jump to navigation

நியூக்ளியஸ் – ஒரு அனுபவம் Wednesday February 25, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இலவச வலைப்பதிவு சேவைகளில் திருப்தியடையாமல் சொந்தமாக ஒரு களம் வாங்கி அதில் இந்த நியூக்ளியஸ் சாஃப்ட்வேரை நிறுவி ஏதோ கொஞ்சம் கிறுக்கவும் முடிகிறது. சந்தோஷம் தான். ஆனால், இந்தப் பக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த நியூக்ளியஸ்.

சாஃப்ட்வேர் தயாரிப்பில் modular development எனப்படும் கூறுபிரித்தல் அடிப்படையில் இது இயங்குகிறது. இந்தக் கூறுபிரித்தல், ஒரு சாஃப்ட்வேர் ஆசாமிக்கு வேண்டுமானால் எளிதில் பிடிபடலாம், ஆனால், ஒரு சாதாரண பயனருக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதைதான்.

ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானால் இரண்டு மூன்று இடங்களில் கை வைக்க வேண்டியிருக்கிறது. நிறுவிய நாளிலிருந்த தோற்றத்திலிருந்து இன்றைய தோற்றத்திற்குக் கொண்டுவர கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

இன்னும் ஆவணக்கோப்பு (arhives) பகுதியை சரி பண்ணவில்லை. கருத்துகள்/மறுமொழிகள் பகுதியில் முகக்குறிகளை இணைக்கவில்லை. இதையெல்லாம் செய்யலாம் என்ற நினைக்கும்போதே இதைச் சரி செய்ய மெனக்கட வேண்டிய நேரமும் நினைவுக்கு வந்து அப்படியே கிடப்பில் போட வேண்டியிருக்கிறது.

நியூக்ளியஸை அளவுக்கு அதிகமாக கூறுபிரித்து கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள் என்றுதான் நான் சொல்வேன்.

‘மூவபிள் டைப்’பும் இதற்கு சளைத்ததல்ல என்று கேள்விப்படுகிறேன். அதை நிறுவுவதற்கே தனி ஆள் ஒருவர் முன்வருவதாகத் தெரிகிறது (காசு வாங்கிக்கொண்டு?)

மூவபிள் டைப் வைத்திருப்பவர்கள் அனுபவம் என்ன?

Advertisements

Comments

1. காசி - Thursday February 26, 2004

யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க, எல்லாம் நாமளேதான் தடுக்கி உளுந்து கரணம் போடணும் சாமி


Sorry comments are closed for this entry

%d bloggers like this: