jump to navigation

ஃபயர்ஃபாக்ஸ் உலாவி Friday March 5, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஃபயர்ஃபாக்ஸ் என்ற மொசில்லா உலாவி கிட்டத்தட்ட Internet Explorer போலவே உள்ளது. இதில் RSS செய்தி ஓடைகளைப் படிக்க முடியும் என்று வெங்கட் எழுதியிருக்கிறார்.

நானும் சோதித்துப்பார்த்தேன். உலாவி நன்றாக இருக்கிறது. ஆனால், சில பிரச்சினைகள்.

1. இலவச blogspot பதிவுகளின் atom ஓடையைப் படிப்பதில் சிரமம். உதாரணத்திற்கு பாலாஜியின் ஓடையைப் படிக்க முயன்றால் இந்தப் பிழைச் செய்தி வருகிறது. இது blogger பிரச்சினை என்று நினைக்கிறேன்.

URL: http://www.blogger.com/atom/6166954/107852235536106401

Error: “We’re sorry but the Username/Password combination you’ve entered is either invalid or you don’t have permission to access this Blog.”

2. உலாவி, யுனிகோட் பக்கங்களைக் காட்டுவதில் consistency இல்லை.இந்தப்படத்தில் உள்ள திசைகள் இதழின் ஒரு (படம் மேலெழும்பும்). ‘ஒ’கர, ‘ஓ’கார எழுத்துகளை (கொ, கோ) காண்பிப்பதில் பிரச்சினை. ஆனால், இடப்பக்கம் இருக்கும் ‘கோவில்’ என்ற வார்த்தைச் சரியாகத் தெரிகிறது பாருங்கள்.

Advertisements

Comments

1. பத்ரி - Saturday March 6, 2004

1. எனக்கும் இந்தப் பிரச்சினை எழுந்தது. Atom feed அப்படியே போட்டால் click செய்து சரியான இடத்துக்குப் போக முடியாததால், நான் http://www.2rss.com/atom2rs… feed> என்றுதான் atom->rss செய்து ஓட்டுகிறேன். சரியாக வருகிறது.

2. இதில் பல காரணங்கள் உள்ளன. இது firefoxஇன் குற்றம் என்று எனக்குத் தோன்றவில்லை. என் Win XP இல் நீங்கள் சொன்ன பக்கம் http://www.thisaigal.com/MA… சரியாகவே வருகிறது.

இப்பொழுதைக்கு எனக்கு firefox பிடித்துள்ளது. ஆனால், firefox/mozilla இரண்டிலுமே வேறு பிரச்சினைகள் உள்ளன. TSCIIஇல் groups.yahoo.com வழியாக post செய்வதில் … அதற்கு நான் இன்னமும் IEதான் பாவிக்கிறேன்.

2. செல்வராஜ் - Saturday March 6, 2004

பரி, எனது பின் தொடர் இணைப்புச் சரியாகத் தென்படுகிறது. thoughtsintamilகாரர் தான் எண் மயமாய்த் தெரிகிறார். என்னுடைய செய்தியோடையில் இன்னும் உங்களுக்குச் சிக்கல் இருக்கிறதா ? எனக்கு ஷார்ப்ரீடரில் சரியாக வருகிறதே…

3. வெ ங்கட் - Saturday March 6, 2004

பரி,

நீங்கள் சொல்லும் இரண்டு பிரச்சனைகளும் FireFox ல் இல்லை. (அ) இலவசச் சேவைகளில் ஆட்டம் ஓடை அமையும் விதம் பிழையாக இருக்கிறது. (ஆ) உங்கள் திரைக்காட்சியில் தெரியும் அதே பக்கம் என்னுடைய FireFox உலாவியில் அழகாகத் தெரிகிறது.

பத்ரி, மைக்ரோஸாப்ட் IE W3Cயால் பரிந்துரைக்கப்படாத பல பிரத்தியேக முறைகளை உள்ளடக்கியது. இதைப் பயன்படுத்த வேண்டிய தேவைகளுக்காக மைக்ரோஸாப்ட் நுகர்வோர்களைத் தங்கள் மென்கலனுடன் கட்டிப் போடுகிறது. இதை ஐஈயின் சிறப்பாக என்னால் கொள்ளமுடியவில்லை.

இதே காரணத்திற்காகத்தான் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதை நான் தவிர்க்கிறேன்; தவிர்க்கப் பரிந்துரைக்கிறேன்.

4. பரி - Sunday March 7, 2004

பத்ரி: atom பற்றிய தகவலுக்கு நன்றி. முன்பு tamilblog-ல் படித்தது இப்போதுதான் ஞாபகம் வருகிறது.

செல்வராஜ்: உங்கள் செய்தியோடை இப்போது சரியாகிவிட்டது.

வெங்கட்: atom பற்றி பத்ரி சொன்ன முறையில் atom ஓடைகளை(இலவச) படிக்கிறீர்களா?

firefox பிரச்சினை (WinXP Pro): எனக்கு மட்டும் ஏன்? ஏன்? ஏன்? 🙂

I tried reinstalling and changed font settings, but no help 😦

என்னுடைய பின் தொடர்தலை இன்னும் சரி செய்யவில்லை. இரண்டொரு நாட்களில் செய்துவிடுவேன்.

பத்ரியின் பின்தொடர்தல் இடுகை எண்களாக இருப்பதற்குக் காரணம் தெரியவில்லை.(செல்வராஜ் இடுகை சரியாகத் தெரிகிறது)


Sorry comments are closed for this entry

%d bloggers like this: