jump to navigation

இணையத்தில் தமிழ் செயல்பாடுகள் Wednesday March 10, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

வலைப்பூவில் இவ்வார ஆசிரியராக இருக்கும் அருணா ஸ்ரீனிவாசன், இணையத்தில் தமிழ் செயல்பாடுகள் பற்றிய மாலனின் கருத்துகளை இட்டிருந்தார்.

அதையொட்டி…(மேற்கோள்கள் சிவப்பு வண்ணத்தில்).வலைப்பூ என்பது (personal) web log. ஒரு நபரின் நாட்குறிப்பின் பக்கங்களைப் போல. அதில் கவிதை இருக்கலாம். கவலை இருக்கலாம். ஒரு அனுபவம், வம்பளப்பு, கிசுகிசு, புலம்பல், ருத்ர தாண்டவம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். (நாம் எல்லா நாளும் ஒரே மனநிலையிலா இருக்கிறோம்?) ஆனால் எது இருந்தாலும் அதில் ஒரு அந்தரஙக் தொனி, personal touch, இருக்க வேண்டும்இதற்கு பதில் எழுத வேண்டுமானால் ஆங்கிலத்தில் ‘with due respect’ என்றுதான் ஆரம்பிக்க வேண்டும்; தமிழில் எப்படி என்று தெரியவில்லை, போகட்டும்.

எனது சொந்த வலைப்பதிவு என் அந்தரங்கங்களைப் பதியும் இடம் அல்ல. என் எண்ணங்களை அள்ளித் தெளிக்கும் இடம்.ஆனால் தமிழில் எல்லாம் அவியலாகக் கிடக்கிறது. பெரும்பாலான வலைப்பூக்கள் வலை இதழ்கள் போல, குறைந்த பட்சம் ஒரு வலைத் தளம் போல இருக்கின்றன. தன்னுடைய படைப்பு, மற்றவர் படைப்பு, மனிதர்படம், பூக்கள், வாத்து, கோழி போன்ற ‘காலண்டர்’ படங்கள், என்று தூள் பறக்கிறது. அந்தரங்க தொனியைத்தான் காணோம்.படித்ததில், பார்த்ததில் பிடித்தது என்று பகிர்ந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? படங்களைப் பதிவதற்கென்றே ஒருவர் வலைப்பதிவு வைத்துக் கொள்ளலாம் தெரியுமா? பார்க்க textamerica.

ஒரு வலைப்பதிவைக் கட்டி மேய்க்கவே நேரமில்லாதவர் இதற்கென்று தனியாக வலைப்பதிவை உருவாக்குவதைத் தவிர்த்து கண்ணில் பட்ட, பிடித்த படத்தை தன் வலைப்பதிவில் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், இது அடிக்கடி நிகழ்ந்தால், அது நல்லதில்லை என்றுதான் சொல்வேன்.இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் ‘வலைப்பூ’ என்கிற வலைப்பூ ஒரு மினி விவாதக்குழுவாக இருக்கிறது. அதன் ஆசிரியராக இருப்பவர் என்ன செய்யலாம். ஒவ்வொருநாளும் எல்லா வலைப்பூக்களுக்கும் ஒரு உலா போய்வந்து, இன்னின்ன விஷயங்கள் என் கண்களில் பட்டன, அவற்றில் இவையிவை சூப்பர், இதெல்லாம் பேத்தல், இதைப் படித்து சிரித்தேன் என்று தன்னுடைய வியப்பு, வியர்ப்பு, அலுப்பு, சிரிப்பு எல்லாவற்றையும் கொட்டலாம். அந்தந்த வலைப்பூக்களின் சுட்டியை மட்டும் கொடுக்கலாம். அங்கே போய் பார்ப்பவர்கள் வேறு சில விஷயங்களைப் படிக்க நேரலாம்.வலைப்பதிவுகளின் எண்ணிக்கைப் பெருக ஆரம்பித்த காலத்தில் (ரொம்ப காலமெல்லாம் இல்லை) இந்த RSS ஓடை சமாச்சாரமெல்லாம் தமிழ் வலைப்பதிவர்கள் மத்தியில் பிரபலம் இல்லை. இற்றைப்படுத்தப்பட்ட பதிவை அறிய எல்லாரும் மெனக்கடுவதைவிட வாரம் ஒருவர் இந்த வேலையைச் செய்து அதைப்பற்றி ஒரு இடத்தில் எழுதலாம் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் வலைப்பூ.

ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, பிறகு கொஞ்சம் தடம் மாறியது. இப்போது அது ஒரு “சஞ்சிகை” என்ற தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. வலைப்பூ ஒரு இணைய சஞ்சிகை அல்ல.

ஆனால், அங்கே எழுந்த சில விவாதங்கள் பல புதிய வழிகளைக் காட்டியதை மறுக்க முடியாது.

இப்போது RSS ஓடை போன்ற வசதிகள் பிரபலமாகிவிட்ட நிலையில் வலைப்பூ, வாரம் ஒருவர் பதியும் ஒரு கூட்டு வலைப்பதிவு மாதிரி கிட்டத்தட்ட ஆகிவிட்டது. அதனால்தான் சொல்கிறேன் அது ஒரு இணைய சஞ்சிகை அல்ல.காலையில் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் 70 80 மின்னஞ்சல்கள். எல்லாம் மடலாடற்குழுவிலிருந்து வருபவை. (நான் ஒரு நான்கைந்து குழுக்களில் இருக்கிறேன்.) பாதிக்கு மேல் வெட்டி அரட்டை. சிலர் சில கீ.மீ நீளத்திற்கு கதைகளைப் போட்டு விடுகிறார்கள். 28bps அல்லது 56bps வசதி உள்ள சென்னை வீடாக இருந்தால் அது வந்து இறங்குவதற்குள் மாமாங்கத்திற்குப் போய் அந்த அழுக்குத் தண்ணீரில் ஒரு முழுக்குப் போட்டு வந்து விடலாம். அந்த நண்பர்கள் ஏன் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதில் தங்கள் கதையை பிரசுரித்து அதன் சுட்டியை மட்டும் அனுப்பக் கூடாது?குழுமங்களில் எப்போதும் செறிவான விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. வெட்டி அரட்டைகள் (படிக்க: நகைச்சுவை மடல்கள்) என்பது இல்லாவிட்டால் என்னால் அங்கே இருக்கவே முடியாது. ‘இந்தக் குழுவில் சீரியஸாக மட்டுமே எழுதவேண்டும்’ என்று போர்டு போட்டுக்கொண்டு வேண்டுமானால் செய்யலாம்.

மேலும், குழுக்கள் என்பவை விவாதிக்க மட்டுமே அல்ல. இணையத்தில் புதிய நண்பர்கள் கிடைக்க குழுக்கள் மாதிரி எந்த இடமும் இல்லை என்பது என் கருத்து. நீங்கள் யாஹூ அரட்டை மாதிரியான இடங்களுக்குச் சென்றிருந்தீர்கள்யேயானால் நான் சொல்வது புரியும்(அதையெல்லாம் நான் விட்டு ஆச்சு மாமாங்கம்).

குழுக்களில் கதை, கவிதைகளை இடுவது பலரைச் சென்றடையும். குறிப்பாக, புதிதாக எழுத ஆரம்பிப்பவர்கள் தங்கள் படைப்பை பலரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். குழுவில் அவற்றை இடும்போது அங்கு வரும் எதிர்வினைகள் அவர்களை செம்மைப்படுத்த உதவுகிறது.

‘ஏன் வலைப்பதிவில் இடக்கூடாது?’ என்ற கேள்விக்கு பதில், இது வலைப்பதிவில் இட வேண்டிய சமாச்சாரம் இல்லை; வலைத்தளத்தில் இட வேண்டியது.

சரி, அப்படியே இட்டு சுட்டியைக் கொடுக்கிறார்கள் என்று கொள்வோம். எத்தனை பேர் அக்கறையோடு போய் படிப்பார்கள்? எதிர்வினைகள் தருவார்கள்? இன்னொரு வலைத்தளத்துக்குப் போகணுமா, வேறு வேலை இல்லை என்று போவதுதான் மனித இயல்பு.

இந்தியாவில் இணைய இணைப்பு வேகம் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. இதுவே பலர் குழும மடல்களை நேரடியாக இணையத்தில் படிக்கத் தடையாக இருக்கிறது. எனவே பலர் Individual e-mail என்பதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் (பலருக்கு individual e-mail, daily digest, special announcement என்று பல வழிகளில் மடல்களைப் பெறலாம் என்பதே தெரியவில்லை என்பது வேறு விஷயம்).

நான் உறுப்பினராக இருக்கும் எல்லாக் குழுவிலும் No e-mail-ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். எனக்குத் தேவையான மடல்களை மட்டும் படிக்க இது வசதியாக உள்ளது. தினமும் மின்னஞ்சல் பெட்டிக்கு போகிப்பண்டிகைக் கொண்டாட அவசியமில்லை.

இதில் மிகப்பெரிய வசதி, பிட் நோட்டீஸ் மாதிரி ஒரே மடலை பல குழுக்களில் இடுபவர்களின் (cross posting) இம்சையைத் தவிர்ப்பது (இதைப்பற்றி முன்பொரு காலத்தில் வலைப்பதிந்திருக்கிறேன். தேடி எடுக்க நேரமில்லை. பழைய வீட்டில் இருக்கும். தலைப்பு: ஒரே படைப்பு பல இடங்களில்).

குழுமங்கள்(மன்ற மையம் போன்றவையும் சேர்த்து), இணைய சஞ்சிகைகள், வலைப்பதிவு, வலைத்தளம் – இந்த வரிசையில்தான் தமிழ் இணைய செயல்பாடு நடக்கிறது.

குழுமங்கள் மற்றும் இணைய சஞ்சிகைகள்: எழுதினோமா,ஆச்சரியக் குறிகள், முற்றுப்புள்ளி வரிசைகள்(கோலம் போட வசதியாக…….), கேள்விக்குறிகள் என கையில் பட்டதை அள்ளித்தெளித்தோமா, Send பொத்தானைச் சொடுக்கினோமா அத்தோடு வேலை முடிந்தது(பிழைதிருத்தம் என்பதெல்லாம் என்ன?).

வலைப்பதிவு: ஐயோ எனக்கு கம்ப்யூட்டர்ல ஒண்ணுமே தெரியாது (அல்லது) எனக்கு HTML-னா என்னன்னே தெரியாது.

வலைத்தளம்: அப்படி என்றால் என்ன?

கணினி என்பது இனி வாழ்க்கையில் ஒன்றிப்போன ஒன்று. அதைப் பயன்படுத்தி வேலைகள் நமக்குத் தேவையான வேலைகள் செய்யவேண்டுமெனில் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முதலில் மக்கள் உணரவேண்டும்.

அடுத்த கட்டமாக இணையம் இல்லையேல் கணினி ஒரு வெறும் கால்குலேட்டர் மாதிரிதான் (வீட்டுபயோகக் கணினிகள்). இங்கே தொழில்நுட்பம் அசுர வேகத்தில் முன்னேறும். இவற்றைக் கற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளவாவது(தேவையான்வற்றை) முயற்சி செய்ய வேண்டும். உதவ தன்னார்வலர்கள் இருக்கின்றனர்.

இணைய நெறிமுறைகளை(etiquette) காலப்போக்கில் கற்றுக்கொள்ள வேண்டும் – இது மிக முக்கியம்.

எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்துவிட்டது. ஆனாலும், சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

Advertisements

Comments

1. பாலாஜி - Wednesday March 10, 2004

Well written. I was correlating my thoughts (in similar lines); but after seeing this post…

2. paari - Thursday March 11, 2004

pari,

Well said.

3. S Krupa Shankar - Thursday March 11, 2004

oi pari…

first thanglish-kku “Sorry…”

>நமக்குத் தேவையான வேலைகள் செய்யவேண்டுமெனில் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முதலில் மக்கள் உணரவேண்டும்

yedhuvum katrukkollaamaley, verum “SEND” button click panni dhenamum blogging panna mudiyum…avvalavu sulabamaaga menporul thamizhil vandhuvittaal. aaga, ippo prachchanai adhudhaan…user-friendly thamizh software (yengum payanpaduththa koodiya) innum varavillai.

krupa


Sorry comments are closed for this entry

%d bloggers like this: