jump to navigation

தமிழே உன் ஆயுள் என்ன? Tuesday February 17, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

##

இன்றைக்கெல்லாம் இணையத்தில் பெரிய கவலை, தமிழ் மொழியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு நாள் என்பதுதான்.

இந்தி எதிர்ப்பு காலத்திலும் அதற்குப்பின்னும் நிகழ்ந்த ‘தமிழ்த்திணிப்பு’தான் தமிழை தமிழர்கள் புறக்கணிக்க பிரதான காரணம் என்கிறார் பாரா. பாவம், அவருக்குக் கொடுத்த ஐந்து நிமிடத்தில் நிறைய பேசிவிட முடியாதுதான், இருந்தாலும் முந்தைய அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருநெல்வேலியில் (என்று ஞாபகம்) உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஒரு சிறுமி தமிழில் பேசிவிட்டாள் என்பதற்காக ‘Tamil Speaking Dog’ என்ற வாசக அட்டையை கழுத்தில் மாட்டி பள்ளியை வலம் வர வைத்த அவலச் செய்தியை எத்தனை பேர் படித்தார்கள் என்பது தெரியாது.

நான் படித்த காலத்தில் மேல்தட்டுப் பையன்களுக்கான அடையாளம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். அந்தஸ்து உயர பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆங்கிலம் பேசுவது.

‘பார்ட்டியில் கூச்சமில்லாமல் இங்கிலீஷில் பேச பத்தே நாளில் பயிற்சி’ என்ற விளம்பரங்களும், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்யாததை அரசியல்வாதிகள் செய்துவிடவில்லை.

‘கருணாநிதி சந்தித்தார் சோனியா காந்தி’ – சமீபத்திய செய்தித் தலைப்பு இது. இதையே ‘Karunanidhi meet Sonia Gandhi’ என்று ஒரு ஆங்கிலப்பத்திரிகை எழுதியிருந்தால் சுரீரெனத் தைக்கும். அது எப்படி இலக்கணப்பிழையோடு எழுதலாம் என்று 1008 கடிதங்கள் போகும் (அப்படிப் போனாலுமே அவற்றின் தரம் எப்படி இருக்கிறதென்பது வேறு விஷயம்).

சிங்கப்பூரில் மக்கள் கண்டிப்பாக தமிங்கிலீஷில்தான், சென்னை அளவுக்குத்தான் பேசுவார்கள் என்பது என் யூகம். ஆனால் ஒலி 96.8-ஐக் கேட்டுப்பாருங்கள்.

New York-இல் (அமெரிக்க) மக்கள் பேசுவது கொச்சை ஆங்கிலமாக இருக்கலாம், ஆனால் New York Times செய்தித்தாளைப் படித்துப்பாருங்கள்.

‘நம்பர் 1’ வார இதழ், செய்தித்தாள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு மேலை நாட்டுச் செய்திகளை சூட்டோடு சூடாக (அரைவேக்காட்டுடன்) தருவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், எழுத்தின் நேர்த்தியிலும் கவனம் செலுத்தினால் உண்மையாகவே ‘நம்பர் 1’ ஆக இருக்கலாம்.

எனக்கு தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்தால் பல வார்த்தைகள் புரியவில்லை என்பவர்கள் ஆங்கிலத்தில் அவ்வாறு புரியவில்லை என்றால் என்ன செய்வார்கள் என்ற கேள்வியைத் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள நினைப்பதில்லை.

கல்கியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது, ‘விட்டால் இவர்கள் தமிழையே இங்கிலீஷில் சொல்லித்தருவார்கள்.’ அப்படித்தான் நடக்கிறது. நடக்கட்டும்; அப்படியாவது நடக்கிறதே!

Advertisements

Comments

1. பாலாஜி - Wednesday February 18, 2004

>>>தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்தால் பல வார்த்தைகள் புரியவில்லை <<<<

ஆமாம்… அனேக சமயங்களில் புரியாத ஆங்கில வார்த்தை விழுந்தாலும், அதற்கு முன்பின் உள்ள வார்த்தைகளை வைத்து புரிந்து கொண்டு விடலாம். context-வைத்தும் தமிழ் புரியாமல் எழுதுபவர்களுக்குத் பொடா வேண்டும் 🙂

ஓலைச்சுவடி, சங்கத் தமிழ், ஆங்கிலேய காலத் தமிழ் என்பது போல் டிவி தமிழ் போய், வேறு ஏதாவது விதத்தில் தமிழ் மாறிவிடலாம்… எது என்பதுதான் விவாதிக்கிறார்கள் 😕

2. usha - Thursday February 19, 2004

´Õ Ó¨È Ì‰Åóò º¢í ¿õÀ “«õÁ¡”Å ¦º¡øÖÈô§À¡Ð, ±ýÉ þí¸£Ä£ÍýÛ

Å¢Âó¾¡Õ! ¦À¡ÐÅ¡ö ÀÊò¾Å÷¸û ±ýÚ

¦º¡øÄ¢ì ¦¸¡ûÀÅ÷¸û ¬í¸¢Ä§Á §À͸¢È¡÷¸û. þÐ ¿õ þó¾¢Â÷¸û «¨ÉÅÕìÌõ

¦À¡ÚóÐõ

3. செல்வராஜ் - Thursday February 19, 2004

>>ஆனால் New York Times செய்தித்தாளைப் படித்துப்பாருங்கள்<<

நீங்கள் சொல்வது மிகவும் நியாயமானது. ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் தரமான நடையில் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. அதற்கான எதிர்பார்ப்பும் வரவேற்பும் பொதுவில் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: