jump to navigation

இயங்கு எழுத்துருக்கள் தேவையா இல்லையா? Monday March 8, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இயங்கு எழுத்துருக்களை உபயோகிப்பது நல்லதில்லை என்று வெங்கட் எழுதியிருக்கிறார். இதுபற்றி என் கருத்துகள் சில

அவருடைய வாதம் தமிழ் யுனிகோட் பக்கங்களைப் படிக்க விரும்புவோர் எழுத்துருக்களை தேடிக்கண்டுபிடித்து இறக்கிக்கொள்வார்கள், இதனால் எழுத்துருக்கள் பரவலாகும் என்பதே. உண்மைதான். ஆனால் நிலைமை என்ன? நான் அலுவலகத்தில் தமிழ்ப்படிக்க வேண்டுமானால் எழுத்துருவை இறக்கி நிறுவ வேண்டும். ஆனால், என் அலுவலக கணினியில் எதையும் நிறுவும் அதிகாரம் இல்லை நான் என்ன செய்ய முடியும்?

துபாயிலோ, ரியாத்திலோ வசிக்கும், வீட்டில் கணினி இல்லாத ஒருவர் (ஒரு உதாரணத்திற்குதான்), ப்ரவுசிங் செண்டரில் மட்டுமே இணையத்தைப் பார்க்க முடியும் என்ற நிலையில், அவர் விருப்பப்படி ஒரு எழுத்துருவை இறக்கி நிறுவ கட்டுப்பாடு தடை செய்தால் என்ன செய்ய முடியும்?

பொது இடங்களில் இருக்கும் கணினிகளில் குறிப்பாக நூலகங்களில் இருக்கும் கணினிகளில் கட்டுப்பாடுகள் மிக அதிகம். இங்கே நம் விருப்பப்படி எதையும் செய்ய முடியாது. அங்கெல்லாம் இந்த இயங்கு எழுத்துரு மிகவும் உதவியாக இருக்கிறது.

அதற்காக குமுதம், விகடன் என தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பெரும்பாலான தமிழ் இணையப்பக்கங்கள் என் கோடிங் என்னோடு மட்டுமே என என்கோடிங் முறைகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை. யுனிகோட் பக்கங்களுக்கு இயங்கு எழுத்துருக்கள் *தற்சமயத்திற்கு* உபயோகிப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. தமிழில் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

யுனிகோட் வலைப்பதிவுகளுக்கோ, இணையத்தளங்களுக்கோ வரும் வாசகர்களிடம், யுனிகோட் எழுத்துருக்களை இறக்கிக்கொள்ள கேட்டுக்கொள்வது யுனிகோட் எழுத்துருக்களை பரவலாக்கும்.

எல்லாரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து குமுதம், விகடன் போன்றவர்களை மொத்தி, யுனிகோடுக்கு மாறச் சொல்ல வேண்டும்.

தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வேண்டும்.

தமிழ் யுனிகோட் எழுத்துகளை பொட்டலம் கட்டி வைத்திருக்கிறேன். தேவையானோர் இங்கே சுட்டி இறக்கிக் கொள்ளலாம். விரைவில் வலப்பக்கம் ஒரு இணைப்பைக் கொடுக்கிறேன். எழுத்துருக்கள் உதவிப்பக்கம் ஒன்றையும் அமைக்கிறேன்.

Advertisements

Comments

1. Muthu - Monday March 8, 2004

பரி..உங்கள் டிராக்பேக்கில் ஏதாவது பிரச்சனையா என்ரு பாருங்கள் .. என்னால் நான் கொடுத்த பிந்தொடர்வைச் சரியாகக் காண இயலவில்லை.

2. பாண்டியன் - Tuesday March 9, 2004

அன்பு பரி

தங்கள் வாதம் நியாயமானது. ஆனால் TSCIIக்கு வேண்டுமானால் நியாயமானதுதான். ஏனென்றால் தற்போது தமிழானது universal எழுத்துருக்களோடு வருகிறது. விண்டோஸின் பதிப்புகளில்தான் ArialUnicodeMS வருகிறதே. லினக்ஸில் சற்றுச் சிக்கல்தான். தமிழ் பொதியைத் தகட்டில் தேடி அவர்களி நிறுவாவிட்டால் தமிழ் தெரியாது. ஆனால் மறுபக்கம் பார்த்தால் மோஸில்லா இயங்குஎழுத்துருக்களை மறுத்துவிடும். அப்போதைக்கு…..!

3. பரி - Tuesday March 9, 2004

முத்து: அது haloscan பிரச்சினை(encoding) என்று நினைக்கிறேன். இப்போது சரி செய்துவிட்டீர்கள் போல் தெரிகிறது.

பாண்டியன்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. இன்று இந்தியாவில் பரவலாக பாவிக்கப்படுவது Win 95/98/ME.

IE பயனாளர்கள் சதவீதம் என்ன என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் தான் அப்படிச்சொன்னேன்.

4. காசி - Tuesday March 9, 2004

இப்ப பின் தொடர்பு அழகா இருக்கு 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: