jump to navigation

நாம் ஒன்று நினைக்க, நடப்பதென்னவோ வேறொன்று Tuesday May 4, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

அமெரிக்காவுல இருந்ததுக்கு(அ) வந்துட்டு போனதுக்கு அடையாளமா எதையாவது காட்டணும்னா “Made in USA” போட்ட அரைக்கை பனியனோ, சாவிக்கொத்தோ இன்ன பிற சங்கதிகளோ இல்லை. முக்கியமான நகரங்கள்ல முக்கியமான எடங்களுக்கு முன்னாடி நின்னு ‘போஸ்’ குடுத்து ஃபோட்டோ எடுக்கிறதுதான்.(சுத்திப் பாக்றது ரெண்டாம் பட்சம்.)

தென் கலிஃபோர்னியா பக்கம் போனா, ஹாலிவுட் புகழ் லாஸ் ஏஞ்சலஸ் கண்டிப்பாப் போகணும். அங்கேர்ந்து அப்படியே உலக சூதாட்ட தலைநகரம் லாஸ் வேகஸ், அப்படியே ஹூவர் டேம், க்ராண்ட் கேன்யன்-ன்னு ஒரே மூச்சில முங்கிக்குளிச்சிட்டு வந்துடணும்.

அடுத்த முக்கியமான எடம் நயாகரா. இங்கெ போகலேன்னு சொன்னா அமெரிக்கா வந்ததுக்கு அர்த்தமே இல்லை(ன்னு பொதுவா ஒரு நம்பிக்கை). இருக்குற லீவுக்குத் தகுந்த மாதிரி அப்படியே நியூ யார்க் பக்கம் போய், எல்லிஸ் தீவுல (சிறை வைக்கப்பட்டிருக்கிற) சுதந்திர தேவிய கண்டுகிட்டு, எம்பையர் ஸ்டேட் பில்டிங் மேல ஏறி வேடிக்கைப் பாத்துட்டு வந்தா பிறவியின் பலன பாதி அனுபவிச்ச சுகம் கெடச்சிடும்.

இதுக்கப்புறம் கொசுறா சான் ஃபிரான்சிஸ்கோ, மயாமி, ஆர்லாண்டோ(Orlando), சிகாகோ சியர்ஸ் டவர்(Sears Tower), நியூ ஆர்லியன்ஸ் ஃபிரஞ்ச் குவார்ட்டர் (French quarter), செயிண்ட் லூயிஸ் ஆர்ச்[:-)], சியாட்டில் நீடில் டவர், இன்னொரு தரம் சூதாட, அட்லாண்டிக் சிட்டி எல்லாம் பாத்தா பிறவியின் முழுப் பலனும் கிட்டும்.

வட கிழக்குப் பக்கம் போகணும்னா(நியூ யார்க், நயாகரா போன்ற இடங்கள்) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைக்கும் மட்டுந்தான் போக முடியும். மத்தக் காலங்கள்ல ‘அடிக்குது குளிரு’ தான். இந்த ஆறு மாசக் காலத்துல ரெண்டு லாங் வீக்கெண்ட்ஸ் வரும். ஜூலை 4 என்ன கிழமைல வருதுங்றதப் பொறுத்து இது மூனா ஆகலாம். மே மாசம் கடைசில வர்ற நினைவு நாள்(ஹி..ஹி.. மெமோரியல் டே) தான் அந்தப் பக்கம் போக ஆகச் சிறந்தது.

வந்த மூனு வருஷத்துல ‘கொசுறு’ பட்டியல்ல இருக்குற எடங்களையும், அதவிட கொசுறான எடங்களையும் மட்டுமே* பாத்துருக்கேங்றதால, இந்தக் கோடைக்கு நியூ யார்க் போயே ஆகணும், அங்கேர்ந்து நயாகராவும் போயாகணும்னு முடிவு பண்ணி, மெமோரியல் டே-க்கு முன்னாடி ஒரு நாள் பின்னாடி ஒரு நாள்-னு லீவு போட்டு, பெப்ரவரி மாசமே அநியாய வெலைக்கு டிக்கெட் எடுத்து வச்சிட்டு மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சா…

இன்னிக்கு மத்தியானம் சாப்டு வந்ததும் மெயில் பொட்டிக்குள்ளாற ஒரு கடுதாசி – மேனஜர்கிட்டேர்ந்து.

“இப்போதான் கவனிச்சேன், நீ இந்த மாசக் கடைசில வெளியூர் போற போலிருக்கே! இன்னொருத்தன் இந்தியா போறான். நீங்க ரெண்டு பேருமே இல்லேன்னா, அந்த நேரத்துல ரிலீஸ் ஆவப்போற ப்ராஜெக்ட் என்னாவறது? எனக்கு வயித்துல புளிய கரைக்குதேப்பா!”-ன்னு ஒரு அணுகுண்டு.

‘இந்நேரம் முடிஞ்சிருக்க வேண்டிய ப்ராஜெக்ட், அவ்ளோ நாள் இழுத்துக்கிட்டுப் போனதுக்கு நானா காரணம்? பாழாப்போன அரைவேக்காட்டு சாஃப்ட்வேர் வித்தானே அவங்கிட்ட போய் கேளுய்யா. உங்கிட்ட சொல்லிட்டுதானே பெப்ரவரியிலயே டிக்கெட் வாங்கினேன்.’ – இப்படில்லாம் சொல்ல ஆசைதான்.

‘என்னோட டிக்கெட்டப் பாத்தேன். எதுவும் மாத்த முடியாது, கேன்சல் பண்ணினா காசும் திருப்பித்தர முடியாதுன்னு போட்டிருக்கான். நான் பெப்ரவரில ப்ளான் பண்ணினப்போ நமக்கு இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் வரும்னு தெரியாமப் போச்சே! வேற வழியே இல்லேன்னா இங்கயே இருக்கேன்’-ன்னு எனக்குத்தெரிஞ்ச அளவுல நாசூக்கா சொன்னேன்(வேற வழி?).

‘காத்திரு மகனே, இதுக்கு வேற வழி என்னன்னு பாக்கலாம்’னு சொல்லிருக்கார். என்னத்தெ பெரிய வழி இருக்கு? ப்ராஜெக்ட் பத்தி ஒழுங்கா தெரிஞ்ச ரெண்டு பேருல ஒருத்தன் இந்தியா போறத தடுக்கவே முடியாது; இன்னொருத்தன் – இந்த இ.வா.

அதுவரைக்கும் மேல * போட்டதுக்கு ஒரு பட்டியல் போட்டுட்டு வேலயப் பாக்கப் போறேன் 😦

சிகாகோ(அலுத்துப் போச்), விஸ்கான்சின் டெல்ஸ், சியாட்டில், போர்ட்லேண்ட், அட்லாண்டா, சவான்னா, மெம்ஃபிஸ், மின்னியாபோலிஸ், லேக் டாஹோ, மயாமி(:D), கீ வெஸ்ட், (மறுபடியும் மெம்ஃபிஸ், அங்கிருந்து) நாஷ்வில்.

Advertisements

Comments

1. பாலாஜி - Tuesday May 4, 2004

சில சமயம் நூறு டாலர் அதிகம் கொடுத்தால் பயணத்தை மாற்றித் தருவார்கள் 😛 (இந்த அனைத்து அமெரிக்க மரத்தடி சந்திப்பு என்னங்க ஆச்சு?)

2. bb - Tuesday May 4, 2004

I am planning a trip around the same time. neenga pOgallainnaa New York flight ticket enakku “anbaLippaa” kuduththidunga 😉

3. karthikramas - Tuesday May 4, 2004

aiyo paavam ;-( , All the best to go India in Time

4. kvr - Wednesday May 5, 2004

//bb சொன்னது:

I am planning a trip around the same time. neenga pOgallainnaa New York flight ticket enakku “anbaLippaa” kuduththidunga ;)//

எரியிற வீட்டிலே பிடுங்கின வரை லாபம்ன்னு சொல்லுவாங்களே, அது இதானா பாபா?

5. Dubukku - Wednesday May 5, 2004

அடப் பாவமே….கவலப் படாதீங்க…முகத்த சோகமா வெச்சுக்கிட்டு மேனேஜர சுத்தி சுத்திவாங்க… அவர் காதுல விழற மாதிரி போன்ல பையனுக்கு சமாதானம் சொல்லுங்க…மனசு இளகிடுவார்.

6. பரி - Wednesday May 5, 2004

பாலாஜி: நீங்க சொன்னது எதுவும் என் காதுல விழல 🙂

bb: Sure. But there’s a small catch; it’s non-transferable. So, you need to arrange for an ID with my name on it 🙂

kvr: bb <> Boston Balaji (இவர் இசைப்புலி :-))

Dubukku: எந்தப் பையன்? யாரோடப் பையன்? ஐயையோ! ஒரு கட்டை பிரம்மச்சாரியப் பாத்து இப்படி பேசிப்புட்டீங்களே! 😦

7. Dubukku - Saturday May 8, 2004

கட்டைப் பிரம்மச்சாரியா?? ஹூம் அப்போ கஷ்டம் தான். என்ன நக்கல் விட்டீங்கள்ல்? அனுபவிங்க 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: