jump to navigation

Nuisance of making “news sense” Wednesday April 28, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

செய்தி என்பது உள்ளதை உள்ளபடி தருவது. ஒரு செய்திக்கு உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது அதன் தலைப்பு.

பல சமயங்களில் நாம் தலைப்பை வைத்துதான் ஒரு செய்தியைப் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம்.

வாசகரின் கவனத்தைக் கவர, விற்பனையைப் பெருக்க கவர்ச்சிகரமான தலைப்பு கொடுப்பது ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது. பிரச்சினையே அங்குதான் ஆரம்பம். ஒரு செய்தியைப் படித்து அதில் உள்ள “உண்மையான செய்தி”யைக் கண்டுகொள்வதற்குப் பெயர் news sense. இப்போதெல்லாம் இந்த நியூஸ் சென்ஸ் வேலை பெரிய நியூசென்ஸாக இருக்கிறது.

சில காலமாக எனக்கிருக்கும் பெரிய பிரச்சினை இது. அதனால், யாரேனும் எதாவது “கேள்விப்பட்டேன்” என்ற ரீதியில் சொன்னால் நம்புவதில்லை. ‘ஓ, அப்படியா?’ என்பதோடு சரி. பிறகு சாவகாசமாக தீர விசாரித்துக் கொள்வேன்.

உதாரணத்திற்கு நேற்றைய செய்தி ஒன்றைப் பார்க்கலாம்.

“இந்திய கிரிக்கெட் வாரியம், ஆட்டக்காரர்களுக்கும் நடுவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க முன்வந்துள்ளது.” – இதுதான் செய்தி.

இதை எப்படியெல்லாம் சொல்ல முடியும் என்று சில உதாரணங்களைக் கீழே பார்க்கலாம்.

The Hindu:The Hindu : Sport / Cricket : Pension scheme for players, umpires

PTI News:Tendulkar to get monthly pension from Cricket Board

Times of India:BCCI declares pension for Sachin – The Times of India

இதுபற்றி விரிவாக எழுத ஆசை. போதுமான தகவல் திரட்டியபின் பார்க்கலாம்.

Advertisements

Comments

1. Meenaks - Thursday April 29, 2004

நீங்க சொல்றது ரொம்ப சரிங்க.. “ரஜினி அறிக்கை குறித்து கருணாநிதி பரபரப்பு பேட்டி”-ன்னு போட்டிருப்பானுங்க. உள்ளே போய்ப் பார்த்தா, “தம்பி ரஜினிகாந்த் அறிக்கை குறித்து கருத்து ஏதும் கூற விரும்பவில்லை”-ன்னு கருணாநிதி சொல்லியிருக்காரு. இதில என்ன பரபரப்பு-ன்னு எனக்கு இது வரைக்கும் வெளங்கல..

2. Dubukku - Thursday April 29, 2004

இதுவாவது பரவால்ல…நான் ஸ்கூல் படிக்கும் போது …கருணாநிதியைக் காணவில்லைன்னு ஒருதரம் தலைப்பு…பார்த்தா…“இப்பிடியெல்லாம் சொன்ன கருணாநிதியை இன்றைக்கு காணவில்லை”ன்னு நியூஸ். எங்க போய் முட்டிகிறதுன்னு தெரியலை


Sorry comments are closed for this entry

%d bloggers like this: