jump to navigation

வணக்கம். நலமா? Tuesday April 13, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

பலதரப்பட்ட காரணங்களால் (ஒடனே ரஜினி அறிக்கைக்குத் தாவிடாதீங்க 🙂 ) இந்தப் பக்கம் தலைகாட்ட முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஆரம்பிக்கிறேன்.

என்னவென்று ஆரம்பிப்பது?

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் முதலில் நன்றி சொல்லி ஆரம்பிக்கலாம். அதுதான் முறை.

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.அம்போவென்று விடப்பட்ட கதை இனி வரும் நாட்களில் கண்டிப்பாகத் தொடரும். (உஷாவும் மீனாவும், கேஸ் போடுவாங்கன்னு நெனச்சேன். கவுத்திட்டாங்க 🙂 )

கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ‘பொன்னியின் செல்வ’னை விட விறுவிறுப்பாக இருக்கிறது (படித்த 50 பக்கங்களில்).

சமீபத்தில் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் – ஆட்டோகிராஃப், விருமாண்டி.

பொதுவாக ‘நல்ல படம்’ என்ற பொதுவான முத்திரை குத்தி வரும் படங்களின் விமர்சனங்களைப் படிப்பது கிடையாது. அப்படித்தான் இந்த இரண்டு படங்களையும் விமர்சனம் எதுவும் படிக்காமல் பார்த்தேன்.

ஆட்டோகிராஃப்: சராசரிக்கும் மேலான படம். எனக்கு எதுவும் ‘ஞாபகம்’ வரவில்லை 🙂

சினேகாவை அறிமுகப்படுத்தும் பாடலில் பாதி நேரம் அவுட் ஆஃப் ஃபோகஸில் தெரிந்தார். ஒளிப்பதிவே அப்படியா அல்லது நான் பார்த்த திருட்டு விசிடி பிரச்சினையா என்று தெரியவில்லை. ஒளிப்பதிவிலேயே அப்படி இருந்தால், மன்னிக்கவும் – கொடுமை.

கொஞ்சம் ‘அக்னி நட்சத்திரம்’, கொஞ்சம் விக்ரமன் ஸ்டைல் என்று காப்பிகள்.

மன்னிக்க முடியாதது: ஆதாம் ஏவாள் கற்பனை.

எரிச்சல்: சேரன் படங்கள் அனைத்திலும் இருக்கும் அபரிமித சோகம். (பாரதி கண்ணம்மா படத்தின் இறுதிக் காட்சிகளைப் பார்க்கச் சகிக்காது)

விருமாண்டி: (ஐங்கரன் அசல் டிவிடி-யில் பார்த்தது) மரண தண்டனை பற்றி இணையத்தில் வேண்டுமளவு விவாதம் நடைபெற்றுவிட்டது. அதுபற்றி பேசப்போவதில்லை.

‘சீவலப்பேரி பாண்டி’க்குப் பிறகு அரிவாள் வீச்சு இதில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.

நாசரும் நெப்போலியனும் கிட்டத்தட்ட கௌரவ வேடத்தில் வந்து போகிறார்கள்(சாகிறார்கள்). கொத்தாளராக நடித்திருப்பவர் உண்மையில் நடிக்கவில்லை என்று தோன்றுகிறது!

சிறைக்குள் இருக்கும் கோஷ்டிகள், தில்லுமுல்லு வேலைகள், கைதிகளுக்கு காவலர்களின் உதவி போன்றவற்றை இந்த அளவுக்கு வேறு படங்களில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. The Shawshank Redemption மற்றும் இன்னும் சில படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

சிறைக் கலவரத்தில் போது பயன்படுத்தப்படும் கேட்டாபுல்ட்(catapult) உத்தி Gladiator படத்தை ஞாபகப்படுத்துகிறது(கவனிக்க: காப்பி என்று சொல்லவில்லை).

Advertisements

Comments

1. காசி - Tuesday April 13, 2004

//(கவனிக்க: காப்பி என்று சொல்லவில்லை)//

அதென்ன இப்படி ஒரு மழுப்பல். காப்பின்னா காப்பின்னு சொல்றது. இல்லேன்னா சும்மா இருக்கறது!

2. பரி - Tuesday April 13, 2004

அது வந்துங்ணா அப்போ அப்டி தோணலைங்ணா. இப்போ ஒரு மீள்பார்வை பாத்தா காப்பிதான்னு தோணுதுங்ணா. காம்பவுண்டு கேட் கம்பியெல்லாம் புடுங்கி ஈட்டி வுடுறது கூட காப்பிதாங்ணா 🙂

3. PK Sivakumar - Wednesday April 14, 2004

A different perspective. Saying Sivakamiyin Sabatham is more interesting than Ponniyin Selvan. Will ponder abt what would be your reasons to think so. 🙂 A debatable line ezuthi irukeenga. Makkal ithula poonthu vilaiyada poraanga. Namaku padika niraiya matter kidaika pokuthu nu patchi solluthu.

4. செல்வராஜ் - Wednesday April 14, 2004

அதே தான். வெறும் 50 பக்கத்தில சொன்னா ஏத்துக்க முடியாது. முழுசாப் படிச்சுட்டு சொல்லுங்க. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் முறையாக சி.ச படித்தேன். எனக்கு மறக்க முடியாதது “முன்னம் அவனது நாமம் கேட்டேன்” பாட்டுத்தான்.

5. பரி - Wednesday April 14, 2004

அம்பது பக்கம் பத்தி சொன்னா அம்பா வருது. ஆயிரத்தி சொச்சப் பக்கத்தையும் படிச்சிட்டு சொல்றேன். ரொம்ப நாள் பொறுங்க 🙂

6. kvr - Saturday April 17, 2004

கவலையே படாதிங்க பரி, முழுக்கப் படிச்சிட்டும் அதே தான் சொல்விங்க. நான் உங்க கட்சி 🙂

7. S Krupa Shankar - Sunday April 18, 2004

:-))

சிவகாமியின் சபதம்தானே… முதல் பாகம்தானே…சூப்பர்! அவ்ளோதான். 😛

அதுக்கு மேலயும் படிச்சா, அவ்ளோதான் அப்பறம் பரியின் பக்கம் “இலக்கிய வாடை” அடிப்பதாக நானும் தாண்டிப் போய்டுவேன்…சொல்லிட்டேன். :-))

ராஜாவின் அறிவுரைப்படி,

முகமூடியுடன்,

க்ருபா 😉


Sorry comments are closed for this entry

%d bloggers like this: