jump to navigation

கதை நேரம் – 1 Friday March 26, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஒரு ஊருல (ஓர் ஊர்ல-ன்னு எழுதலாம். என்ன பண்ண, இது பழகிப்போச்சே?) ஒரு குடும்பத்துல ஒரு அண்ணன் ஒரு தம்பி இருந்தாங்க. ரெண்டுபேருக்கும் சொல்லிக்கிறமாதிரியான வயசு வித்தியாசம்(தம்பிய அண்ணன்தான் தூக்கி வளர்த்தான். அந்த அளவுக்கு வித்தியாசம். ரொம்ப அதிகம் இல்ல).

பெரியவன் படிப்புல சூட்டிகை. நல்லா படிச்சி அமெரிக்காவுக்குப் போயிட்டான். அவன் சம்பாதிக்கிறது அவன் கை கொள்ளாம கொஞ்சம் வெளியிலயும் வழிஞ்சிச்சு. ஆனாலும் அத்தனை பணமும் அவன் கண்ட்ரோல்ல தான் இருந்திச்சு.

சின்னவனுக்கு படிப்பு அவ்வளவா மண்டைல ஏறல. ஒம்பதாவதுல ரெண்டு தடவ ‘கோட்’டடிச்சி, ‘சீ சீ இந்தப் பழம் புளிக்கும்’-னு படிக்கிறதையே நிறுத்திபுட்டு ‘ஊர் சுத்தல்’ வேலைக்குப் போனான்.

எல்லாருக்கும்தான் தெரியுமே, இந்த வேலைல கூட்டாளிங்க நிறைய பேரு இருப்பாங்கன்னு. இவனுக்கும் கெடைச்சாங்க.

ஊரு மெயின் ரோட்டுல ஒரு வாய்க்கா மதுவு(மதகு) இருக்கும். வெயில் தாழ்ந்தாப்போல ஒவ்வொருத்தரா அந்தப் பக்கம் போவானுங்க. என்னத்ததான் பேசுவானுங்களோ தெரியாது. பேசுவானுங்க, பேசுவானுங்க, ராத்திரி பசியெடுக்கிறவரைக்கும் பேசுவானுங்க.

அமெரிக்காவுல இருக்குற அண்ணன் ஒரு நாள் தம்பிய ஃபோன்ல கூப்புட்டு “டேய், இன்னும் எத்தன நாளைக்கி இப்டி ஊர் சுத்துவ? நான் கொஞ்சம் பணம் தாரேன், எதாச்சும் பிஸினஸ் பண்ணு”-ன்னான்.

தம்பிக்கு, சும்மாவே பணம் கெடைக்குதேன்னு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒதறல். “இல்லண்ணே, அனுபவமே இல்லாம திடீர்னு பிஸினஸ் பண்றதுக்கு பயமா இருக்கு. மொதல்ல நான் ஒரு கடைக்கு வேலைக்குப் போறேன்(எங்கேர்ந்துதான் இந்த ஞானம் திடீர்னு வந்துச்சோ தெரியலை!), கொஞ்சம் விஷயம் கத்துக்கிட்டப்புறம் ஆரம்பிக்கறேன்”-ன்னான்.

“டேய் பிஸினஸ் ஒண்ணும் பெரிய விஷயமில்ல. அனுபம்லாம் தேவையில்ல, நேரடியா ஆரம்பிச்சிடலாம்டா”-ன்னான் அண்ணன்.

“இல்லண்ணே, எனக்கு பயமாவே இருக்கு”-ன்னான் தம்பி.

“சரி ஃபோன அம்மாகிட்ட குடு”-ன்னான் அண்ணன்.

‘நல்லாத்தானே பேசினேன், எதுக்கு திடீர்னு இவர் கொரல்ல வித்தியாசமா மாத்திக்கிட்டாரு? அம்மாவ எதுக்கு கூப்டறார்?’ன்னு யோசிச்சிகிட்டே “அம்மா, அண்ணன் உங்கிட்ட பேசணுமாம்”-னு ஃபோன அம்மாகிட்ட ஃபோன குடுத்தான்.

(தொடரும்)

Advertisements

Comments

1. பாலாஜி - Friday March 26, 2004

கள வருணணை இல்லை; உவமானங்கள் இல்லை… என்ன சாரி சிம்பிள் கதையா இருக்கே 😛

2. -/r. - Friday March 26, 2004

kathai engkE pOguthu? 🙂

3. Kasi - Friday March 26, 2004

?

4. usha - Saturday March 27, 2004

Àâ ¾ôÒ¾ôÀ¡ö ²ö¡ ¸¨¾ Å¢ÎÈ£Õ! ¾õÀ¢ À¢º¢ÉÍ ¦ºïº¢

¦¸¡ïºõ Óý§ÉÈÄ¡õýÛ À¡ìÌõ§À¡Ð «ñ½§É¾¡ ÅóÐ

±øô Àñ½§ÃýÉ¡Õ? ºÃ¢ ºÃ¢ þÐ §ÅÈ ¸¾ §À¡Ä þÕìÌ!

¿¡ ¾¡ ¾ôÀ¡ Òâﺢ츢§¼ý §À¡Ä þÕìÌ?

5. பரி - Saturday March 27, 2004

பாலாஜி: கள வர்ணனை பற்றி படிக்கும்போதுகூட நான் கண்டுகொள்வதில்லை. வந்தியத்தேவன் அடிபட்டுக் கிடக்கும் போது குந்தவை தேவியின் அழகை என்னால் ரசிக்க முடியாது 🙂 அது அப்படியே கிறுக்கலில் பிரதிபலிப்பதிக்கிறது.

ரமணி: என் கற்பனை எங்கெல்லாம் போகிறதோ அங்கே போகிறது 🙂

காசி: என்ன வெறும் கேள்விக்குறி? இதுக்கு என்ன அர்த்தம்?

உஷா: என்னோட **கற்பனை**க் கதைல வேறக் கதைய சேக்கப் பாக்காதீங்க. (வேணும்னா நீங்களே ஒண்ணு எழுதுங்க 🙂 )

மறுபடியுஞ்சொல்றேன், இது கற்பனைக் கதை.

6. Muthu - Saturday March 27, 2004

கதை நல்லாப் போகுது.. சீன்க்கிரமா தொடருங்க …

7. karthikramas - Tuesday March 30, 2004

hai, kathayaa ? tho naanum vanthutteen

8. MKBala - Tuesday March 30, 2004

seekiram yezhuthu pari. Kathai ballama poguthu

9. usha - Thursday April 1, 2004

«Æ¸§Ã! ¸¨¾Â «ó¾ÃòÐÄ ¿¢ôÀ¡ðÊðÎ ±í¸¢ðÎ

§À¡É£í¸?

10. சுந்தர்ராஜன் - Thursday April 1, 2004

பரி,

எழுத்துரு வழிகாட்டலுக்கு நன்றி.

தனிக்குறியீட்டில் இங்கே நேராக எழுதுகிறேன்.

நிறைய எழுதுங்கள்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: