jump to navigation

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? Sunday April 18, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

கார்த்திகேயனின் (எந்த கார்த்தி?)கதவைத் தட்டியபோது வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் என்றார்.

எல்லாம் PDF கோப்புகளாக இருப்பதால் தேடுவதில் கொஞ்சம் சிரமம் உள்ளதென்னவோ உண்மைதான். ஆனால், உங்கள் ஊரைக் கண்டுபிடிக்கத் தெரிந்து கொண்டால் பெரிய காரியம் இல்லை.நுட்ப சமாச்சாரம்: இந்த PDF கோப்புகளில் TM-TTValluvar என்ற எழுத்துருவைப் பயன்படுத்திருக்கிறார்கள் (File->Document Properties->Fonts). தமிழக அரசு ‘அங்கீகரித்திருக்கும்’ TAB, TAM உருக்குறிமுறையில் அமைந்த எழுத்துருவாக இருக்கலாம்.

உங்கள் பெயரை எப்படிக் கண்டுபிடிப்பது?

இதற்கு பள்ளிக்கூடத்தில் குடிமையியல் படித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ரேஷன் கார்டையாவது பார்த்திருக்க வேண்டும் 🙂

இந்த வரிசை தெரியுமா உங்களுக்கு?(ஏறுமுக வரிசை)

குக்குராமம்->கிராமம்->ஊராட்சி->பேரூராட்சி->சட்டமன்றத் தொகுதி->பாராளுமன்றத் தொகுதி

(நகர்ப்புறம் பற்றித் தெரியாது.)

முதலில் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் பட்டியலில் உங்கள் தொகுதி, பிறகு, அங்குள்ள சுட்டுக் கோப்பைத்(index file) திறந்து உங்கள் ஊர் இருக்கும் பகுதியின் எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், அந்த எண்ணுடைய கோப்பைத் திறந்து உங்கள் பெயர் இருக்கிறதா என்று கண்வலிக்கத் தேட வேண்டும்.

சரி, கண்டுபிடித்ததை எப்படி நிரூபிப்பது?

இதோ இப்படித்தான் 🙂

நீங்களும் முயற்சி பண்ணுங்க http://er2004.tn.nic.in/

-00-

ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரின் பெயரைப் பார்த்ததும் ஒவ்வொருவரின் முகமும் மங்கலாக நிழலாடியது. சிலர் இறந்த செய்தியைக் கூட இந்தப் பட்டியல் வழிதான் தெரிந்துகொண்டேன்.

ஓட்டுப் போடும் தகுதி வந்து இதுவரை ஒருமுறைகூட கையில் மை வைக்கும் வாய்ப்பு வந்ததில்லை. எந்தத் தேர்தலின்போதும் ஊரில் இருந்ததில்லை.

தபால் ஓட்டுபற்றிக் கேள்விப்பட்டதோடு சரி. அதை எப்படிப் போடவேண்டும் என்று தெரிந்துகொள்ள அக்கறை எடுத்ததில்லை.

இதுபற்றி யாருக்காவது தெரியுமா?

Advertisements

Comments

1. ராதா - Sunday April 18, 2004

நான் ஒரு pdf கோப்பைத் திறக்க எத்தனித்த போது TMB-TTValluvar இல்லை என்று வந்தது. வலையிலும் இது சுலபமாகக் காணக்கிடைக்கவில்லை. உங்களிடம் உண்டா (TMB-TTValluvar மற்றும் TMB-TTValluvar Bold)?

2. karthikeyan - Monday April 19, 2004

pari…why didn’t the trackback work in my site? any reasons? Pls. help me in solving this issue. neways will try it once myself..

Thanks..

3. பரி - Monday April 19, 2004

ராதா,

எனக்கு அந்தமாதிரி எதுவும் சொல்லவில்லை. Which version of Acrobat Reader are you using? I think I’m using 5.0 or 6.0 and I don’t have those fonts installed.

Karthi,

I don’t know. It happened with Haloscan earlier for some other post. You may want to ask Haloscan. Or it could be problem on my side too, where it might have failed to ping the URL.

4. காசி - Monday April 19, 2004

பரி,

எனக்கும் திருவள்ளுவர் அருள் கிட்டவில்லை. படிக்கமுடியவில்லை.:(

5. முத்து - Thursday April 22, 2004

நன்றி … நீங்கள் சொன்னது போல சிலர் இறந்ததைக்க்கூட இதைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் .. சிலர் பெயரின் மேல் கோடு போட்டிருக்கிறார்கள்.. திருத்தத்தில் அதற்கான விளக்கம் ஏதுமில்லை..

என்னோட பெயர் இருக்குது.. இதுவரைக்கும் ரெண்டு மூணு தடவை போட்டு போட்டிருக்கேன் … இந்த தடவைதான் போடமுடியாது … 😦

6. முத்து - Thursday April 22, 2004

எழுத்துரு வேண்டுமென நினைப்பவர்கள் இங்கே இருந்து இறக்கிக் கொள்ளலாம்..

http://www.angelfire.com/in

7. KATHIR - Friday May 7, 2004

YEPDI ITHIL TYPE SEIVATHU

8. Manick - Saturday May 15, 2004

i want tamil font “TMB-TTvalluvar”

By

Manick

9. Manickasundaram - Thursday May 20, 2004

Hai ,

I WANT TAMIL FONT

“TMB-TTValluvar”? ; WHAT CAN I DO ; PLEASE TELL ME THE ANSWET FOR THE ABOVE QUESTION


Sorry comments are closed for this entry

%d bloggers like this: