jump to navigation

பழசும் புதுசும் Monday April 19, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

சிவகாமியின் சபதம் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேனல்லவா, அதில் வரும் ஒரு சம்பவம் ஒரு சினிமாப் பாடலை நினைவுபடுத்தியது.

சிவகாமி கூறினாள்: “பிரபு! தாங்கள் போர்க்களம் போவதைத் தடுப்பவள் நானல்ல. தாராளமாய்ச் சென்று பகைவர்களை வென்று வாகைமாலை சூடி வாருங்கள், ஆனால்…”

“ஆனால், என்ன?”

“என்னுடைய கோரிக்கையைப் பரிகாசம் செய்யக்கூடாது.”

“இல்லை, சிவகாமி, சொல்லு!”

“வள்ளியம்மைக்கு சுப்பிரமணியர் சத்தியம் செய்து கொடுத்ததுபோல், உங்கள் கையிலுள்ள வேலின்மேல் ஆணை வைத்துச் சொல்லுங்கள், போர்க்களத்திலும் என்னை மறப்பதில்லையென்று!”

நரசிம்மர் புன்முறுவல் செய்து, “இவ்வளவுதானே? ‘என்னை மறந்துவிடுங்கள்’ என்று நீ ஆணையிடச் சொன்னால்தான் என்னால் முடியாது! மறக்காமலிருப்பதற்கு எத்தனை தடவை வேணுமானாலும் செய்கிறேன். இதோ…!”

(வேல் வேறொருவருடையது என்பதால் செய்யத் தயங்கி, செய்ய மாட்டார் என்பது வேறு விஷயம்.)

‘தளபதி’ படம் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால், ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாட்டையாவது?

அதில் வரும் இரண்டு வரிகள்:

“வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்”

இரண்டுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களா?

Advertisements

Comments

1. Mathy Kandasamy - Monday April 19, 2004

இருக்கலாம்* இல்லாமலும் இருக்கலாம்.

எல்லாம் குவாண்டம் தத்துவம் என்ன சொல்கிறது என்று பார்த்துத்தான் சொல்லமுடியும். 😉

2. S Krupa Shankar - Monday April 19, 2004

பரி…வேண்டாம்….சொல்லிட்டேன்….திருப்பித் திருப்பி சிவகாமியின் சபத்தம் படிச்சே கெட்டுப்போகக்கூடாது…

பொ.செ இன்னொரு முறை படிக்கவும். இல்லாட்டி பார்த்திபன் கனவு? ஒரு 10 நாட்கள் முன்னாடிதான் பார்த்திபன் கனவு முடிச்சேன். பொ.செ. அளவுக்கு இல்லை. ஆனால் சிவகாமியின் சபதத்துக்கு எவ்வளவோ தேவலை. 😉

க்ருபா

3. பரி - Monday April 19, 2004

மதி :-))

யப்பா வந்தியத்தேவா,

சிவகாமி உன்ன என்ன பண்ணினா? சாபம் விட்டுட்டாளோ? 🙂

நான் முன் வச்ச கால பின் வைக்கிறதில்ல, சொல்லிப்புட்டேன் 🙂

4. சுந்தர்ராஜன் - Monday April 19, 2004

பரி,

வயசுப்பா..வயசு…

சினிமாப்பாட்டு காவியமாவும். நாவல் எல்லாம் ரொம்பப்பிடிக்கும்.

இப்பப் படிக்க வேண்டிய புஸ்தகம்தான்.

ஜமாய் ராசா…

5. Princess - Tuesday April 20, 2004

‘பொ.செ’ வுக்கு ‘சிவகாமியின் சபதம்’ எந்த விதத்திலயும் குறைஞ்சதில்லை. நீங்க பாட்டுக்கு படிச்சுக்கிட்டே போங்க.:-)

6. kvr - Tuesday April 20, 2004

சி.ச’வை நன்றாக இல்லை என்று சொன்ன விந்தியத்தேவரை (இவரு “வயசுப்பசங்க” ரசிகராம்) கண்டிக்கிறேன்.

பரி, 50 வயசுல ஒருத்தரு பொலம்புறது கேக்குதா?

7. பரி - Tuesday April 20, 2004

பவித்ரா,

கண்டிப்பா குறைஞ்சதுதான். சி.ச ஒரே ஒரு புத்தகம்தான் 😀

ராஜா,

பெருசுக்கு வயித்தெரிச்சல் 🙂

8. ரவியா - Wednesday April 21, 2004

//’பொ.செ’ வுக்கு ‘சிவகாமியின் சபதம்’ எந்த விதத்திலயும் குறைஞ்சதில்லை. நீங்க பாட்டுக்கு படிச்சுக்கிட்டே போங்க.:-)//அப்படி போடுங்க இளவரசி !! பரி, “கரும்பு போர்வை” போர்த்தியிருக்கும் பொ.செ. தீவரவாதிகளை நம்பாதீர்கள்.

9. S Krupa Shankar - Wednesday April 21, 2004

இந்தாங்க ராஜராஜ சோழரே…

பரஞ்சோதி பாதியிலேயே “அவர்” ஆனார். நரசிம்மரோ நடுநடுவே ரொமான்ஸானார். இருந்த ஒரே ஆறுதல் கண்ணபிரான். அதுக்காக அந்த Mills & Boons ரொமான்ஸ்களை எவ்வளவுதான் சகிச்சுக்கறது.

பார்த்திபன் கனவு முடிச்சேனா, இப்போ அலை ஓசை “புத்தம்புதிய காப்பி” வாங்கினதை ஆரம்பிக்கணும்.

ஆ..ரவியா!!!! நீங்களுமா? :-))

சொல்ல மறந்துட்டேனே, நீங்கள் வாங்கிக்கொடுத்த “கடல் புறா” (ரிச்சர்ட் பாஷ்)சூப்பரோ சூப்பர்!!!!! தவற விட்டிருப்பேன்.. ரொம்ப நன்றி!!!

க்ருபா

10. Shankar - Sunday April 25, 2004

சிவகாமியின் சபதம் குறைஞ்சதுதான். பொ.செ. 5 பாகம். சி.ச. 4 பாகம் 🙂

கிருபா! கடல் புறா படிச்ச சூட்டோட சூடா “bridge across forever”, “illusions” படிச்சிடுங்க. ரிச்சர்ட் பாச் பத்தி முழுசா தெரிஞ்சிக்கலாம்.

11. ரவியா - Tuesday April 27, 2004

¸ñÏí¸Ç¡ ! «¨Ä µ¨º Á¡¾¢Ã¢ “«ó¾ À£Ã¢Âð” ¸¨¾ §ÅÚ ²¾¡ÅÐ þÕó¾¡ø ¦º¡ûÙí¸§Çý..þô§À¡Ðò¾¡ý «§º¡¸Á¢ò¾¢ÃÉ¢ý 18 ÅÐ «ðºÃ째¡Î ÓÊò§¾ý..«Õ¨Á..

12. ரவியா - Tuesday April 27, 2004

in unicode கண்ணுங்களா ! அலை ஓசை மாதிரி “அந்த பீரியட்” கதை வேறு ஏதாவது இருந்தால் சொள்ளுங்களேன்..இப்போதுத்தான் அசோகமித்திரனின் 18 வது அட்சரக்கோடு முடித்தேன்..அருமை..

13. S Krupa Shankar - Tuesday April 27, 2004

அட்சரக்கோடு படிச்சாச்சா…சால சந்தோ்ஷமு. 😉

பீரியட் கதைகளா.. எனக்குத் தெரியலையே. எனக்கும் இலக்கியத்துக்கும் காததூரம்.

தீவிர இலக்கியவாதி ்ஷங்கருக்கு இதுபற்றிய நிறைய விவரங்கள் தெரிந்திருக்கும். சரிதானே திரு. ்ஷங்கர் அவர்களே? 😉

க்ருபா


Sorry comments are closed for this entry

%d bloggers like this: