jump to navigation

சிறு துரும்பு Friday January 23, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

தொழில்நுட்பம் தெரிந்த தமிழார்வலர்கள் புண்ணியத்தில் இதோ இங்கே நான் கிறுக்க நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். பலருக்கு கணினியில் தமிழ் என்றாலே இன்னும் ஆச்சரியம்தான். குறிப்பாக எழுதுவது.

‘கணினியில் தமிழ்’ – என்று மாநாடு நடத்தலாம். மக்கள் வருவார்களா என்பது மற்ற நிகழ்ச்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பை வைத்துப் பார்த்து ஓரளவு யூகிக்கக் கூடிய ஒன்றுதான்.

சொல்லிக்கொள்ளும்படி கூட்டம் கூடும் ஒரு நிகழ்ச்சியில் பிட் நோட்டீஸ் மாதிரி ஒரு பேப்பரைக் கொடுத்தால் என்ன?

ஆர்வமிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களே? இந்த நினைப்பில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்தப் படம்.

ஏதோ என்னால் முடிந்தது.

click to enlarge

Advertisements

Comments

1. பாலாஜி - Friday January 23, 2004

நன்றாக உள்ளது. கோவிலில் கொடுத்துப் பார்க்கிறேன்… இன்னும் கொஞ்சம் clutter குறைந்த ஒன்றும் தர இயலுமா? நன்றி. நன்றி…

2. காசி - Friday January 23, 2004

நல்ல முயற்சி. ஏதோ ரெண்டு பேரும் விளயாடின மாதிரி இருந்தது, இப்போது வினையாகிவிட்டது :-))

3. பிரபு ராஜதுரை - Friday January 23, 2004

என்ன் சொல்கிறீர்கள் பரி, என்னைப் போல மிட்டாய்க் கடையில் வேடிக்கை பார்க்கும் பட்டிக்காட்டான்களுக்கு புரிந்த மாதிரி எழுதுங்களேன். இந்த மாதிரி புது வீடு அனைவௌம் கட்ட முடியுமா?

4. பரி - Saturday January 24, 2004

பிரபு,

புது வூடு பற்றிக் கேட்கிறீர்களா? இது காசு கொடுத்து எனக்கான ஒரு domain-ஐ வாங்கியிருக்கிறேன்(காசி மாதிரி).

எல்லாரும் கட்ட முடியும். வெறும் $6 தான் -அதாவது அமெரிக்காவில் இருந்தால். இந்தியா பற்றித் தெரியவில்லை. வேண்டுமானால் விசாரித்துச் சொல்கிறேன்.

5. பத்ரி - Monday January 26, 2004

RSS ஓடை சுட்டியைக் கொடுக்க முடியுமா? உங்கள் பதிவை சரியாக கவனிக்க வசதியாக இருக்கும்.

6. காசி - Monday January 26, 2004

பரி, டெம்ப்ளேட்டின் தமிழில் ஒரு சிறு பிழை. அதை சரி செய்துவிடுங்கள். ‘எழுதியவர்:’-ஐ ‘எழுதியது’ என்று மாற்றவேண்டும்.

7. நவன் - Wednesday January 28, 2004

சீக்கிரம் இதே அளவுக்கு லினக்ஸில் முடிந்தால் நன்றாக இருக்கும்.

8. suratha - Thursday January 29, 2004

பரி

நாங்க என்ன எதிர்க்கட்சியா?

கொன்வேட்டர் பற்றி ஒரு தொடுப்பையும் உங்க பிட் நோட்டீஸில: காணோம்…..:)

9. பரி - Thursday January 29, 2004

சுரதா,

இது தமிழில் எழுதுவதை அறிமுகப்படுத்தும் முயற்சி. இப்பவே திஸ்கி, யுனிகோட்-னு சொன்னா பயந்து ஓடிடுவாங்க 🙂

வலை வீசுகிறேன். விழும் மீன்களை வறுத்தெடுத்துட வேண்டியதுதான் :-))

10. யூனிகோட் - Wednesday February 25, 2004

இது யூனிகோடாவென்று பார்க்கிறேன்.

11. யூனிகோட் - Wednesday February 25, 2004

இது நானேதான்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: