jump to navigation

நாடகமெல்லாம் கண்டேன் Thursday January 29, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஈராக் போர் சம்பந்தப்பட்ட இரண்டு நாடகங்கள், வட அட்லாண்டிக் சமுத்திரத்தின் இரண்டு பக்கங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லவே இல்லை என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார், ஈராக்கில் பேரழிவு ஆயுந்தங்களை சல்லடை போட்டுத் தேடிய குழுவின் முன்னாள் தலைவர் டேவிட் கே. இதைக்கேட்டு ஜார்ஜ் புஷ், சதாம் உசேன் எலிப்பொந்துக்குள் ஒளிந்திருந்த மாதிரி (என்று சொல்லப்பட்ட) எங்கோ ஒளிந்திருக்கிறார்.

டோனி பிளேர், ஓய்வு பெற்ற நீதிபதி ஹட்டன் அறிக்கையால் நாற்காலிப் பிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் பிபிசி என்ற பாரம்பரியம் மிக்க, நம்பத்தகுந்த நடுநிலைமையுடன் செய்திகளைத்தரும் செய்தி நிறுவனத்தின் ஹட்டன் என்ற தனி மனிதரின் அறிக்கையால் ஆட்டம் கண்டுள்ளது.

ஹட்டன் அறிக்கையைப் படித்தால் நடுநிலைமையுடன் விசாரணை செய்திருக்கிறாரா என்ற சந்தேகம், இந்த விவகாரத்தை கவனித்து வருபவர்களுக்கு கண்டிப்பாக எழும்.

தனிமனித விசாரணைகளின் விசேஷ குணம் இது என்று நினைக்கிறேன்.

மேற்கு அட்லாண்டிக் நாடகம்

கிழக்கு அட்லாண்டிக் நாடகம்

Advertisements

Comments

1. பத்ரி - Thursday January 29, 2004

பிபிசி நிச்சயம் தவறு செய்துள்ளது. அவர்களது current affairs நிகழ்ச்சி ஒன்றிலேயே அதுபற்றிப் பேசப்பட்டுள்ளது. இப்பொழுதும் கூட ஹட்டன் ரிப்போர்ட் கண்துடைப்பு என்று சொல்லிவிட முடியாது. அவர் சொல்வதெல்லாம் பிளேர் வேண்டுமென்றே பொய்யாக, நாட்டையும், பாராளுமன்றத்தையும் ஏமாற்றினார் என்பது தவறான கருத்து என்பதே.

ஆனாலும் பிளேர் அடுத்த தேர்தலில் காலி என்றே தோன்றுகிறது. உங்கள் வேலை பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் புஷ்ஷுக்கு எதிராக ஓட்டுப்போட வைக்க வேண்டியது!

2. பரி - Friday January 30, 2004

பிபிசி தவறு செய்துள்ளது உண்மைதான். விசாரணை செய்திருக்க வேண்டும்.

ஹட்டன் பிபிசி-ஐ கழுத்தைப்பிடித்த அளவுக்கு அரசாங்கக் கழுத்தைப் பிடிக்கவில்லை. குறிப்பாக intelligence report பற்றிச் சொல்லியிருப்பது சிரிப்பையும் அதே சமயம் கோபத்தையும் தரக்கூடியது.

3. செல்வராஜ் - Friday January 30, 2004

"அந்த ஆயுதங்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஈராக் மீது படையெடுத்தது சரியானது என்று உறுதியாய் நம்புகிறேன்" என்கிறாராம் புஷ் !! தெரிந்தே செய்த தவறைத் தவறு என்று எப்படி ஒத்துக் கொள்வார் ?

CIA மீது பழி போடும் படலம் தொடங்கியிருக்கிறது ! ஏதோ அவர்கள் தான் தவறான தகவல்கள் கொடுத்துவிட்டார்கள் என்று கதை கட்டப் பார்க்கிறார்கள். ஹ்ம்ம்…

4. பிரபு ராஜதுரை - Friday January 30, 2004

±ýÛ¨¼Â ÅÕò¾¦ÁøÄ¡õ, þùÅÇ× À½õ þ¾üÌ ¦ºÄ× ¦ºö¾¾üÌ, ¦ºöžüÌ À¾¢Ä¡¸…«¨¾ ¨ÅòÐ º¾¡ÓìÌ ¬¨º ¸¡ðÊ¢Õì¸ ÓÊ¡¾¡? «øÄÐ ¾£÷ò¾¡ÅÐ ¸ðÊ¢Õì¸Ä¡§Á!

5. பிரபு ராஜதுரை - Friday January 30, 2004

«¼, Àâ ¸Äô¨À¢ø ¾¢Š¸¢ ±ØòÐÕÅ¢ø ¨¼ô ¦ºö§¾ý. ¿ýÈ¡¸ ¦¾Ã¢¸¢È§¾! ¯í¸ÙìÌ ¦¾Ã¢¸¢È¾¡?

6. பிரபு ராஜதுரை - Friday January 30, 2004

இது யூனிகோடு

7. பாலா - Sunday February 1, 2004

சரியாக சொன்னீர்கள் பரி.

8. பரி - Sunday February 1, 2004

பிரபு,

திஸ்கி எனக்குத் தெரியவில்லை 😦

டேய் பாலா,

இங்க ஃபார்மாலிட்டீஸ் வேணாம் 🙂

வாடா, போடா போதும்.

9. பிரபு ராஜதுரை - Tuesday February 3, 2004

எனக்கு இரண்டும் தெரிகிறது…சம்யத்தில் போங்கடா…உங்க கம்பியூட்டரும் நீங்களும்னு இருக்கும்:-)


Sorry comments are closed for this entry

%d bloggers like this: