jump to navigation

பாடல் ஒன்று Thursday March 4, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

(பல்லவி)

யார் போகும் வழியில்

விழியே போகிறாய்

தினமும் நீ போகும் வழியில்

இதயம் போகுதே

(அனுபல்லவி)

ஏன் இளமை பூத்ததோ

என் வாழ்விலே

தானாக ஆனந்தம் தேடி வருதோ

(சரணம் 1)

மேகம் ஓடிப்போனாலும்

வானம் ஓடிப்போவதில்லை

தேகம் மாறிப்போனாலும்

தாகம் மாறிப்போவதில்லை

பாதை மாறவில்லை

பார்வை மாறிப்போனதே

(சரணம் 2)

வானம் போடும் மேலாடை

வண்ணம் இங்கு மாறிடலாம்

நாளும் தேடிப்பார்த்தாலும்

நானும் இன்று மாறியதேன்

கண்கள் பார்க்கும் பார்வைகள்

காதலாக மாறுதோ

———————————————-

என்ன படம் என்று தெரியாது. நேற்றிலிருந்து எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது (mp3) ஆனாலும், அலுக்கவில்லை.

பாடியது யேசுதாஸா, ஜெயச்சந்திரனா என்று சரியாக அடையாளம் காண முடியவில்லை.

Advertisements
%d bloggers like this: