jump to navigation

மனிதன் மாறிவிட்டான்; மதத்தில் ஏறிவிட்டான் Wednesday February 25, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

முதலில் இதைப் படித்துவிட்டு வாருங்கள்.

  • இந்திய ஒருமைப்பாட்டு உறுதிமொழியில் கடவுள் சம்பந்தமாக ஒரு வார்த்தை கிடையாது
  • இந்திய தேசிய கீதத்தில் கடவுள் பற்றி ஒரு வார்த்தை கிடையாது
  • இந்தியப் பிரதமர் உட்பட மக்கள் பிரதிநிதிகள், பதவிப்பிரமாணம் எடுக்கும் போது பகவத் கீதை, குர் ஆன், பைபிள் என எதன் மீதும் சத்தியம் செய்வதில்லை (சந்தேகமாகவே இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

சரி இப்போது அந்தக் கட்டுரைப்பக்கம் போவோம்.

It is very important at this point to make a critical distinction: to be willing to die for one’s faith is utterly different than to kill for it.

இதில் என்ன சொல்ல வருகிறார் என்று கண்டுபிடிக்க யாரும் பெரிய ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டியதில்லை.

As an evangelical Christian I believe in the right to share my faith and to seek to persuade others, as they have an equal right to seek to persuade me, but force or coercion – never!

எப்படி persuade செய்கிறார்கள் என்பதை வரையறுக்கச் சொன்னால் தெரியும் சங்கதி.

குறிப்பு: மத நம்பிக்கை கொண்டவர்களுக்கெதிரான (அதிலும் ஒருகுறிப்பிட்ட பிரிவினருக்கெதிரான) கருத்துகள் அல்ல.

வழக்கம்போல ஒரு பொதுப்பார்வை.

Advertisements

Comments

1. -/ramanitharan, k. - Wednesday February 25, 2004

பரிமேழலகர்,

இந்த southern baptist convention ஆட்கள் அடிக்கடி மற்றையமதங்களைச் சேர்ந்தவர்களைப் புண்படுத்திவிட்டதாகவும் செய்திகள் வருவதுண்டு. தீபாவளியிலே இந்துக்களை இருட்டிலிருந்து ஒளிக்குக்கொண்டுவரவேண்டும் என்பது தொடக்கம், யூதர்கள், முஸ்லீம்களை ஈடேற்றக் கிறீத்துவத்தைத் தழுவச்செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லி, இந்த மூன்று மதத்தினரையும் ஒற்றுமையாக ஊர்வலம் போகவைத்த பெருமை இவர்களுக்கு உண்டு. எத்தனை அரசுகளே செய்யமுடியாத இந்தக்காரியத்தினை சில துண்டுப்பிரசுரங்கள், கையேடுகளினாலே செய்துவைத்த வித்தகர்கள்.

2. பரி - Thursday February 26, 2004

இதில் அரசு நேரடியாக செயல்படாது. Seperation of church and state குறுக்கே வரும். அதனால், வெளியிலிருந்து ஆதரவு மட்டுமே.

ஜார்ஜ் புஷ் பதவியேற்றவுடன் முதலில் எதில் கையெழுத்திட்டார் என்பதை வெள்ளை மாளிகை <a href=”http://www.whitehouse.gov/n…” target=”_blank”>இணயத்தளத்தில்</a> பாருங்கள் 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: