jump to navigation

போடுங்கம்மா ஓட்டு Tuesday January 27, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இது அமெரிக்காவில் தேர்தல் ஆண்டு. என்னது வருஷம் முழுக்க தேர்தலா? ஆமாம். போன வருஷம் நவம்பரிலேயே ஆரம்பித்து இப்போது சூடுபிடித்திருக்கிறது. வரும் நவம்பர் மாதம் வரை இது தொடரும் ஒரு மினி சீரியல்.

எந்த ஊடகத்தைத் திறந்தாலும் ஜான் கெர்ரி, ஹாவர்ட் டீன், ஜான் எட்வர்ட்ஸ், வெஸ்லி கிளார்க் என்ற பெயர்கள் அடிபடும். இவர்களில் ஒருவர் மட்டுமே அடிவாங்காமல் ஜார்ஜ் புஷ் உடன் மல்லுக்கட்டுவார்.

அமெரிக்கத் தேர்தல் முறை, எனக்கு ஒரு புரியாத புதிர். படித்து தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தும் நேரமிருப்பதில்லை. நேரமிருக்கும்போது சோம்பலில்லாமலிருப்பதில்லை (14 எழுத்து!).

எங்கோ யாரோ சொல்லக் கேட்டது இது. கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும், சரியாக ஞாபகமில்லை.

‘American elections system is so perfect and organized, even fools can implement it’

அப்டின்னா இப்போ உள்ளவங்கள்லாம் அவங்கதானா?-ன்னு யாருக்கும் குதர்க்கமா கேட்கத் தோணும்.

எனக்குப் புரியாதவை.

-வருஷம் முழுக்க தேர்தல் நடத்திக்கிட்டே இருந்தா அதனால் ஆகும் பணவிரயம் எவ்வளவு? இது அவசியமா?

-அதிபர் பதவிக்காலம் வெறும் நான்காண்டுகள் மட்டுமே. ஏற்கனவே பதவியிலிருப்பவர், இரண்டாம் முறையாக போட்டியிட நினைத்தால், கடைசி ஓராண்டு முழுவதும் தேர்தலில் கணிசமான நேரம் செலவிட வேண்டியிருக்கும்போது மற்ற முக்கிய காரியங்களை எப்படி கவனிக்க முடியும்?

(கொசுறு: ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மீண்டும் போட்டியிட முடியாது. இதில் மாற்றம் வேண்டும் என்று, அதாவது சில ஆண்டுகள் இடைவெளி விட்டு போட்டியிடலாம் என்ற மாற்றத்தை கொண்டுவர வேண்டும் பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக முன்பு படித்த ஞாபகம்.)

-இது மிக முக்கியமானது. Poll Numbers என்று சொல்லப்படும் கருத்துக்கணிப்பை எதை வைத்து கணக்கிடுகிறார்கள்?

அமெரிக்கத் தேர்தல் முறை பற்றித் தெரிந்தவர்கள் எழுதலாம். இல்லையேல் நானே ஒரு அரைவேக்காட்டுக் கட்டுரை எழுதும் அபாயம் உள்ளது.



‘போடுங்கம்மா ஓட்டு’

‘____ சின்னத்தப் பாத்து’

Comments

1. பிரபு ராஜதுரை - Wednesday January 28, 2004

பரி,

அதிபர் இரண்டு முறைகளுக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததே ஜனாநாயக கட்சிக்காரர்கள்…பின்னர் கிளிண்டன் விஷயத்தில் தவித்ததும் அவர்கள்தான். ஆனால், தலை மாற வேண்டும். அப்போதுதான் புதிய புதிய ஐடியாக்கள் நிறைவேறும். இல்லை ஸ்டாக்னேட் ஆகிவிடும். நரசிம்மராவ் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவில் பெரிய மாற்றங்கள் தோன்றியது…புது விளக்குமாறு நன்றாக பெருக்கும்

2. பாலாஜி - Wednesday January 28, 2004

ஒரு அடர்த்தியான கட்டுரைக்கான விஷயங்களை வைத்துக் கொண்டு எழுதாமல் இருப்பது தவறு. நம்ம ஊரில் எம்பி.க்களை விலைக்கு வாங்குவதையும் இங்கு ஆண்டு முழுவதும் செலவழிப்பதையும் சமன் செய்து அரசியல் பதிவு ஒன்று செய்யுங்க ப்ளீஸ்…

3. பத்ரி - Wednesday January 28, 2004

நான் குமுதம் ரிப்போர்டருக்கு ஒரு குட்டிக் கட்டுரை எழுதி அனுப்பியுள்ளேன் (இணையத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் ஜான் கெர்ரியும், ஹோவர்ட் டீனும் முக்கியமாக) என்று. ஒரு வாரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, பிரசுரமானாலும், ஆகாவிட்டாலும், வலைப்பதிவில் போடுகிறேன்.

4. பரி - Thursday January 29, 2004

பாலாஜி,

நுனிப்புல் மேய இஷ்டமில்லை. படித்துவிட்டு எழுதுகிறேன்.

பத்ரி,

ரிப்போர்ட்டரின் எல்லா பாகங்களும் வலையேற்றப்படுகின்றனவா எனத்தெரியவில்லை. எதற்கும் உங்கள் பதிவில் இடுங்கள்.

ஹோவார்ட் டீனின் அயோவா காட்டுக்கத்தல் இங்கே அநியாயத்துக்குப் பிரபலம்

யாஆஆஆஆஆஅ :-))

5. பத்ரி - Saturday January 31, 2004

http://thoughtsintamil.blog

இதன்வழியே போய் குமுதம் ரிப்போர்டர் கட்டுரையைப் பிடித்து விடுங்கள்.


Sorry comments are closed for this entry