jump to navigation

தூய்மையெனப்படுவது Monday February 9, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மனைவி: வீடா இது? எப்பவும் ஒரே குப்பையா கெடக்கு, எத்தன தடவதான் சுத்தம் பண்றது? யாருக்கும் பொறுப்புங்கறதே இல்ல. எதுவும் வச்ச எடத்துல இருக்கிறதில்ல. கண்டதையும் கண்ட எடத்துல போட வேண்டியது.

கணவன்: ஏம்மா இப்டி அலுத்துக்கிற? சுத்தம் பண்ணினா எப்டியும் குப்பையாத்தான் ஆவப்போவுது. எதாவது வேணும்னா ஒவ்வொரு தடவையும் பீரோவ தொறந்து தொறந்து எடுக்க முடியுமா? டேபிள் மேலயோ, சோஃபா மேலயோ கெடந்தா டக்குன்னு எடுத்துக்கலாமில்ல?

மனைவி: அது சரி. சாயந்தரம் வரப்போற உங்க நண்பர் என்ன நெனைப்பார்? நான் வெறுமனே மெகா சீரியல் பாத்துக்கிட்டு வீட்ட கவனிக்காம இருக்கேன்னு நெனைக்க மாட்டாரா? அவர விடுங்க, அவர் மனைவி என்ன நெனைப்பாங்க? என்ன பண்ணுவீங்களோ தெரியாது, இன்னும் ரெண்டு மணி நேரத்துல எல்லாம் சுத்தமா இருக்கணும் சொல்லிட்டேன்.

கணவன்: ப்பூ..இவ்ளோதானா? பாரு அசத்திடறேன். அதுக்கு முன்னாடி கொஞ்சம் வெளில போயிட்டு வந்துடறேன்.

நண்பர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் திரும்புகிறார். கையில் ஏதோ கொண்டு வருகிறார். உள்ளே நுழையும்போதே மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.

அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. டீப்பாய்(Tea table) மேலே இருந்தவற்றில் சிலதை எடுத்துவிட்டு கையிலிருந்ததைப் பிரித்து வைக்கிறார். சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு கோணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறார். முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை.

இருக்காதா பின்னே, அதிலுள்ளது எவ்வளவு தெளிவாகத் தெரிகிறது பாருங்கள்.

Our house was clean last week… sorry you missed it!

Advertisements

Comments

1. பிரபு ராஜதுரை - Monday February 9, 2004

????

ஆமாம் டீப்பாய் ஆங்கில வார்த்தைதானேஎ…அதை டீ டேபிள் என்று மொழிபெயர்க்க வேண்டுமா?

2. நவன் - Monday February 9, 2004

அது எந்தக் கடையிலெ கிடைக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

3. பரி - Tuesday February 10, 2004

பிரபு: டீப்பாய் எல்லாருக்கும் தெரியுமாங்ற சந்தேகத்லதான் அப்டி போட்டேன்

நவன்: அது ஸ்பெஷல் டெலிவரிலதான் கெடைக்கும் 🙂

(ஒரு லோக்கல் antique ஸ்டோர்ல பாத்தேன்)


Sorry comments are closed for this entry

%d bloggers like this: