jump to navigation

அம்மா-அப்பா, அம்மா-அம்மா, அப்பா-அப்பா Thursday February 12, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

‘டைம்’ பத்திரிகையில் வெளியாகியிருந்த ஓரினக் கல்யாணம் பற்றிய விரிவான கட்டுரைகளைப் படித்தேன். அமெரிக்காவில் எப்போதும் ஒரு பரபரப்பான செய்தி ஓடிக்கொண்டே இருக்கும். இல்லையென்றால் காடு மாதிரி மண்டியிருக்கும் (எல்லா வடிவ)ஊடகங்களுக்கும் தீனி ஏது?

இந்தச் செய்தி கொஞ்சம் இல்லை மிக அதிகமாகவே வித்தியாசமானது. மாசச்சூஸெட்ஸ் மாநில உச்சநீதிமன்றம் ஓரினக்கல்யாணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. அதைப்பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், இல்லையென்றால் படித்துத் தெரிந்து கொள்ளலாம். நான் சொல்லப்போவது அடுத்த கட்டம் பற்றியது.

ஓரினத்தம்பதிகளுக்கு எப்படி சந்ததி உருவாகும் என்று ஒரு பார்வை.

1. அநாதை ஆசிரமங்களிலிருந்து தத்தெடுத்துக் கொள்வார்கள்

2. “குறைந்த விலையில் கருப்பை வாடகைக்கு” என்ற விளம்பரங்கள் வரும். நாளடைவில் இந்தப்பெண்களை ஒன்றிணைத்து ஒரு பெரிய கம்பெனி உருவாகும்.

3. தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் இன்னொரு கம்பெனி தொட்டியில் மீன் வளர்ப்பதுபோல தொட்டியில் குழந்தை வளரும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும்.

4. இந்தக் கம்பெனிக்கு அதிக அளவில் விந்துவும் கருமுட்டைகளும் தேவைப்படும். உள்ளூர் கறிகாய்க்கடைகளில் கணிச விலைக்கு இவற்றை வாங்க ஏற்பாடு செய்யப்படும்.

5. இவ்வாறு பொரிக்கப்படும் குஞ்சுகளை விற்க மொத்தவியாபாரிகள் வருவார்கள்.

இதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புப் பெருகும். நாடு நலம்பெறும்.

அம்மா-அப்பா என்பது அம்மா-அம்மா அல்லது அப்பா-அப்பா என்று மாறும்.

இப்போதைக்கு கற்பனைக்குதிரை இவ்வளவு தூரம்தான் ஓடியது. உங்கள் குதிரைகளையும் தட்டிவிடுங்கள்.

Advertisements

Comments

1. காசி - Monday February 16, 2004

என்ன கலரில் முடி, முழி வேணும், என்ன உயரம், எடை எல்லாம் வேணும்னு ஆன்லைனில் பார்த்து ஆர்டர் பண்ணலாம். அப்போ வைரஸ் தாக்கி, மான்ஸ்டர் பிறக்கலாம். வலையில் ஆர்டர் பண்ணிப் பிறந்த பெண்ணுக்கு ‘வலைப்பூ’ன்னு பேர் வைக்கலாம். ஆஃப்ஷோரில் பெத்துக்குடுத்தா அந்தக் குழந்தைக்கு கவர்மென்ட் வேலை கிடையாதுன்னு சட்டம் கொண்டுவரலாம்.

2. Padma Arvind - Friday February 20, 2004

advancement in science has created a new proble. Parents decide when they want to have a baby. If they get old, technolgy helps them in purchasing sperms from the bank. Now a days women also sell eggs. A college student, who scores A in all subjects, beautiful, and also good in sports can get paid upto $50,000 and paid vacation. As the college tution fees are very high, many women fall to these advertisements. I saw such advertisement from an ethnic family too.There is no emotional attachment and no concern on STDs etc. Very soon we will reach a stage where we can decide on sperms, and eggs and hire women to implant the embryos. The world will have generation of all talented, athletic kids with interesting traits!! (people will go crazy to study the genetic disorders)


Sorry comments are closed for this entry

%d bloggers like this: