jump to navigation

தென்றல் ஏப்ரல் இதழ் – ஒரு பார்வை Saturday April 17, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இந்த மாதத் தென்றல் இதழ் – ஒரு பார்வை

வட அமெரிக்காவில் வெளிவரும் தென்றல் இதழின் இந்த மாத இதழை அவசரமாக ஒரு பார்வை பார்த்ததில் பட்டவை.

மாதம் ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தும் பகுதியில் இந்த முறை இடம்பெறுபவர் தொ.மு.சி.ரகுநாதன்.

1941ல் எழுத்துத்துறையில் ஈடுபட்டு 2001ல் தனது இறுதிவரை கதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆய்வு போன்ற படைப்புகளையும் பத்திரிகையாசிரியர் பணியையும் செய்துள்ளார்(பன்முக “விகசிப்பு” என்றால் என்ன? கட்டுரையில் அப்படி இருந்தது).

தினமணி, முல்லை இலக்கிய இதழ், சக்தி இதழ் பிறகு சொந்தமாகத் தொடங்கப்பட்டு ஓராண்டு காலமே வெளிவந்த சாந்தி இதழ் ஆகியவை இவர் பத்திரிகையாசிரியராக(ஆசிரியர் அல்லது இணையாசிரியர்) பணிபுரிந்த இடங்கள். இவரின் “ஆனைத்தீ” என்ற கதை பிரசுரமாகியுள்ளது.

-00-

எல்லே சுவாமிநாதன் அவர்களின் “அறுவை சிகிச்சை” என்ற தலைப்பில் அரைமயக்கத்தில் இருக்கும் ஆப்பரேஷன் நோயாளி கேட்ட துணுக்குகளில் பல நிஜமாகவே அறுவையாக இருக்கின்றன. அவரின் வழக்கமான அளவில் இல்லை. “யூகலிப்டஸ் மரம்” என்ற அவரின் கதையும் பிரசுரமாகியுள்ளது. இன்னும் படிக்கவில்லை; கண்டிப்பாக வயிறு குலுங்கும்படிதான் இருக்கும்.

-00-

“முன்னோடி”கள் வரிசையில் இந்த வாரம் உ.வே.சாமிநாதர். “என் சரித்திரம்” என்ற தலைப்பில் தன் வரலாற்றை ஆனந்த விகடனில் 1940 முதல் 1942 வரை, அதாவது அவர் இறக்கும் வரை எழுதியுள்ளார்.

சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்க அவர் செய்த ஆய்வு பிரமிக்க வைக்கிறது.

உ.வே.சா பதிப்பித்த சங்க இலக்கியங்கள்:

  • பத்துப்பாட்டு (மூலமும் நச்சினார்க்கினியார் உரையும்) 1889
  • புறநானூறு (மூலமும் பழைய உரையும்) 1894
  • ஐங்குறுநூறு (மூலமும் பழைய உரையும்) 1903
  • பதிற்றுப்பத்து 1904
  • பரிபாடல் (மூலமும் பரிமேலழகர் உரையும்) 1918

காப்பியங்கள்:

  • சீவகசிந்தாமணி
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • பெருங்கதை
  • உதயண குமார காவியம்

மொத்தம் நூறு புத்தகங்கள் வரை பதிப்பித்துள்ளார்

-00-

அணுராத ரமணனுடன் ஒரு நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி:ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடியில் ஓர் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். அங்கு ஒருவர் என்னை “நீங்கள் இலக்கியவாதியா?” என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அப்போது “நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள்?” என்றார். “நீங்கள் கூப்பிட்டீர்கள் வந்தேன்” என்றேன். “என்னை ஒரு இலக்கியவாதியாக நீங்கள்தான் அழைத்து வந்திருக்கிறீர்களே தவிர நானாக வரவில்லை” என்றேன்.

நான் அவரிடம் “உங்கள் கதைகளோ, எழுத்துகளோ ஏதாவது பத்திரிகையில் வந்திருக்கிறதா?” என்றேன். அதற்கு அவர், “என் கதைகள் எல்லாம் எப்படி வரும்? உங்களை மாதிரி இருப்பவர்கள் கதைகள்தான் வரும்” என்றார். உடனே நான் “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன். “நான் தமிழ்ப்புலவர், வித்வான்” என்று சொன்னார்.

நான் அவரிடம் “உங்கள் கதைகளில் நீங்கள் இலக்கணத்தையும் இலக்கியத்தையுமே தேடிக்கொண்டிருப்பதால் உங்கள் கதைகள் எல்லாம் திரும்பி வந்துவிடுகின்றன. ஆனால் நான் எழுதுகிற கதைகளில் வெறும் இதயங்களை மட்டும்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இலக்கணமோ இலக்கியமோ சுத்தமாகத் தெரியாது” என்றேன்.

—-

அப்போதுதான் சந்தித்த ஒருவரைப்பற்றி, அவர் எழுத்தைப் படிக்காமலேயே, அவர் செய்யும் தொழிலை வைத்து இந்த மாதிரியான தடாலடியான மதிப்பீடு செய்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

-00-

நூல் அறிமுகம் பகுதியில் பி.ஏ.கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை” நாவல்.

சிவந்த புலிநகங்களைப் போன்ற இதழ்களை மேலிருந்து கீழாக அடுக்கியவண்ணம் அமைந்த பூக்களையும் சாய்சதுர(diamond) வடிவில் இலைகளையும் கிளைகள் முழுதும் முட்களையும் கொண்டது புலிநகக் கொன்றை மரம்.

-00-

மற்றபடி வாசகர் கடிதம் பகுதியில், பிள்ளைகளைப் பார்க்க வந்த பெற்றோர்கள் எழுதிய கடிதங்கள் குறைந்துள்ளன.

Advertisements

Comments

1. ராஜா - Sunday April 18, 2004

இளம் எழுத்தாளர்களை எள்ளி நகையாடும் போக்கு இலக்கிய உலகில் புதிததல்ல. “தான்” என்னும் அகந்தை தான் இதற்க்கு காரணம். நேர்காணல் என்றால் அதில் பலதரப்பட்ட கேள்விகள் எழத்தான் செய்யும். அதை எதிர் கொள்ள பக்குவமும், பொறுமையும் அவசியம். இவை சிறிதும் இல்லாத இவர் எப்படி வாசகர்கள் பிரச்சினைகளுக்கு (அன்புடன் அந்தரங்கம்) தீர்வு கூறி கொண்டிருந்தார் என்று தெரிய வில்லை.

2. PK Sivakumar - Monday April 19, 2004

Àâ, ±ý ¿ñÀ÷ ´ÕÅ÷ (¡÷ ±ýÀ¨¾ ¯í¸û ä¸òÐìÌ Å¢ðÎŢθ¢§Èý 🙂 ) ¦¾ý鬀 “À¢ÃºÅ §¸Š Àò¾¢Ã¢¨¸” ±ýÀ¡÷. ²ý ±ýÈ¡ø, ¾õ ÌÆ󨾸Ǣý À¢ÃºÅòÐìÌ ¯¾Å «¦Áâ측 ÅÕ¸¢È ¦Àü§È¡÷ ÀÊì¸¢È ±Øи¢È Àò¾¢Ã¢¨¸ «Ð ±ýÀ¡÷. ¿ñÀ÷ ¿¨¸îͨÅ측¸ «ôÀÊî ¦º¡ø¸¢È¡÷ ±ýÚ ¿¢¨Éò¾¢Õó§¾ý. ¯í¸û À¾¢Å¢ý ¸¨¼º¢ Åâ¨Âô ÀÊìÌõ§À¡Ð «Ð ¯ñ¨Á¾¡ý §À¡Ä¢Õ츢ȧ¾?? 🙂 «ýÒ¼ý, À¢.§¸.º¢ÅÌÁ¡÷

3. பரி - Tuesday April 20, 2004

பரி, என் நண்பர் ஒருவர் (யார் என்பதை உங்கள் யூகத்துக்கு விட்டுவிடுகிறேன் 🙂 ) தென்றலை “பிரசவ கேஸ் பத்திரிகை” என்பார். ஏன் என்றால், தம் குழந்தைகளின் பிரசவத்துக்கு உதவ அமெரிக்கா வருகிற பெற்றோர் படிக்கிற எழுதுகிற பத்திரிகை அது என்பார். நண்பர் நகைச்சுவைக்காக அப்படிச் சொல்கிறார் என்று நினைத்திருந்தேன். உங்கள் பதிவின் கடைசி வரியைப் படிக்கும்போது அது உண்மைதான் போலிருக்கிறதே?? 🙂 அன்புடன், பி.கே.சிவகுமார்

>>>

சிவா,

முற்றிலும் உண்மை 🙂

பேர் நல்லாத்தான் வச்சிருக்கார் :-))


Sorry comments are closed for this entry

%d bloggers like this: