevation, tallness; 8. greatness; 9. blackness, darkness; 10. delusion, deception; 11. cotton plant
  • 1. cherishing, supporting; 2. burden, load; 3. balance
  • 1. sense of touch; 2. love, affection; 3. trouble, distress
  • particle denoting intenseness

எனக்குப் புடிச்சது burden, load, trouble, distress, blackness, darkness -இதெல்லாந்தான். உங்களுக்குப் புடிச்சது greatness-ஆ இருக்கலாம்னு ஒரு யூகம் பண்ணிட்டு இத்துடன் பெயர்க்காரணத்தை முடித்துக் கொள்(ல்)கிறேன் 🙂

Advertisements
%d bloggers like this: