jump to navigation

Decoding பெயரிலி Friday February 20, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இணையத்தில் அடுத்த அலை, முகமூடிகள் பற்றியது. காத்தடிக்கிற பக்கம் சாய்கிறா ஆள் நான் இல்லை என்றாலும் கொஞ்சம் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

முகமூடி போடாமல் இணையத்தில் காலம் தள்ளுவது யாருக்கும் முடியாத காரியம். எங்கெங்கு போடலாம் என்பதற்கு நான் ஒரு வரைமுறை வைத்திருக்கிறேன். தேவையில்லாமல் முகமூடி போடுவதில்லை. அது போகட்டும், இப்போது நடக்கும் விவாதங்கள் ஆட்டைச்சுற்றி மாட்டைச்சுற்றி கடைசியில் ‘பெயரிலி’ பக்கமே முடிகிறது.

பெயரிலி எழுதுவது நகைச்சுவையாக இருந்தாலும் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது. ஓரளவுக்கு உண்மைதான்.

ஐயையோ, சொல்ல மறந்துட்டேன்! பெயரிலிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பெயரிலி யாரென்றே எனக்குத் தெரியாது!

சரி, பெயரிலி செய்வது என்ன?

பெயரிலி தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு முன்பே அந்த நகைச்சுவை எனக்குப் பிடித்துவிட்டது. நகைச்சுவையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லை என்பது சோகமான விஷயம். ‘நீ எப்படி என்னை இப்படிச் சொல்லலாம்?’ என்று வரிந்து கட்டிக்கொண்டு கேள்வி கேட்க முற்படுகிறோமே தவிர சிரிப்பதில்லை.

இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் பெயரிலி எழுதுவது கூட (அப்படி எல்லாரும் கற்பனை செய்வது) நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. மாற்றுக்கருத்து இருந்தால் அதை நாமும் நகைச்சுவையாகச் சொன்னால் சூழ்நிலை இலகுவாகிவிடும். காச் மூச் என்று கத்த வேண்டாம் பாருங்கள்.

பெயரிலி எழுதுவதை எப்படிப் புரிந்து கொள்வது?

– பெயரிலி இணைக்கும் வலைப்பதிவை படித்து விடுதல் நலம்

– தமிழ்க் குழுமங்களின் நடப்பு தெரிந்திருக்க வேண்டும் (பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள்/எழுத்துகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்)

– அமெரிக்காவில் நடப்பவை பற்றி பரிச்சயம் இருக்க வேண்டும்(இது கொஞ்சம் முக்கியம்)

– புராணங்கள் கொஞ்சம் நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும்

– மேலை நாட்டு விஷயங்கள் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்

– இவை எல்லாவற்றையும் முடிச்சு போடத் தெரிய வேண்டும். அங்குதான் சூட்சமமே இருக்கிறது!

சரி இதெல்லாம் செய்தால் முழுவதுமாக புரிந்துவிடுமா?

– கூடுமான வரையில்.

எனக்கு இலக்கிய சமாச்சாரம் தவிர மற்றவை 75% புரியும் 🙂

பெயரிலியால் கற்றுக்கொண்டது சில. அதில் குறிப்பிடத்தக்கது ‘சென்றியூ’. சென்றியூ என்று ஒரு சமாச்சாரமே சத்தியமாக எனக்குத் தெரியாது. அதற்கு ஸ்பெல்லிங்க் கூட தெரியாது! யூகத்தின் அடிப்படையில் (senryu) கூகிளை நாடியபோது வண்டி வண்டியாய் தகவல் கிடைத்தது.

நான் பெயரிலிப் பதிவைப் படிப்பது சிரிப்பதற்கும் கொஞ்சம் கற்றுக்கொள்வதற்கும். பெயரிலியின் பெனாத்தல்களுக்குப் பின்னால் அது இருக்கு, இது இருக்கு என்ற கோணம் எனக்கு எப்போதும் தோன்றியதில்லை.

பெயரிலி சொன்னது போல நகைச்சுவை என்றால் ஒன்று பிராமண பாஷை அல்லது பேட்டை பாஷை என்பது அலுத்துவிட்டது. இது வித்தியாசமாக இருக்கிறது, எனக்குப் பிடிக்கிறது.

சொல்ல மறந்துட்டேனே, இட்லி வடையும் பிடிக்கும் 🙂

Advertisements

Comments

1. Sundaravadivel - Friday February 20, 2004

விரைவில் Peyarili for Dummies என ஒரு புத்தகம் எழுதுவீர்கள் என நம்பலாமா? ஐயோ இதை யாரேனும் கோணல் மாணலாகப் படித்துவிட்டு Peyarili is only for Dummies என்று புரிந்து கொண்டு அக்காவிடம் போட்டுக் கொடுக்காமல் இருந்தால் சரி. அவரே இப்போதுதான் சித்தர் பாட்டெல்லாம் பாடி அழுது களைத்திருக்கிறார்!

2. Ramani - Saturday February 21, 2004

இந்த பெயரிலி எழுதற கண்றாவிய மனுசன் படிக்கமுடியுமா? நீங்க வேற நகைச்சுவையையும் கொழுப்பெடுத்த கிண்டலையும் குழப்பிக்கறீங்களே! ஒரு வேலைவெட்டியில்லாத அக்காவோ(??) தாத்தாவோ ராப்பகலா தன்னோட அறிவையும் blogdriveவையும் வீணடிக்கறதுதான் உண்மை.

3. usha - Sunday February 22, 2004

ÀâìÌ 75% ÒâԾ¡? ÀÚ¢ø¨Ä§Â

4. -/ramanitharan, k. - Sunday February 22, 2004

அந்த இரமணி சொன்னதுதான் இந்த இரமணிதரனின் கருத்து என்றாலும் ஒரு பத்துவீதம் பரி பக்கம்,உம் கொள்ளை.. இல்லை …கொள்கையைச் சாயவிடுகிறேன் (இன்றைக்குப் பெயரிலி கொள்ளை அடிப்பது பற்றி சொன்னதன் தாக்கமோ தெரியவில்லை). இன்றைக்கு நீங்கள் எழுதியதைப் பெயரிலி படித்தாரோ என்னமோ தெரியவில்லை. தனக்குத்தானே (? தமக்குத் தாமே) புதுச்சட்டதிட்டங்கள் போட்டிருக்கிறார்.:)

அந்த இரமணி, சிலந்திவலை இரமணியா? உங்கள் http://silandhivalai.blogsp… இனை ஏன் அப்படியே நிறுத்திவிட்டீர்கள்?

5. பரி - Sunday February 22, 2004

பெயர்க்குழப்பம் ஒரு தீராத பிரச்சினையா இருக்கும் போல இருக்கே 🙂

ஊர் முழுக்க பெயரிலி தலை உருளுது. என் பங்குக்கு நானும் உருட்டிட்டேன், அவ்ளோதான் 🙂

6. பாலாஜி - Monday February 23, 2004

இங்கு காணப்படும் ஆங்கில மற்றும் டிஸ்கி பதிவுகள் எனக்கு ஏன் ப்ளாக், சதுரம், ரெக்டாங்கிள் (இதுக்கு தமிழில் என்ன?) என விதவிதமாக தெரிகிறது. ‘வலைப்பூ’விலும் சில நாட்களாக இப்படி ஆகிப் போயிற்று. (காசி, பெயரிலி, பத்ரி, வெங்கட் இன்ன பிறர் இன்னும் தெளிவாகப் படிக்க முடிகிறது).

இந்த blocks உங்கள் குத்தமா? டெம்பிளேட் குத்தமா? என் கணினி செட்-அப் குத்தமா?

தேர்வு செய்து, எடிட்…காபி… செய்து, நோட்பேடில் பேஸ்ட் செய்து படிக்க :((

7. செல்வராஜ் - Monday February 23, 2004

ஆரம்பத்தில் பெயரிலியைப் படிக்கச் சுவாரசியமாய்த் தான் இருந்தது. இருந்தாலும், அதையே இன்னும் நன்றாக எழுதுவாராயின் (பக்க அமைப்பு முறை, பின்னணி வர்ணம், எழுத்துரு அளவு) படிக்கச் சுலபமாய் இருக்கும்.

பினாத்தல்கள் என்று பெயர் வைத்ததால் முற்றுப் புள்ளி, பத்தி என்றெல்லாம் பயன்படுத்தாமல் கண்டபடி எழுதும் முறையைக் கையாள்கிறார். மிகவும் பொறுமையாய்ப் படித்தே புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வளவு பொறுமையாய்ப் படிக்க நேரம் இல்லை. ஆனாலும் அவருடைய அனுபவமும் ஆற்றலும் அதிகம் தான் என்று தோன்றுகிறது.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: