jump to navigation

மின்னல் ஒரு கோடி… லட்சம் பல லட்சம்… Thursday May 6, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே

கோடிக்கு மேல நம்மூர்ல நம்பரே இல்லையாங்ற சந்தேகம் வந்துச்சா(திடீர்னு ஞானோதயம் வந்ததுக்கு காரணமும் இருக்கு.), மரபிலக்கியம் குழுவுல ஒரு கேள்விக்கணையத் தொடுத்துப்புட்டேன்.

மதுரபாரதி அங்கேர்ந்து வந்தார், ‘என்னப்பா இத்துனூண்டு ஒரு கேள்வியக் கேட்டுப்புட்டியே, இந்தா வச்சிக்கோ’-ன்னு குடுத்தார். யாஹூ குழுவுல அப்டியே போட்டா தேடுறதுக்குள்ள பாதி உசுரு போயிடும். அதான் இங்கெ தூக்கிப் போட்டுக்கிறேன்.

நியுதம் மில்லியன்
மகாகும்பம் பில்லியன்
கற்பம் பத்து பில்லியன்
கடல் பத்தாயிரம் பில்லியன்
பரார்த்தம் ஒரு லட்சம் பில்லியன்
நிகற்பம் பத்து டிரில்லியன்
மகாகிதி ஓராயிரம் டிரில்லியன்
மகாகோணி(மகாஷோணி) பத்து டிரில்லியன்
மகாஷிதி ஆயிரம் டிரில்லியன்
சோபம் பத்தாயிரம் டிரில்லியன்
சாகரம் பத்து குவாடிரில்லியன்
மகாசாகரம் 18 சாகரம்
மகாசோபம்(மகாஷோபம்) நூறாயிரம் டிரில்லியன்
மகாபூரி பத்து குவின்டில்லியன்

விந்தம் 64,00,000

மேலே கூறிய அனைத்தும் வடமொழியிலிருந்து பெறப்பட்டவையே.

இது எத்தனை என்று தெரியாத, ஆனால் ஒரு பெரிய எண்ணைக் குறிக்கும் சொற்கள் உள்ளன. காலப்போக்கில் அவற்றின் பொருளை இழந்துவிட்டோமோ என்னவோ.

அவற்றின் பட்டியல் இதோ:

மகாதோரை

மகாநிகற்பம்

மகாமகரம்

மகாவரி

மகாவற்புதம்

மகாவுற்பலம்

பிரம்மகற்பம்

கமலம்

பல்லம்

நன்றி: மரபிலக்கியக் குழு.

இதப் படிச்சிட்டு ‘அ’, ‘ஆ’ கூடத் தெரியாத ஜெயஸ்ரீ வந்து ஒரு பாட்டிக்கதை சொன்னாங்க. அவங்க பாட்டி அரிசி அளக்குறப்போ, ‘திருவரங்கம்’, ‘பெரிய கோயில்’, 3, 4…-ன்னு எண்ணுவாங்களாம். இது மாதிரி வேற எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு ஞாபகங்கள் தாலாட்ட ஒரு பாட்டுப்பாட நெனச்சப்போ மறுபடியும் வந்தார் மதுரபாரதி. “யாவாரிங்க, ‘லாபம்’, ரெண்டு, மூணு…’-ன்னு அளப்பாங்களே அது மாதிரிதானே இது”-ன்னார்.

ஆஹா, ஞாபகம் வந்துடிச்சி!

நெல், பயிறு, உளுந்து, புளியங்கொட்டை, வேப்பங்கொட்டை-ன்னு எதுவா இருந்தாலும் யாவாரிங்க அளக்குறப்போ ‘லாபம்’-னுதான் ஆரம்பிப்பாங்க. நிறையக் கடைகள்ல(குறிப்பா மளிகைக் கடைல) பாத்திருந்தீங்கன்னா சாமி படம் வச்சிருக்கிற எடத்துல(கல்லாப்பொட்டிக்கு பின்னாடி) ‘லாபம்’-னு எழுதிருப்பாங்க.

Advertisements

Comments

1. sundaravadivel - Sunday May 9, 2004

ஆமா, அந்தக் காலத்துல அப்புடி என்னத்த அளந்தாங்களாம்? 🙂

2. ஜெயஸ்ரீ - Monday May 10, 2004

அப்ப ஹரியண்ணா சொன்ன எட்டயபுர மேட்டர் எங்க?

3. பரி - Monday May 10, 2004

அவர் லேட்டா வந்து சொன்னதால ஆட்டத்துல சேத்துக்கல. அடுத்தவாட்டிப் பாக்கலாம் 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: