jump to navigation

இந்த வார ஆ.வி Sunday February 1, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஹாய் மதன்:

கே: எழுதும்போது பேனாவின் பின்புறத்தில் சிறிது கனமான பொருளைப் பொருத்தினால் எழுத்து அழகாக வருவதைப் பார்த்தீர்களா?

பதில்: எனக்குத் தெரிந்தவரை, எழுதும் போது பேனாவின் பின்பக்கம் இருக்க வேண்டிய கனமான ஒரே பொருள் – மூளை!

—-

மதனின் நகைச்சுவை உணர்வு அபாரமானது. அவரது ‘மதன் ஜோக்ஸ்’ கார்ட்டூன் புத்தகங்களை வாங்கிப் பாருங்கள், ஒரே சிரிப்பு வெடியாக இருக்கும்.

அம்பேத்கார் பொன்மொழிகள்:

ஒரு தலைவனின் கருத்துக்களையும், கொள்கைகளையும் எவ்வளவு

வேண்டுமானாலும் புகழலாம். ஆனால், அத்தகைய தலைவர்களையே கடவுள் அவதாரமாகக் கருதி அவரின் கொள்கைகளை கடவுள் வாக்காகக் கருதுவது தவறு. முன்னது எந்த ஆபத்தையும் உருவாக்காது. ஆனால், பின்னது பொல்லாத பெரும் கேடு உருவாக்கும்.


——–

இது ஏதோ அரசியலுக்கு மட்டும் சொன்னது மாதிரி இருந்தாலும், எல்லாத்துறைக்கும் பொருந்தும்.

எல்லா சாமானியர்களைப் போலவும் எனக்கும் பல துறைகளில் பல தலைவர்களை/முன்னோடிகளைப் பிடிக்கும். பிடிக்கும் அவ்வளவே.

கற்றதும் பெற்றதும்:

தமிழ்நாட்டுத் தமிழர்களில்தான் வசிஷ்டர்களைவிட நக்கீரர்கள் அதிகம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். புலம்பெயர்ந்த தமிழர்களும் அவ்வாறே!

தமிழர்களில் இப்படி ஒரு பாகுபாடு எந்தக் காலத்தில் வந்தது என்று தெரியாது. ஒரு (தற்காலிக)புலம்பெயர்ந்த தமிழன் என்ற வகையில் இந்தக் கேலிப்பேச்சைப் படிக்கும்போது வெறுப்பு வந்தது என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

மேலும் அதே கட்டுரையில் இணையம் வழி பெண் பார்த்தலை பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல எழுதியிருக்கிறார். இதெல்லாம் நடக்க ஆரம்பித்து மாமாங்கம் ஆகிறது என்று யாரேனும் சொன்னால்… அட, சை.. சொல்லியாவது மண்ணாங்கட்டியாவது. விடுங்கள்.

கொசுறு: ‘ரொரன்ரோ’, ‘விதந்து’ – இவைபற்றி ஈழ நண்பர்கள் கருத்துகளை அறிய ஆவல்.

Advertisements

Comments

1. காசி - Sunday February 1, 2004

//’ரொரன்ரோ’, ‘விதந்து’ – இவைபற்றி ஈழ நண்பர்கள் கருத்துகளை அறிய ஆவல்.// ±ýɼ¡ þó¾ Á¡¾¢Ã¢ ¡Õõ þôÀ ¬ÃõÀ¢ì¸È¾¢ø¨Ä§ÂýÛ ¿¢¨Éý. À⡧Ã, ¯ÁìÌò ¦¾Ã¢Ôõ, ¦¾Ã¢ïÍðÎ º£ñÊ Å¢Î¸¢È£÷ 😉

2. நவன் - Monday February 2, 2004

ஆனந்த விகடன்ல நான் ரெகுலரா படிச்ச ரெண்டே விசயம் மதன் கேள்வி பதிலும் கற்றதும் பெற்றதும்.

3. Pavithra - Monday February 2, 2004

Àâ…ÒÐ çÎ ¿øÄ¡ ¸£Ð.:-)

4. பிரபு ராஜதுரை - Tuesday February 3, 2004

À¾¢¨Ä ¨ÅòÐ §¾÷ó¦¾Îò¾ §¸ûÅ¢ §À¡Ä þÕ츢ÈÐ….¾Á¢Æ¸ ¿ì¸£Ã÷¸û Å⨺¢ø ´Õ ±ñ½¢ì¨¸ ÜÊ¡¢üÚ..¾¢Õô¾¢Â¡, ÒÄõ ¦ÀÂ÷ó¾ÅÕìÌ:-)


Sorry comments are closed for this entry

%d bloggers like this: