jump to navigation

வெளி(ச்ச) உணர்வுகள் Wednesday March 24, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

நேற்று வீட்டுக்குப் போகும்போது ரேடியோவில் வானிலை அறிக்கைக் கேட்டபோதே இன்று எப்படியும் ‘வெளி(ச்ச) உலகம்’ காண வேண்டும் என்று முடிவுகட்டிக் கொண்டேன்.

நன்கு விடிந்தபின்தான் எழுந்தாலும், வெளியில் இருப்பதென்னவோ வீட்டிலிருந்து ஆபீஸ் போகும் சொற்ப நேரம் மட்டுமே. அதாவது, காருக்குள்ளே இருக்கிற ‘வெளியில்’ இருக்கும் நேரம். செயற்கை விளக்குகள் ஒளியூட்ட, மேலாளர் துரத்த, காலண்டரில் கிழமைகள் மறைந்து வேலை முடிக்க வேண்டிய நாள் மட்டுமே கண்ணில் தெரிய, வேலை செய்துவிட்டு வெளியில் வந்தால், ‘மகனே எனக்கும் நேரமாகிவிட்டது நானும் போயாக வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டு ஓடிப்போகிறது வெளிச்சம்.

இன்று அதிகக் குளிரும் இல்லை, இன்னும் கொஞ்ச நாளில் தகிக்கப்போகும் வெயிலும் இல்லை. மிதமான தென்றலை வருடியபடி, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தால்…நடந்து பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்!

Advertisements

Comments

1. athe nilaiyil oruvan - Sunday March 28, 2004

enna kaalaniyaa irunthaa enna ? neega amrikavila irunthu kondu ippadi zuthalaama ?


Sorry comments are closed for this entry

%d bloggers like this: